185-வது பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாள்

 



185-வது பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாள்:

(ஜனனம்: 17-02-1836

ஜீவசமாதி: 16-08-1886 – தமது 50-வது வயதில்)

 

காதர் சடோப்பாத்யாய் என்பது தான் ராமகிருஷ்ணரின் சிறுவயதுப் பெயர். ஹூக்ளியில் உள்ள காமர்புகுர் கிராமத்தில் ஒரு அந்தணர் குலத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே கல்யாணம். அவரது மனைவியை காளியின் அம்சமாகவே கருதி வழிபட்டார்.

 

அவர் கிராமப் பள்ளியில் சம்ஸ்கிருதம் பயில அனுப்பியும் அதில் அவருக்கு நாட்டமில்லை. களிமண்ணில் பல இந்து மதக் கடவுள்களின் சிலைகளைச் செய்து வழிபடுவதில் ஆர்வம் கொண்டார். மேலும் பூஜாரிகள் – முனிவர்கள் ஆகியவர்களிடம் புராண இதிகாச கதைகளை கேட்டு ஆனந்திப்பிப்பார். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்கி தம்மை மறந்த நிலைக்குச் சென்று விடுவார். தக்ஷிணேஸ்வர காளி கோயில் பூஜாரியாகச் சேர்ந்தார். இந்தக் கோயில் ராணி ராஷ்மோனி என்பவரால் 1855 ஆண்டு நிருவப்பட்டதாகும். ராணி கீழ் ஜாதி வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தக் கோயிலுக்கு பூஜாரி கிடைப்பது சிரமமாக இருந்தது. காளி கோயிலுக்கு ராம்குமார் என்பவர் தலைமை பூஜாரியாகவும், ராமகிருஷ்ணர் அவருக்கு உதவியாளராகவும் நியமிக்கப்பட்டார்கள். ராம்குமார் 1856-ம் ஆண்டு இறந்த பிறகு காளிகோயிலின் முழுப் பொறுப்பும் ராமகிருஷ்ணனிரம் ஒப்படைக்கப்பட்டது. 1865-ம் ஆண்டு ராமகிருஷ்ணாவுக்கு சன்யாச தீட்சையை தோத்தாபுரி என்ற சாமியார் அளித்தார். அவர் ராமகிருஷ்ணருக்கு அத்வைத ஹிந்து தத்துவம், பிரம்மத்தின் தாத்பர்யம் போன்ற உயர் நிலை ஆன்மீக போதனைகளைக் கற்பித்தார். விவேகாந்தர் ராமகிருஷ்ணரின் சிஷ்யராக வந்து தமது குருவின் நினைவாக ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் என்ற ஒரு பெரிய ஸ்தாபனத்தையும், பேலூர் மடத்தையும் கட்டி ஸ்ரீராமகிருஷ்ணரின் புகழ் உலகம் முழுவதும் பரவக் காரண கர்த்தாவானார்.

வாய்மை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு மலர் தூவி பிரார்த்தித்து, அவர் அருள் அனைவருக்கும் கிட்டப் பிரார்த்திக்கிறோம்.

 

 



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017