வரலட்சுமி விரதம் – 31-07-2020 – வெள்ளிக்கிழமை





கல்யாணம் ஆன சுமங்கலிப் பெண்கள் செய்யும் மிகவும் முக்கியமான இந்துப் பண்டிகை தான் வரலட்சுமி விரதம். இது லட்சுமி அம்பாளைப் பூஜிக்கும் விரதமாகும். அந்த நாளில் லட்சுமியை வணங்கிப் பூஜித்தால், அஷ்ட லட்சுமிகளையும் பூஜித்த பலன் கிடைக்கும் என்பார்கள்.

விஜய லட்சுமி - கீர்த்தி (புகழ்), கஜ லட்சுமி - புஷ்டி (வலிமை), சந்தான லட்சுமி - ப்ரீதி (காதல்), தான்ய லட்சுமி - ப்பூ (பூமி), ஆதி லட்சுமி - துஷ்டி (இன்பம்), தைர்ய லட்சுமி - சாந்தி (அமைதி), வித்யா லட்சுமி - சரஸ்வதி (கல்வி), தான லட்சுமி – ஸ்ரீ (செல்வம்) ஆகியவைகளின் தேவதைகளான எட்டு லட்சுமிகள் எழுந்தருளி வரலட்சுமியாக பூஜிக்கும் 

சுமங்கலிப்பெண்களுக்கு அந்த எட்டு தேவீமார்களும் ஆசிகளை அள்ளி அளிப்பதாக ஐதீகம்.

வெற்றி, பலம், வம்சம், செழிப்பு, இன்பம், தைர்யம், கல்வி, செல்வம் – ஆகிய எட்டு குணங்களின் அதிபதி தேவதைகளான விஜய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, தான்ய லட்சுமி, ஆதி லட்சுமி, தைர்ய லட்சுமி, வித்யா லட்சுமி, தான லட்சுமி என்ற இந்த அஷ்ட லட்சுமிகளின் அருளை வேண்டுவது இந்த வரலட்சுமி விரதத்தில் அடக்கம்.

வரங்களை அள்ளித் தரும் லட்சுமித் தெய்வமானதால் வரலட்சுமி என்று அழைக்கப்படுகிறார். எட்டு குணங்களுக்கு அதிபதியான ஸ்ரீ திருமகளை நம் வீட்டுக்கு வரவேற்கும் நன்னாள் தான் வரலட்சுமி பூஜை நாளாகும்.

பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவளும் மஹா லட்சுமியே. லட்சுமி திருமாலின் மார்பை விட்டுப் பிரியாமல் இருப்பது போல் சுமங்களிகளும் தங்கள் கணவரின் இருதயத்தில் இடம் பிடித்து ஒற்றுமையாக வாழ லட்சுமி அம்மனை வேண்டி வரலட்சுமி நோன்பை மேற்கொள்கின்றனர்.

இந்த மங்களகரமான நாளில் அனைவருக்கும் அனைத்து பாக்கியங்களும் அருள லட்சுமி தேவியை வழிபடுவோமாக..

வாய்மை அனைத்து அன்பர்களின் வீடுகளிலும் அட்ச லட்சுமிகளும் குடிகொண்டு அனைத்து நலன்களும் அமிரிமிதமாக அடைந்து ஆனந்த வாழ்க்கை வாழ வரலட்சுமியை வணங்கிப் பிரார்த்திக்கிறோம்.

ஓம், வரலட்சுமியே நம:



ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திரங்களை இங்கே வெளியிட்டுள்ளோம்.
1. தன லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ
புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
5. சௌபாக்ய லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ
முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம


2. வித்யா லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

6. சந்தான லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ
மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம


3. தான்ய லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ
க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

7. காருண்ய லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ
தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

4. வீர லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ
த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

8. ஆதி லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ
லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம||


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017