இந்தியாவின் 74-வது சுதந்திர தின விழா – 15-08-2020 – சனிக்கிழமை

 



நமது தேசியக் கொடியின் காவிக் கலர் சக்தி, வீரம், தியாகம் ஆகியவைகளையும், வெள்ளை சமாதானம், சத்தியம், நேர்மை ஆகியவைகளையும், பச்சை நாட்டின் செழிப்பு, வளர்ச்சி, புனித பூமி ஆகியவைகளையும், நடுவில் வெள்ளைக் கலரில் இருக்கும் அசோக சக்கரம் தர்மமத்தையும் குறிக்கும்.

இந்த நமது தேசியக் கொடிகளின் நிறங்களைப் பற்றியும், அசோக சக்கரத்தைப் பற்றியும் பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள் நமது நாடு சுதந்திரம் அடைந்த முதல் சுதந்திர தினமான 15-08-1947 அன்றே அருளுரை வழங்கி உள்ளார்.

அவரின் அருளுரையின் சுருக்கம்:

“சுதந்திரமடைந்த புராதனமான பாரத தேச மக்கள் அனைவரும் ஒரு மனதாக கடவுளை பலம், சக்தி, ஆன்மிக புத்தி ஆகியவைகளை அருளப் பிரார்த்திர்க்க வேண்டும். அனைத்து உலகத்து மக்களும் சுபீஷ்டமாகவும், சந்தோஷமாகவும், கிடைத்த சுதந்திரத்தைக் காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோமாக.

நமது தேசியக் கொடியில் மூன்று வர்ணங்களும், நடுவில் அசோக சக்கரமும் இருக்கிறது. உச்சியில் உள்ள நிறமான காவிக் கலர் செல்வம், செழிப்பு ஆகியவைகளுக்கு அதிபதியான தெய்வம் மஹா லட்சுமியையும், நடுவில் உள்ள வெள்ளை நிறம் கல்விக்கு அதிபதியான தெய்வம் சரஸ்வதியையும், கீழே உள்ள நிறமான கரும்பச்சை காக்கும் தாயாக உள்ள தெய்வம் துர்காதேவியான பராசக்தியையும் குறிக்கும். ஆகையால் மூன்று சக்தி தேவிகளும் நமது தேசியக் கொடியில் இடம் பெற்றிருப்பதைப் பார்த்து நாம் மிகவும் சந்தோஷப்படலாம்.

அத்துடன் பகவானின் தர்ம சக்கரம் நமது தேசியக் கொடியின் மையத்தில் உள்ள வெள்ளை நிறத்தில் இடம் பெற்றுள்ளது. இது அசோக சக்ரவர்த்தி – தெய்வாம்சம் பெற்ற அரசர் என்று புகழப்பட்டவர் – தர்மத்தைக் கடைப்பிடிக்க உருவான சின்னமான அசோக சக்கரம் இடம் பெற்றிருப்பது அரசின் ஆன்மீக ஒழுங்குமுறையை உணர்த்துகிறது. இது பகவான் கிருஷ்ணன் கீதையில் குறிப்பிடும் ஆன்மீக வாழ்க்கையை நினைவு படுத்துகிறது. கீதை அத்தியாயம் 3 – ஸ்லோகம் 16-ல் “ஏவம் ப்ரவர்த்திதம் சக்ரம்” என்றும், அதே அத்தியாயம் 3 – ஸ்லோகம் 14 & 15-ல் ‘மனித தேகம் உணவில் உருவாகிறது. உணவு மழையால் விளைகிறது. மழை யாகத்தால் பொழிகிறது. யாகம் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ளது. வேதம் பிரம்மத்திலிருந்து தோன்றியது. பிரம்மம் அக்ஷராவாக – அதாவது எழுத்துக்களின் சப்தங்களாக – உருவம் கொண்டுள்ளது.

ஆகையால் அசோகரின் தர்ம சக்கரம் பரப்பிரம்ம் வேதத்தில் சொல்லப்பட்ட யாகங்களில் அடங்கி உள்ளது என்பதை விளக்குகிறது.

இந்த புனிதமான சுதந்திர விழாவில் நேர்மையான அசோகரின் வழிநடந்து, அறம், பொருள், இன்பம் ஆகியவைகளை கடவுளின் அருளால் பெறுவோமாக.” 

