மஹா பெரியவா அருள் வாக்கு




ரிபாகோவ் என்ற ரஷ்ய பேராசிரியருடைய அனுபவம் – பத்மா சுப்பிரமணியனின் உரை– அனுப்பு: எஸ். ஷங்கர்

(உரையின் சுருக்கம் – முழுவதையும் இணைப்பின் மூலம் கேட்கவும்)

ரிபாகோவை 97 வயதான பெரியவாளைத் தரிசனம் செய்ய அழைத்துக் கொண்டு போனேன். ‘பார்க்க வேண்டும். நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்’ என்று சொன்ன அந்தப் பேராசிரியர் பெரியவாளைத் தரிசித்தவுடன் கண்களில் கண்ணீர் மல்க ‘எதுவும் நான் கேட்க வேண்டாம். என் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்து விட்டது’ என்று ஆனந்தித்தார்.

ஆனால் பெரியவாளோ அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கினார். ரஷ்யாவின் வடக்கு திசை உச்சியில் இருக்கும் பிரதேச மொழியில் அதிகமான சம்ஸ்கிருத மொழி இருக்கும். அதற்குக் காரணம் அந்தப் பகுதியில் தான் நமது வேதரிஷி யாக்ய வல்கியர், ரிஷிகள் மாநாடு நடத்தி நான்கு வேதங்களாக வகுத்துள்ளார். அதனால் தான் ரஷ்யாவுக்கு நமது வேதகால பூகோள சாஸ்திரத்தில் ‘ரிஷி வர்ஷா’ என்று பேர். காம்ரேட் என்ற சொல்லுக்கு ரஷ்ய பாஷையில் ‘தவரிஷி’ என்றே அர்த்தம். ‘நான் ஹிந்துவாக மதம் மாறனும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்’ என்று கேட்ட அந்த ரஷ்ய பேராசிரியருக்கு, ‘நீ ஒன்னும் செய்ய வேண்டாம். நீ மனசுலே ஹிந்துவாகனும்னு நினைசாலே போதும். ஞானஸ்தானம், சுன்னத் ஆகிய சடங்கு நடக்காமல் இருந்தால், உலகத்தில் பிறந்த அனைவரும் ஹிந்துக்கள் தான்’ என்று விளக்கினார் பெரியவா.

தாடியுடன் தேதஸ்வியாக காட்சி அளிக்கும் பேராசிரியர் தனக்கு ஒரு ஹிந்துப் பெயரை அனுக்கிரஹிக்கணும் என்றதும் ‘நீயே ரிஷி மாதிரி இருக்கிறாய். ஆகையால் ரிஷி என்ற நாமகரணமே பொருந்தும்’ என்று பெரியவா சொன்னாலும், அன்று இரவு 11 மணிக்கு மடத்திலிருந்து எனக்கு போன் வந்தது:’அழைச்சுண்டு வந்த பேராசிரியருக்கு வெறும் ‘ரிஷி’ என்ற பெயராக இல்லாமல் ‘தவரிஷி’ ன்னு பெயராக வைக்க பெரியா உத்திரவாகி இருக்கு.’ என்று சங்கர மடத்திலிருந்த் தகவல் வந்தது.

கொசுருச் செய்தி: ரஷ்யாவின் அந்த வடக்குப் பகுதியில் பெண்களுக்கு ‘லோப முத்ரோவா’ என்ற பெயர்கள் உண்டு. இது அகஸ்தியரின் பத்தினியான லோப முத்திராவை ஒத்துள்ளது. மேலும், புராதன காலத்தில் சங்கல்பம் செய்யும் போது தேசம், ஊர், தெரு, வீட்டு எண், பெயர் என்ற கிரமப்படி எழுதுவது போல் தான் இப்போதும் ரஷ்யாவில் விலாசம் எழுதும் போது இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறதாகத் தெரிகிறது.

      வீடியோ இணைப்பு

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017