பெங்களூருவில் முஸ்லீம் தீவிரவாதப் பிண்ணனியில் தலைவிரித்தாடிய பயங்கர வன்முறைகள்

 

11-08-2020 செவ்வாய்க் கிழமை பெங்களூருவின் ஒரு பெரிய கரும்புள்ளி நாளாகும்.

அந்த நாளில் முஸ்லீம் கலவரக்காரர்களால் இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களான டி.ஜே. ஹல்ளி & கே.ஜி. ஹல்ளி தீயிட்டும், சூரையாடப்பட்டும் உள்ளன. முஸ்லீம் கலவரக்காரர்கள் போலீஸ் ஸ்டேஷன் களில் நிறுத்தப்பட்ட போலீஸ் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், பல போலீஸ் கோப்புக்கள், அந்த வீதியில் உள்ள வீடுகள் வெளியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் கார்கள் என்று 200-க்கும் மேலானவைகள் எரிக்கப்பட்டு எலுப்புக் கூடாகக் காட்சி அளித்து, அவர்களின் வன்முறைகளுக்கு அத்தாட்சியாக உள்ளன.

முஸ்லீம்களால் புனிதமாக மதிக்கப்படும் நபிகள் நாயகத்தைப் பற்றி  டிவீட் செய்ததை பி. நவீன் குமார்   வயது 35 புலிகேசின் நகர் எம்.எல்.. அகண்ட ஸ்ரீவாச மூர்த்தியின் சகோதரி மகன் - மறு டிவீட் செய்தது தான் இந்த வன்முறைக்கு மூல காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆகையால், முஸ்லீம் வன்முறையாளர்கள் காவல் பைரசந்திராவில் உள்ள அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தியின் வீட்டையும், நவீன் வீட்டையும் தீயிட்டும் சூரையாடியும் மிகுந்த சேதங்களை உண்டாக்கி விட்டார்கள். அதிலும் ஸ்ரீனிவாச மூர்த்தியின் வீடு முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அதிர்ஷ்ட வசமாக அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தியின் வீட்டில் அப்போது அவர் இல்லாததால், அவர் உயிர் பிழைத்தார். அவரது வீட்டுக் காரும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.  அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தி  “விலையுயர்ந்த பட்டுப் புடவைகள், நகைகள் காணவில்லை” என்று கூறுகிறார். நவீன் வீட்டில் இருந்தவர்கள் சுவரேறி பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்து தப்பித்துள்ளார்கள்.  அந்த வீட்டில் நிறுத்தப்பட்ட காரும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, உருக்குலைந்து போய்விட்டது.

இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 200 பேர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.  இந்தக் கலவரத்தில் சுமார் 1000 பேர்களுக்கு மேல் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  சுமார் 30 போலீஸ் காரர்களுடன், சுமார் 60 பொதுஜனங்களும் காயமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கலவரத்தில் பெட்ரோல் & மண்ணெண்னை கேன்கள், கத்தி, கோடரி, கற்கள், கம்பு என்று பல ஆயுதங்களை  அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.  இந்த ஆயுதங்களை அவர்கள் தயார் நிலையில் பதுக்கி வைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் மிகவும் குறிகிய கால நேரத்தில் கலவரத்தில் பயன்படுத்தி இருக்க  முடியாது. ஆகையால் இந்தக் கலவரம் திட்டமிட்டே  செயல்படுத்தப்பட்டதாக கணிக்கப் பல ஆதாரங்கள் உள்ளன.

 நவீன் அன்று அதி காலையே அதாவது டிவீட் செய்த 10 மணிக்குள்ளாகவே கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான்.  

