சோனியா குடும்ப கட்டுப்பாட்டில் உருவாக்கிய அறக்கட்டளைகள்



சோனியா காந்தியின் குடும்பம் நிர்வகிக்கும் முக்கியமான  அறக்கட்டளை/நிறுவனங்களின் பட்டியல் இதோ:

1. Rajiv Gandhi Foundation – Estd. June 1991 (RGF)

2. Rajiv Gandhi Institute for Contemporary Studies – Estd. August 1991. (RGICS). (இது ராஜிவ் காந்தி பவுண்டேஷன் கீழ் நிறுவப்பட்டு, செயல்படும் ஸ்தாபனம்).

3. Indra Gandhi Memorial Trust – Estd. 2001 - (IGMT)

4. Rajiiv Gandhi Charitable Trust – Estd. 2002 (RGCT)

5. Rajiv Gandhi Mahila Vikas Pariyojana Estd. 2002 (RGMVP) 

(இது ராஜிவ் காந்தி சாரிடபிள் டிரசால் நிறுவப்பட்டு, செயல்படுகிறது. இது ஏழைகளின் ஏழ்மையைப் போக்கி, அவர்களைச் சமூகத்தில் பலம் வாய்ந்தவர்களாக உருவாக்கும் நோக்குடனும், குறிப்பாக உத்திரப் பிரதேச பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் ஏற்பட்டது.)

6. INDRA GANDHI EYE HOSPITAL AND RESEARCH CENTRE– Estd. 2006 - (IGEHRC) ராஜிவ் காந்தி சாரிடபிள் டிரஸ் 2006-ம் ஆண்டு இந்த கண் ஹாஸ்பிடலை  உத்திரப்பிரதேசத்தில் லக்னோ – அமேதி ஆகிய இடங்களில் நிறுவியது.

(இவைகள் அனைத்தும் பொதுவாக உத்திரப்பிரதேசப் பகுதியை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.)

மோடி அரசால் கொரோனா-19 என்ற கொடும் வியாதியை எதிர்கொள்ள மக்களின் நிதி உதவி செய்து அவர்களின் பக்களிப்பை ஏற்படுத்துவதற்காக Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES FUND)   28-03-2020 அன்று புதிதாக தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் பிரதமந்திரி தேசிய நிவாரண நிதி என்பது 1948-ம் வருடம் தொடங்கப்பட்ட நிதியாகும்.

‘ஏற்கெனவே பிரதம மந்திரியின் பெயரில் ஒரு நிதி இருக்கும் போது வேறு ஒரு நிதியை ஏற்படுத்துவது எதற்கு?’ என்று சோனியா காந்தி – பலவிதமான பவுண்டேஷன் – அறக்கட்டளை என்று அரசியல் ஆதாயத்திற்கும், தேர்தல் பிரசார உத்தியாகவும் நிறுவியவர் மோடி அரசை ஏப்ரல் 2020 அன்று கேள்வி எழுப்பி உள்ளது தான் கேலிக் கூத்தாக உள்ளது.

‘தற்போது ‘PMCARES’ உள்ள அனைத்துப் பணத்தையும் பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியில் சேர்த்து புதிய PMCARES என்ற கணக்கை ரத்து செய்து விடவேண்டும். ஏனென்றால் PMCARES கணக்கில் ஒரு வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல், திறம்பட நிர்வகித்தல் ஆகியவைகள் இல்லை. ஆனால் இந்தக் குறைகள் இல்லா பிரதம மந்திரியின் நிவாரண நிதியையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்’ என்பது தான் சோனியா – ராஹுல் ஆகியவர்களின் கூற்றாகும்.
உண்மை நிலை என்ன? – என்பதை ஆராயப்புகும் போது தான் பிரதம மந்திரியின் நிவாரண நிதி – ராஜிவ் காந்தி பவுண்டேஷன் – ராஜிவ் காந்தி தொண்டு அறக்கட்டளை, இந்திரா காந்தி நினைவு நிதி – ஆகியவைகளில் முறைகேடுகள் ஏற்பட்டவைகள் வெளி வந்துள்ளன.

பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு அறக்கட்டளை பத்திரம் கிடையாது. இதன் நிதியை பிரதம மந்திரியே நிர்வகிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழி காட்ட குழு எதுவும் இல்லை. உண்மையிலேயே இந்த நிதி நிர்வகிப்பில் தான் எந்தவிதமான ‘accountability’ யும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த நிதியில் பிரதம மந்திரியின் ஏதேட்சதிகார அதிகாரத்தினால் தான் சோனியாவின் உத்திரவில் அப்போதைய பிரதம மந்திரி இயற்கை இடுபாடுகளின் போது மக்களுக்கு நிவாரணம் அளிக்க மக்கள் கொடுத்த நிதியை ராஜிவ் காந்தி பவுண்டேஷன் என்ற சோனியா-ராஹுல்-பிரயங்கா ஆகியவர்களின் குடும்பத்தைச் சார்ந்த என்.ஜி.ஓ.விற்கு நிதி ஒதுக்கீட்டை  2005, 2006 & 2007 என்று மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கணிசமான தொகையைக் கொடுத்துள்ளார். இது அப்பட்டமான நிதி முறைகேடு என்பதை அனைவரும் உணரவேண்டும்.

ராஜிவ் காந்தி பவுண்டேஷன் அந்நிய நிதி ரூபாய் 14 கோடிக்கு மேலும், ராஜுவ் காந்தி அறக்கட்டளை அந்நிய நிதி ரூபாய் 85 கோடிக்கு மேலும் பெற்றுள்ளதில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புண்டு என்று கருத இடமுண்டு.

இஸ்லாம் மதப் போதகர் ஜாகிர் நாயிகின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற இந்திய விரோத என்.ஜி.ஓ. ராஜிவ் காந்தி பவுண்டேஷனுக்கு ரூபாய் 50 லட்சம் நன் கொடை அளித்துள்ளது. அது பிறகு திருப்பிக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நகை வியாபாரியும் இந்தியாவைவிட்டு அயல் நாட்டில் தலைமறைவாகி உள்ள வங்கிகளை ஏமாற்றிய மெஹுல் சோக்கியும் ராஜிவ் காந்தி பவுண்டேஷனுக்கு நிதி அளித்துள்ளான். அத்துடன் 7 மந்திரிகளின் துறைகள் – அதில் உள்துறை அமைச்சகமும் உண்டு –மற்றும் 11 பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவைகளும் நிதி அளித்துள்ளன. ராஜிவ் காந்தி பவுண்டேஷன் என்பது சோனியா குடும்ப அறக்கட்டளை என்பதை எல்லாம் மந்திரிகளும், பொதுத் துறையினரும் மறந்து நிதி அளித்துள்ளதில் சோனியா குடும்பத்தினரின் நிர்பந்தம் நிச்சயம் இருந்திருக்கும்.

ராஜிவ் காந்தி பவுண்டேஷன் அமைக்க சோனியா மிகவும் அவசரப்பட்டிருக்கிறார். ராஜிவ் காந்தி 21-05-1991 அன்று கொல்லப்பட்டார். பவுண்டேஷன் சரியாக ஒருமாதம் கழிந்த உடனேயே – அதாவது 21-06-1991 அன்று உருவானது. சோனியா எந்த ஒரு பதவியிலும் இல்லாத போதும், இந்த அறக்கட்டளை பதிவு – அறக்கட்டளைப் பத்திரம் ஆகியவைகள் அசுர வேகத்தில் முடிந்ததைப் பார்க்கும் போது அப்போதே சோனியாவிற்கு அரசியல் செல்வாக்கு இருப்பதைத் தான் காட்டுகிறது. மேலும் ஜூலை மாதம் 1991 ராஜிவ் காந்தி பவுண்டேஷனுக்கு ரூபாய் 100 கோடி அரசாங்கப்பணம் ஒதுக்கும் பட்ஜெட் தீர்மானம் எதிர் கட்சிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. ஆனால், ஒரு தனி நபர் குடும்ப அறக்கட்டளைக்கு காங்கிரஸ் அரசாங்கம் முயன்றதைப் பார்க்கும் போது சோனியா அப்போதே அரசாங்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த நபராகவே ஆகி உள்ளார். அவருக்கு பிரதமராகும் ஆசை இல்லை என்று சொல்வதை இந்த சம்பவங்கள் மறுக்கவே செய்யும்.    