 

74-வது சுதந்திர தின விழாவில் மோடி ஒரு மணிக்கும் 

மேலாக நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள்: 



*      15-ம் தேதி ஆகஸ்ட் மாதம் சுதந்திர வீரர் – ஆன்மிக குரு ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளும் நமது சுதந்திர தினமும் ஒன்றே என்பது ஒரு சிறப்பு. அவரது அருளாசியைப் வேண்டிப் பெறுவோமாக.

*      இந்த அசாதாரணமான காலத்தில் "சேவா பரமோ தர்மா" என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப கொரோனா போராளிகள் வாழ்ந்து வருகின்றனர். நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், மருத்துவ அவசர உதவி ஊர்திப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், சேவைப்பணியாளர்கள் மற்றும் பல மக்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.

*      தற்சார்பு இந்தியா என்ற கோஷம் இப்போது இந்தியாவின் மந்திரச் சொல்லாக மாறி உள்ளது. எத்தனை நாளைக்குத் தான் முக்கியமான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு இருப்பது. அனைத்துப் பொருட்களையும் நாமே நமது தேவைக்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யவும் உற்பத்தி செய்யவேண்டும். நமது நாட்டின் கச்சாப் பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அந்தப் பொருட்களை மேம்படுத்தி அதிக பயனுள்ளவைகளாக உருமாற்றி நமக்கே விற்கும் நிலையை மாற்ற வேண்டும். அந்தக் கனவை நினைவாக்க கொண்டு வரப்பட்ட திட்டமே சுய நிறைவு – அதாவது ஆத்மா நிர்பார் பாரத் திட்டம் – என்பதாகும்.

*      மேக் இன் இந்தியா திட்டம் இனி மேக் பார் வோல்ட் என்ற உச்சத்தை அடைய நமது உற்பத்தித் திறன் செயல்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்படத் துவங்கி உள்ளோம். ஆகையால், இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற தாரக மந்திரம் "உலகிற்காகத் தயாரிப்போம்" என்ற மந்திரமாக ஒலிக்கத் தொடங்கி செயல்படத் துவங்கி விட்டது.

*      சில மாதங்களுக்கு முன்பு வரை நாம் என்95 முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்புக் கவச உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்தோம். பெருந்தொற்று காலத்தின் போது நாம் என்95 முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்புக் கவச உபகரணங்கள், செயற்கை சுவாசக்கருவிகள் ஆகியவற்றை நாமே தயாரித்தோம். அதுமட்டுமல்லாமல், நாம் அவற்றை உலகம் முழுமைக்கும் ஏற்றுமதி செய்கிறோம். கொரோனாவைக் கண்டு பயம் கொள்ளாமல் புதிய உற்பத்தியை பெரும் அளவில் உருவாக்கி வெற்றி கண்டோம் என்ற இந்த தீரமிகு செயலால் நாம் பெருமை கொள்ளலாம்.

*      இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை உலகம் முழுவதும் கவனித்து வருகிறது. இதன் பலனாக, அந்நிய நேரடி முதலீடு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து குவிந்து வருகிறது. கோவிட் தொற்று காலத்திலும், இந்தியா, எப்டிஐ-யில் 18 சதவீத உயர்வைக் கண்டுள்ளது இது நம் தேச உற்பத்தியைப் பெருக்க பல சட்டங்கள் – இலகுவாக உற்பத்திக்கு முதலீடு – என்ற இலக்கை எட்ட மாற்றங்கள் செய்ததன் பலன் என்பதை நாம் உணரவேண்டும்.

*      அடல் பிஹாரி வாஜ்பாயின் தங்க நாற்கர நெடுஞ்சாலைத் திட்டம் தொலைநோக்குடன் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டது இன்றும் நினைவு கூறப்படுகிறது. அதே போல், 110 லட்சம் கோடி ரூபாய் செலவிலான தேசியக்கட்டமைப்பு பைப்லைன் திட்டங்கள், நம்முடைய ஒட்டுமொத்தக்கட்டமைப்புத் திட்டங்களையும் ஊக்குவிப்பதாக அமையும். மல்டி மாடல் தொடர்புக் கட்டமைப்பிற்கு நாம் கவனம் செலுத்துவோம். தனிப்பட்ட முறையில் நாம் இனி இயங்க முடியாது. முழுமையான, ஒருங்கிணைந்த கட்டமைப்பில் கவனம் கொள்வது அவசியம். பல்வேறு பிரிவுகளில் சுமார் 7000 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கட்டமைப்பு பிரிவில், புதிய புரட்சியை இது உருவாக்கும்.

