சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கியநகர்வு
தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல் நாள் உத்தரயணத்தின் துவக்கம். அது ஆனி
மாதம் முடிய இருக்கும். பிறகு ஆடி மாதம்முதல் மார்கழி முடிய தட்சிணாயண காலமாகும்.
உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின்
முடிவும் தை பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
மழைக்குக் காரணமானவன் இந்திரனும், அவனுடைய சகோதரன் உபேந்திரனமுமாகும்.
மேலும் மழையுடன் வெயிலும் பயிர் விளைவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் உழவு
மாடுகளும் உழவர்களுக்கு உறுதுணையாக உழைக்கின்றன.
ஆகையால் தான் இந்த பொங்கலின் போது இந்திரனைப் போகியின் போதும், சூரியனை
பொங்கலின் போதும், உழவு மாடுகளை மாட்டுப் பொங்கலின் போதும் தனித்தனியாக முக்கியத்துவம்
கொடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள் தமிழக மக்கள்.
பொங்கலில்
பால் பொங்கும் போது, ‘பொங்கலோ, பொங்கல்’ என்று குதூகலமாக அனைவரும் ஒன்றாக கோஷிப்பது
அனத்து தேவதைகளுக்கும், உழவு மாடுகளுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும். மேலும், பால் பொங்குவதைப் போல், நம் வாழ்வும் மகிழ்ச்சியால்
பொங்கி இனிமையாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்திப்பதும் இந்தத் திருநாட்களின் சிறப்பு
அம்சமாகும்.
வாய்மை
அன்பர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கலில் பால் பொங்குவதைப் போல் வாழ்வு
சிறக்க இந்த பொங்கல் நல் நாளில் ஆண்டவனைப் பிரார்த்தித்து வேண்டுகிறோம். பொங்கலோ, பொங்கல்
!
Comments