பிரதம மந்திரியின் நிவாரண நிதியின் ஆடிட்டரை மாற்றாமல் தொடர்ந்து தாக்கூர் – வைத்தியநாத ஐயர் & கம்பனி தான் ஆட்டிட்டராக உள்ளனர். ஒரே ஆடிட்டரே கணக்கை வருடா வருடம் தணிக்கை செய்வது கம்பனி சட்ட விதிக்குப் புறம்பானது என்றாலும், அதையும் ராஜிவ் காந்தி பவுண்டேஷன் மீறிச் செயல்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி பவுண்டேஷன் $ 300,000 அளவு நிதியை சீன அரசு மற்றும் டெல்லி சீன தூதரகம் ஆகியவைகளிலிருந்து 2005-2006 ஆண்டுகளில் பெற்றுள்ளது. மேலும் Rajiv Gandhi Institute for Contemporary Studies நேரிடையாக சீன அரசாங்கத்திடமிருந்து நிதி பெற்றுள்ளது.

"இந்திய மக்களிடம் சீன மக்களின் நட்பு உணர்வைக் காண்பிப்பதற்காக, சீன அறக்கட்டளை சார்பாக இந்தியாவின் சீனத் தூதர் திரு. சன் யூக்ஸி,  ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு 10 லட்சம் நன்கொடை அளித்தார்" என இந்தியாவில் உள்ள சீன தூதரக வலைத்தளம் கூறுகிறது. அப்போது ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பொதுச்செயலாளராக இருந்த மல்ஹோத்ரா, சோனியா காந்தி கட்டுப்பாட்டில் உள்ள ராஜீவ் காந்தி அறக்கட்டளை சார்பாக இந்த நிதியைப் பெற்றிருந்தார்.


சீன அரசாங்கம் 2006-ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நன்கொடை அளித்தது. இதில், வெளி வந்த ஒரு மோசமான அம்சம் என்னவென்றால், 2005 - 2006-ல் சீனத் தூதரகம் மட்டுமல்ல, சீன அரசாங்கமே ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது,

2006-2007 ஆம் ஆண்டிற்கான அறக்கட்டளையின் ஆண்டு அறிக்கையிலும், சீன மக்கள் குடியரசு ஒரு நன்கொடையாளராக பட்டியலிடப்பட்டுள்ளது.




சீனா இவ்வாறு ராஜிவ் காந்தி பவுண்டேஷனுக்கு நிதியை அளித்த பிறகு சீனா என்ன செய்தது? என்பதைத் தான் இங்கு கவனிக்க வேண்டும்.

சீனாவில் ஒலிம்பிக் 09-02-2018 அன்று நடைபெற்றது. அதற்கு அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்தியப் பிரதமருக்கோ, இந்திய ஜனாதிபதிக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. சோனியா, ராஹுல், பிரியங்கா, ராபர்ட் வாத்ரா, பிரியங்காவின் இரண்டு பிள்ளைகள் ஆகியவர்கள் இந்திய அரசின் சார்பில் கலந்து கொண்டனர். சோனியா ஒரு எம்.பி. – ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சேர் பெர்சன், ராஹுல் – காங்கிரஸ் எம்.பி. – காங்கிரஸ் தலைவர் – மற்றவர்கள் இந்தியக் குடிமகன்கள் மட்டுமே.


இதைப் பற்றி சீனாவின் அதிகாரியான லி என்பவரிடம் கேட்ட போது, ‘இந்தியாவின் ஒலிப்பிக் கமிட்டியின் சேர்மனான காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடியைக் கேட்கவும். அவர்தான் யார் யாருக்கு அழைப்பு அனுப்பவேண்டும் என்று எங்களுக்குச் சொன்னார்!’ என்ற பதில் சோனியாவின் ரிமோட் ஆதிக்கம் எவ்வளவு தூரம் நிலைபெற்றுள்ளது என்பதை அறியலாம்.

