பாரத தேசத்தின் தவப் புதல்வன் ஸ்வாமி விவேகானந்தரின் 158-வது வருடப் பிறந்த நாள் – 12 – 01- 2021
(பிறப்பு: 12 – 01
– 1863; இறப்பு: 04
– 07 – 1902)
39-வருடங்களே உயிர்வாழ்ந்த
சந்நியாசி உலகம் சுற்றி, ஹிந்து மதத்தின் உன்னதத்தை உலகத்திற்கு உணர்த்தியவர். அத்துடன்
சோர்ந்து, பலமிழந்து, அடிமைத் தனமான மன நிலையில் உழன்று வாழும் இந்திய மக்களை – அதிலும்
குறிப்பாக இளைஞர்களை ‘விழுமின், எழுமின் ! அன்னை பாரதத்தாயின் தளையினைக் களைய வீரம்
கொள்வீர்’ என்று தாய்த் திருநாட்டின் அடிமைத் துயரத்தைத் துடைக்க முரசு கொட்டி முழங்கிய
வீரனவன்.
‘பலமே வாழ்வு, பலவீனமே
மரணம்’ என்று முழங்கி உறங்கிய பாரத மக்களை எழுப்பி, பலம் பெறச் செய்து, சுதந்திர உணர்வுகளை
ஊட்டிய உத்தம வீரரனவன்.
“நீங்கள்
பாரத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரின் நுால்களைப் படியுங்கள்.
அவரிடத்தில் எல்லாமே ஆக்கபூர்வமானவை, அழிவை நோக்கி எடுத்துச் செல்லும் எதுவும் அவரிடமே
கிடையாது. மனிதன் முழுமையான ஆண்மை உருக்கொண்டு விழித்து எழுவதையே விவேகானந்தரின் நற்செய்திகள்
கற்பிக்கின்றன. ஆகவே தான் அவருடைய உபதேசத்தால் நம் இளைஞர்கள் துாண்டப்பட்டு, தொண்டின்
மூலமும், தியாகத்தின் மூலமும் விடுதலைக்கான வழிகளில் பணிபுரிந்தனர்,” என்றார் ரவீந்திரநாத்
தாகூர்.
வாய்மை
ஸ்வாமி விவேகாந்தரை அவரது புன்னிய பிறந்த நாளில் நினைவு கூர்ந்து மலர் தூவி வணங்கி
துதிக்கிறது.
Comments