*      நம்முடைய வேளாண் அமைப்பு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த ஒரு காலம் இருந்தது. அப்போது நம் நாட்டின் முன்னால் இருந்த மிகப் பெரும் கவலை, நம் நாட்டு மக்களுக்கு எவ்வாறு உணவளிப்பது என்பதாகவே இருந்தது. இன்று நம்மால் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளுக்கும் உணவளிக்க முடியும். சுயசார்பு இந்தியா என்பது இறக்குமதியைக் குறைப்பது மட்டுமல்ல. நம்முடைய திறன்களையும், கற்பனைத் திறனையும் வளர்த்துக் கொள்வதும் ஆகும்.  அத்துடன் விவசாயிகளின் நலனுக்கான வேளாண் உற்பத்திப்பொருள் சந்தைப்படுத்துதல் சட்டம் இயற்றப்படுகிறது. விவசாயத் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

*      இன்று முதல் மற்றொரு பெரிய இயக்கம் தொடங்கப்படுகிறது. இது தேசிய டிஜிட்டல் ஆரோக்கிய லட்சிய நோக்குத் திட்டம். ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்தியாவின் சுகாதாரத் துறையில் இந்த தேசிய டிஜிட்டல் ஆரோக்கிய லட்சிய நோக்குத்திட்டம் புதியதொரு புரட்சியை உருவாக்கும். உங்களுடைய அனைத்துப் பரிசோதனைகள், நோய்கள், டாக்டர் உங்களுக்கு அளித்த மருந்துகள், எப்போது சிகிச்சை பெற்றீர்கள், என்ன சிகிச்சை பெற்றீர்கள் என்பவை பற்றிய பதிவுகள், என அனைத்துத் தகவல்களும் இந்த ஒரே ஆரோக்கிய அடையாள அட்டையில் இடம் பெற்றிருக்கும்.

*      `வாழ்வதை எளிதாக்குதல்' முயற்சியின் மூலம் நடுத்தர வகுப்பினர் தான் அதிகம் பயன்பெறுவார்கள். குறைந்த செலவில் இன்டர்நெட் வசதி, குறைந்த விலையில் விமான பயண டிக்கெட்டுகள், நெடுஞ்சாலைகள் முதல் -வே வரையில் குறைந்த கட்டணத்தில் வசதி கிடைத்தல், குறைந்த விலையில் வீட்டு வசதி கிடைத்தல் முதல் வரி குறைப்பு வரை என இந்த அனைத்து நடவடிக்கைகளும், நாட்டின் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதாக இருக்கும்.

*      கிராமப்புரங்களில் வசிக்கும் மக்களுக்கும் நவீன, தடையற்ற இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அடுத்த 1000 நாட்களில், 6 லட்சம் கிராமங்கள ‘ஆப்பிடிகல் பைபர் நெட் ஒர்க்’குடன் இணைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

*      இந்தியாவை சுய சார்பு நாடாக மாற்றுவதற்கு, புதிய கல்விக் கொள்கை பெரிதும் உதவும். புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவைகளில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் மாணவர்களுடன் நம் மாணவர்கள் போட்டியிடுவதற்கான அனைத்து அம்சங்களையும் இந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை, 21-ம் நூற்றாண்டுக்கான புதிய இந்தியாவை வடிவமைக்கும் புதிய கண்டு பிடிப்புகளும், ஆராய்ச்சிகளுமே, நம் நாட்டை சக்தி வாய்ந்ததாக மாற்றும்.

*      75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு முன்பே நமது தேசியக் கொடி விண்வெளியில் பறக்கும் அற்புதக் காட்சியை நாம் காண்போம்.

அடுத்த வருடம் 75-வது சுதந்திரதினமாகும். அந்த ஒரு வருடத்திற்குள் இந்தியா புதிய வலுவான சுய சாற்பு தேசமாக உருவாகும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். அது நிகழ எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திப்போமாக.

பாரதமாதாவுக்கு ஜே! வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!


 




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017