இந்த சீன நிதி பெற்றதால், 07-08-2008 அன்று ராஹுல் காந்தி – காங்கிரசின் தலைவர் என்ற பொறுப்பினால், காங்கிரஸ் கட்சி – சீனா கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் ‘முக்கிய பிரச்சனைகளில் கலந்து ஆலோசித்து ஒருமித்த முடிவு எடுப்போம்’ என்ற இரு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் Wang Jiarui, Minister of the International Department of Central Committee-யின் அங்கத்தினர் கை எழுத்திட்டுள்ளார்.  இது அப்போது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த இன்னாள் சீன அதிபர் ஜி ஜிங்க் பிங்க் – சோனியா காந்தி – ஆனந்த் சர்மா ஆகியவர்களின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனந்த் சர்மா அப்போதைய மன்மோஹன் சிங்கின் அரசின் வர்த்தக அமைச்சர் என்பது குறிப்பிடத் தக்கது. ஏனென்றால், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு சீனாவின் இறக்குமதியின் அளவு பன் மடங்கு அதிகரித்துள்ளதைத் தற்செயலாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதிலும் பிரதம மந்திரி மதிக்கப்படாமல், அவமதிக்கப்பட்டார் என்பதை பிரதமரான மன்மோஹன் சிங் உணராவிடினும், மக்கள் மனம் குமிறினர். ஆனால், செய்வதறியாது திகைத்தனர். 





ஏன் இந்த திடீர் ஒப்பந்தம் என்ற கேள்விக்குப் பதிலைத் தேடினால், அதன் பின்னணியில் Free Trade Agreements இருப்பது தெரியவரும். ராஜிவ் காந்தி பவுண்டேஷன் இந்த ‘இந்தியா ஏன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்து இடவேண்டும்?’ என்பது பற்றிய ஆய்வுகள் பல சீனாவிற்கு ஆதரவாக செய்யப்பட்டன. அதன் பிறகு மன்மோஹன் சிங்கின் அரசின் சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை படிப்படியாக 2014-ல் அது பதவி இழந்த போது 33 பங்கு அளவில் 2004 ஆண்டை ஒப்பிடும் போது ஏற்பட்டது. 

இந்த காங்கிரசின் ஒப்பந்தத்தின் நிர்பந்தத்தினால் தான் முன்பு டோக்லான் போதும், கால்வான் பள்ளத்தாக்கு சண்டையின் போதும், சீனாவைக் குற்றம் சொல்லாமல் நமது ராணுவம் – குறிப்பாக மோடியைக் குற்றம் சொல்லும் நிலைக்கு ராஹுல் தள்ளப்பட்டுள்ளார் என்று தான் கணிக்கத் தோன்றுகிறது. ராஹுல் இதன் காரணமாகத்தான் 2017 போதும் சீன இந்திய தூதுவர் லுயோ ஜாவோஹுய்-வை ரகசியமாக சந்தித்துள்ளார்.
மேலும் 2018 ஆண்டு செப்டம்பர் மாதம் ராஹுல் சீன மந்திரிகளை தனது கைலாஷ் மான சரோவர் யாத்திரையின் போது ரகசியமாக சந்தித்துள்ளார். அதன் பிறகு மோடி அரசையும், இந்திய ராணுவத்தையும் எல்லையில் சரியாக சீனாவை எதிர்கொள்ளவில்லை என்று குற்றம் சொல்லி உள்ளார். 


ஆனால் இதற்கு நேர்மாறாக லோக்சபாவின் காங்கிரஸின் எதிர்க்கட்சித் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ‘எல்லைக்கோட்டை மதிக்காமல் சீனா செயல்படுகிறது. இந்திய ராணுவம் சீன விஷப்பாம்பின் பல்லைப் பிடிங்கி விடும். உலகமே சீனாவின் அத்துமீறல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சீனா ஒரு மஞ்சள் ஆக்கிரமிப்புவாதி. சீனாவிற்குப் பாடம் புகட்ட, மோடி அரசு தைவான் அரசை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்’ என்று டிவீட் செய்தாலும், காங்கிரஸ் அவரைச் சாடி, அந்த ட்வீட்டை நீக்கச் செய்துவிட்டது. 