டி.ஜே. ஹல்லி போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்ட போது, நிலைமை கட்டுக் கடங்காததால் அங்கு நடந்த  துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர். வஜிட் கான் (20), யாசீன் பாஷா (20) என்று இருவர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆனால் மூன்றாவது நபர் உடல் அடையாளம் காண மருத்துவ மனையின்  பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறையின் பின்னணியில் மூளையாக SDPI என்ற தீவிரவாத இயக்கம் (இது SIMI & Indian Mujahideen என்ற தீவிர வாத இயக்கங்கள் தடைசெய்யப்பட்டவுடன் மறு அவதாரம் எடுத்த இயக்கம்) செயல்பட்டுள்ளது என்று தெரியவருவதால், அந்தக் கோணத்திலும் இந்தக் கலவரம் விசாரிக்கப்பட உள்ளது. முக்கியமாக கலவரத்தை உண்டாக்க முஸ்லீம் இளஞர்களை வரவழைத்தவர்கள் என்று மூன்று முஸ்லீம் தலைவர்கள் அறியப்பட்டுள்ளனர். அவர்கள் முஸாமில் பாஷா, ஜாபர் & கலீம் பாஷா ஆவார்கள்.  இதில் கூறப்பட்ட கலீம் பாஷா, நகவாரா இர்ஷாத் பேகம் என்ற காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர். அவர் 7-வது குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலீம் பாஷா முந்தைய கர்நாடகாவின் போலீஸ் மந்திரி கே.ஜே.ஜார்ஜின் நம்பிக்கைக்குப் பாத்திரமான காங்கிரஸ் தலைவராக வலம் வந்தவர். அத்துடன் முந்தைய முதல் மந்திரி சித்தராமையாவுடனும் நெருங்கிய தொடர்புடையவர்.  

டி.ஜே.ஹல்லி, கே.ஜி. ஹல்லி இடங்களில் SDPI என்ற முஸ்லீம் தீவிரவாத அமைப்பை ஆதரிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் – 16-21 வயதினர் – அதிகமாக உள்ளனர். அவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். இது தவிர நான்கு குழுக்களாக SDPI தலைவர்களின் கீழ் செயல்படுகின்றனர். ஆகையால் இவர்கள் எந்த வன்முறைக்கும் தயாராக உள்ளவர்கள். குறுகிய காலத்தில் இவர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். இந்த உண்மைகள் விசாரணையில் வெளிவரும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ‘Allah-hu-Akbar’ and ‘Nara-e-Taqbeer’என்று கலவரக்காரர்கள் கோஷமிட்டபடி தீயிட்டும், கல்லெரிந்தும், வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்பதும் தெரியவருகிறது. சி.சி.டி.வி. கேமராவில் முஸ்லீம் தலைவர் முஸ்லீம் கலவரக்காரர்களுக்கு கலவரம் நடப்பதற்கு முன்பாகவே பணம் பட்டுவாடா செய்யும் காட்சிகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கைதாகிய கலவர இளைஞர்களில் பலர் போதையோடு இருந்தார்கள் என்று போலீஸ் தெரிவிக்கிறது. முஸ்லீம் தீவிர வாதத்திற்குப் பணமே இந்தப் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வருகிறது என்பது உலகரிந்த விஷயம்.

அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தி ஒதுக்கப்பட்ட தனித் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் காங்கிரஸ் முஸ்லீம் ஓட்டு வங்கி அரசியலால் தங்கள் எம்.எல்.ஏ.வை காப்பாற்றத் தவறி விட்டது.

‘ஸ்ரீனிவாச மூர்த்தியை தலித் என்று பிஜேபி அரசியல் செய்கிறது. ஹிந்துத்வா என்ற கோஷம் மாறிவிட்டதா?’ என்று சித்தராமையா கேலியாக டிவிட்டில் கேள்வி எழுப்பினாலும், ஸ்ரீனிவாச மூர்த்திக்கு ஆறுதலாக எந்த வார்த்தையும் கூறவில்லை. சித்தராமையா போல் இந்த ஸ்ரீனிவாச மூர்த்தியும், ஜனதா தளம் (செக்குலர்) – தேவ கவுடா கட்சி – யிலிருந்து காங்கிரசுக்குத் தாவி, புலகேசிநகர் எம்.எல்.ஏ.யாக 2008 ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 80,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முஸ்லீம் அதிகமுள்ள தொகுதியில் வென்றவர். இந்த தருணத்தில் சித்தராமையா கர்நாடக முதல் அமைச்சராக இருந்த போது நூற்றுக்கணக்கான PFI & SDPI நபர்களின் மேல் போட்ட போலீஸ் வழக்குகளை வாபஸ் வாங்கி விடுதலை செய்துள்ளார். அந்த சித்தராமையா அரசாங்கத்தின் ஆதரவான நடவடிக்கைதான் இந்தக் கலவரத்திற்குக் காரணம் என்று பி.ஜே.பி. குற்றம் சாட்டுகிறது.

