முக்குணங்கள் என்றால் அவைகள் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் விளக்கம் சொல்கிறான். சதுர்வர்ணம் என்று கீதையில் சொல்லி இருப்பது நான்கு வர்ணம் – அதாவது நான்கு நிறம் என்பதைக் குறிக்கும் சொல்லாகும். அந்த நான்கு வர்ணங்களுக்கும் ஆணி வேர் முக்குணங்களாகும். அந்த மூன்று குணங்களையும் மூன்று நிறங்களாக உருவகப்படுத்தி அதன் தன்மையை வெளிப்படுத்துவார்கள். சத்துவ குணம் வெளுப்பு, ரஜோ குணம் – சிகப்பு; தமோ குணம் – கருப்பு. இந்த மூன்று குணங்களையும் முறையே – தூய்மை, வலிமை, எளிமை என்றும் வகுக்கலாம். பிருக்ரிதி என்ற இயற்கை பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் ஐந்து மூலப் பொருள்களான – காற்று, தீ, நீர், நிலம், ஈதர் ஆகியவைகளின் ஒருங்கிணைப்பால் உண்டானது. அவைகள் தான் அனைத்து பிறப்புக்களுக்கும் தாயாய் இருந்து, பரப்பிரம்மம் என்ற தகப்பனால் ஜீவ விந்து பெற்று உலகத்தின் இனப்பெருக்கம் உண்டாகிறது. உயிரை உடலுடன் இணைப்பது அந்த மூன்று குணங்களாகும். இப்போது அந்த மூன்று குணங்களின் தன்மைகளைப் பற்றி பகவான் கிருஷ்ணன் கீதையில் விளக்கியதைப் பற்றிப் பார்ப்போம். பொ...
நான்கு வேதங்கள் தமிழில் இங்கே உள்ளன. அவைகளை டவுன் லோட் செய்து படிக்கலாம். மிகவும் உபயோகரமான மின் தொடர்புகள் ரிக்வேதம் https:// drive.google.com/file/d/1Obp3cg zXHjg4tV0HEHqRNI3ufPDGVsXW/view?usp=drivesdk … யஜுர்வேதம் https:// drive.google.com/file/d/1yw8TJq __euYkCqweXBNyGXbLHbVvnKfs/view?usp=drivesdk … சாமவேதம் https:// drive.google.com/file/d/1BvCwxG kGq_-VUuxHNmS0HO4-HjOVCzmD/view?usp=drivesdk … அதர்வணவேதம் https:// drive.google.com/file/d/1gdl8EH X1hFT0d_ohvBnluQLSGbzrstkT/view?usp=drivesdk …
தமிழ்க் கடவுள் முருகன் அவதார தினம் வைகாசி விசாகம். இதே நாளை புத்தரின் அவதார நாளாகவும், அவர் ஞானம் பெற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்ல. நம்மாழ்வார் பிறந்த தினமும் இதே நாளாகும். இதே நாள் எமதர்மராஜனின் பிறந்த தினமாகவும் கருதப்படுகிறது. மகாபாரதத்தின் வில் வீரரான அர்ஜீனன் பாசுபதா ஆயுத்தை சிவபெருமானிட மிருந்து பெற்ற நாளும் வைகாசி விசாகமாகும். விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது. சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன், கார்த்திகைப் பெண்டிரால் பாலூட்டப் பெற்றதால் கார்த்திகேயன், மன்மதன் போன்று அழகாக இருப்பதால் குமரன் என்று இன்னும் பல பெயர்களும் முருகனுக்கு உண்டு. சிவன் தனது ஐந்து முகத்தோடு ஆறாவது முகமான அதோ முகத்தைச் சேர்த்து மொத்தம் ஆறு முகத்திலிருந்தும் நெருப்பு பொறிகளை உர...
Comments