சென்ற 11-ம் தேதி
ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று தான் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினோம். விநாயகப்
பெருமாள் தான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய பகவத் கீதையை ஸ்ரீ வியாச பகவான் சொல்லச்
சொல்ல மஹாபாரதத்தில் வரும் கீதையை எழுதி உலகத்திற்கு அருளியதயாகச் சொல்வார்கள்.
ஆடி – ஆவணி மாதம்
இந்துக்களுக்கு மிகவும் புனிதமான மாதமாகும். ஏனென்றால் அந்த மாதங்களில் பல பண்டிகைகள்
ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும்.
ஸ்ரீ வரலட்சுமி விரதம்
– 31-07-2020 – வெள்ளிக் கிழமை, பிராமணர்களுக்குப் புனித தினமான ஆவணிவட்டம் & ரட்சா
பந்தன் 03-08-2020 – திங்கட் கிழமை, ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்ட
அடிக்கல் நாட்டு கோலகல விழா 05—08-2020 – புதன் கிழமை, ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி –
11-08-2020 – செவ்வாய்க்கிழமை, விநாயகர் சதுர்தி – 22-08-2020 - சனிக்கிழமை என்று இந்தக் கொரோனா
கொடூரத்திலும் மக்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், பக்தியையும், நிம்மதியையும்
ஓரளவுக்கு அளித்துள்ளன இந்த பண்டிகைகளும், நிகழ்வுகளும் என்றால் மிகை அன்று.
Comments