காங்கிரஸ் கட்சி தான் சோனியா குடும்பம் – சோனியா குடும்பம் தான் காங்கிரஸ் கட்சி என்ற அளவில் டெல்லியில் மிகவும் முக்கியமான இடததில் உள்ள இரண்டு நிலப்பகுதி - ஒன்று 4700 சதுர அடி நிலம் (ஒதுக்கப்பட்ட தேதி: 03-09-1975) - இரண்டு 4600 சதுர அடி நிலம் (ஒதுக்கப்பட்ட தேதி: 21-12-1976) அரசாங்கத்தால் காங்கிரஸ் கட்சி அலுவகம் கட்ட ஒதிக்கீடு செய்யப்பட்டது. காங்கிரஸ் பவன் டிரஸ்ட் என்ற பெயர் ஜவஹர்லால் பவன் டிரஸ்ட் என்று 1975 ஆண்டு  மாற்றப்பட்டது. சோனியா இதன் அறங்காவலர். இது ராஜிவ் காந்தி பவுண்டேஷனுடன் இணைந்து செயல்படும் ஒரு நிறுவனம் தான். இதில்  ராஹுலும் ஒரு அறங்காவலராக 2010 ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆனால் ஜவஹர் பவன் டிரஸ்ட் அந்த இரண்டு நிலத்திலும் காங்கிரஸ் கட்சி செயல்படாமல், ராஜிவ் காந்தி பவுண்டேஷன், காங்கிரஸ் கட்சியின் 4 டிரஸ்ட்கள் ஆகியவைகளுக்கு ஒதிக்கீடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகம் செயல்பட கொடுத்த நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் கட்சியின் உபயோகத்தில் இல்லை. அவைகள்  சோனியா குடும்ப அறக்கட்டளைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்தது விதி மீறலுடன், இதுவும் ஒருவகை ஊழல் தான்.

கட்சி தான் சோனியா – சோனியா தான் கட்சி – என்பதால் இதில் என்ன விதி மீறல் என்று சோனியா ஜால்ரா காங்கிரஸ்காரர்கள் ஏற்றாலும், இந்த நில ஒதிக்கீட்டில் பயனாளிகள் மாறி உள்ளதால், அதற்கு சோனியா காந்தி பதில் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் 4 நிறுவனங்களுக்கு மே மாதம் 2014 – அன்று – அதாவது மோடி அரசு பதவி ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் வாடகைக்கு விட ஜவஹர் பவன் அறக்கட்டளைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் பல ஹிந்து மத கலவரக்காரர்கள் – தேச விரோதிகளான உமர் காலித், கன்ஹையா குமார், சிமி தீவிரவாதிகள், SQR Ilyas போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ராஹுல் காந்தி இவர்கள் சிலருடன் சேர்ந்து போராடியதை வாசகர்கள் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
மன்மோஹன் சிங்கின் ஆட்சியின் போது சோனியா அறங்காவலராக உள்ள பல டிரஸ்ட்கள் நிதி ஒதிக்கீட்டில் பல விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்பது தெரிகிறது. மேலும் PMLA, Income Tax Act, FCRA அகிய சட்டங்கள் மீறப்பட்டதா? – என்பதை ஆராய Inter-Ministerial Committee அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க மோடி அரசு உத்திரவு பிறப்பித்துள்ளது.

‘காங்கிரஸைப் பழி வாங்கும் செயல்’ என்று மோடியை ராஹுல் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், ‘காங்கிரஸே சோனியா பரிவார் – சோனியா பரிவாரே காங்கிரஸ்’ என்ற நிலை தான் இந்த அவல நிலைக்குக் காரணம்.

சோனிய பரிவார் மேல் கூறப்படும் குற்றச் சாட்டு மிகவும் வலுவானதாக இருப்பதாகவே படுகிறது. கோர்ட் இதை எப்படி அனுகும் என்று இப்போது சொல்ல முடியாது.

இருப்பினும், தேச நன்மை கருதி ‘சத்யமேவ ஜெயதே’ என்று உங்கள் வாய்மை இதழ் கடவுள் நியாயம் சீக்கிரம் வழங்குவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

ஊழல் ஒழியட்டும்.

உத்தமர் ஆளட்டும்.

தர்மம் தழைக்கட்டும்.









சோனியா அறங்காவலராக இருக்கும் 3 நிறுவனங்கள் பற்றிய குறிப்பு:




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017