ராஹுல் வாயனாடு எம்.பி.யாக – அங்கு SDPI-யின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றதால் – இந்த வன்முறையைக் கண்டிக்க வில்லை. இதனால் ராஹுல் அரசியல் தர்மம் – நாகரீகம் ஆகியவைகளை மதிக்கும் குணம் இல்லாதவர் என்பது நிரூபணமாகி உள்ளது. பூணூல் போட்ட பிராம்மணன் என்றும், முஸ்லீம் மதச் சின்னமான குட்டை வட்ட குல்லாயை அணியும் செக்குலர்வாதி என்றும் சொல்லுவதை மக்கள் கேட்டு குழம்பிப் போய் ‘இந்த ஆள் நம்பத்தகுந்தவர் இல்லை’ என்ற முடிவிற்குத் தான் வரவேண்டி உள்ளது.

 இந்த துக்கரமான முஸ்லீம்களின் கலவரத்திலும் இரண்டு சம்பவங்கள் முஸ்லீம் சமூகத்திலும் தர்மவான்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அப்படிப்பட்டவர்கள் அதிகரிக்க SDPI – போன்ற தீவிரவாத இயக்கங்களிலிருந்து முஸ்லீம் மக்களை காப்பாற்றி, அவர்களின் பயங்களைப் போக்க வேண்டும்.



முதல் சம்பவம்: டி.ஜே.ஹல்லி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு முஸ்லீம் கலவரக்காரர்களால் தாக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக முஸ்லீம் இளைஞர்கள் அரணாக இருந்து காத்தார்கள். ஆனால் இது முஸ்லீம்களின் ஸ்டண்ட் என்று ஹிந்துக்கள் குற்றம் சாட்டினாலும், இந்தப் போலி மாற்றம் கூட பிறகு மத நல்லிணக்கணத்திற்கு உதவும் என்று நம்புவது நல்லது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. சாதாரண முஸ்லீம்கள் அதீத பயத்தின் காரணமாக தீவிரவாத அமைப்புக்கு எதிராகச் செயல்படப் பயப்படும் நிலையில் இந்தச் சிறிய கோயில் பாதுகாப்புக் கேடயத்தைப் பார்க்க வேண்டும்.

இரண்டாவது சம்பவம்: முஸ்லீம் சிறுபான்மையினர் அமைப்பைச் சேர்ந்த முஸ்லீம்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தியின் வீட்டிற்கு வந்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்றி உள்ளனர். ‘நான் எந்த பாகுபாடுமின்றி முஸ்லீம்களுடன் சகோதர மனப்பான்மையுடன் பழகி உள்ளேன். ஏன் அவர்கள் என் வீட்டைச் சூரையாடினர்?’ என்று அவர்களிடம் முறையிட்டுள்ளார். ‘நவீன் தவறு செய்திருந்தாலும், அவனைத் தண்டியுங்கள்’ என்றும் எம்.எல்.ஏ. கூறயுள்ளார்.  

அமைதி மார்க்கம் என்று தங்களை அடையாளம் காணும் இஸ்லாம் மதத்தவர்களுக்கு  இந்த வன்முறைகள் இழிவைத் தான் தரும். கலவரம் செய்பவர்கள் ‘அல்லாஹு அக்பர்’ என்று கோஷிப்பது கூடாது என்று உண்மையான இஸ்லாமியர்கள் சொல்லும் காலம் வந்தால் தான் உண்மையான செகுலரிசம் மலரும். அந்த நாள் மலர எல்லாம் வல்ல அல்லா இஸ்லாமியர்களுக்கு வழிகாட்டப் பிரார்த்திகிறோம். 

   


அடல்ஜியின் பார்லிமெண்ட் பேச்சு: இந்தியாவில் நடந்த 23 கலவரத்தில் 22 கலவரங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்பட்டது.  


இந்தியாவில் நடக்கும் கலவரங்களை யார் முதலில் ஆரம்பிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பார்லிமெண்டில் அடலின் ஆணித்தரமான பதில்.

பிவாண்டி, பம்பாய் தானே கலவரத்திற்குப் பின், அடல்ஜீ இந்திரா காந்திஜியின் உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒறுமைப்பாடு கவுன்சிலின் அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசினார். 

அந்த அறிக்கையின்படி நடந்த மொத்த 23 கலவரங்களில் 22 கலவரங்கள் சிறுபான்மைச் சமூகத்தினரால் நடத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையின் வாசகம் உள்ளது.

ஆனால் அந்த அறிக்கை இன்னும் மக்களுக்குத் தெரிய வெளியிடப்படவில்லை.




 


 




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017