பூமாதேவியின் உச்ச கட்ட உக்கிரம்



பூமித் தாய் பொறுமையின் பொக்கிஷம். பொறுத்தவர் பூமி ஆள்வார் – பொறுமை கடலிலும் பெரிது என்ற முதுமொழிகள் பூமியின் அசாத்திய பொறுமையையும், சகிப்புக் தன்மையையும் காட்டுகின்றன.

ஆனால் மனிதன் மண்ணை மதிப்பதில்லை; மலையைப் பாதுகாப்பதில்லை; வருங்கால சந்ததியினரை மனத்தில் கொண்டு பூமியை மதிப்பதில்லை; பேராசை என்ற வலையில் விழுந்து இயற்கைச் செல்வங்களை பொக்கிஷமாக காத்து வாழவில்லை.

பூமியின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மனிதன் லக்ஷ்மண் ரேகாவை பலமுறை மீறி செயல்பட்டுள்ளான். 

உலகளாவிய மக்கள் செவிடர்களாகி பூமியின் அபல அழுகுரலைக் கேட்க வில்லை.

பூமி பல சமயங்களில் தன் உக்கிரத்தை பூமி அதிர்ச்சி, பூகம்பம், எரிமலை ஆகியவற்றுடன் உலக மக்களைப் பழிவாங்கிய சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் உலகம் பாடம் கற்கவில்லை.

பூமிக்கு உலக மனிதர்களால் உண்டான பல அழிவுகளின் வலிகள் ஏராளம். அத்துடன் மனித ஜனத்தொகையின் பாரமும் அதிகம். பூமித்தாய் உலகத்து மனிதர்களுக்கு தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் விதமாக கொரோனா என்ற ஆள்கொல்லி கிருமியை தற்போது ஏவி உள்ளாள். 

பூமியின் உஷ்ணத்தைக் குறைக்கும் நீர் நிலைகள், நதிகள், கடல்கள், பனி உறைந்த மலைகள் ஆகியவைகளின் சுத்தம் மனிதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுச் சூழல் மாசாகி மக்காத பிளாஸ்டிக் குப்பைகளால் பூமியே சூழப்பட்ட நிலையில் உலகம் உழன்று கொண்டிருக்கிறது. மாசையே பூமித்தாய் ஆடையாகத் தரிக்கும் அவலமும் நிகழ்கிறது. அதற்கு மனிதர்கள் தீர்வு காண ஆத்மார்த்தமாக முயலவில்லை –  முடியவும் இல்லை.

இந்த அவலங்களுக்கு முடிவு கட்டத்தான் பூமித்தாய் – தாயாய் இருந்தாலும் தவறு செய்யும் தன் மக்களைத் தண்டித்துத் திருத்துவது தான் தர்மம் என்ற கொள்கையின் அடிப்படையில், கொரோனா என்ற கொடிய வைரஸை உருவாக்கி உலகத்தையே கதிகலங்க வைத்துள்ளாள்.

சுத்தம் சுகம் தரும் – என்பதை மனிதன் மறந்து விட்டான். உணவிற்காக உயிர்கொலை செய்வதில் கருணைகாட்டாமலும், தூய்மையைக் கடைப்பிடிக்காமலும் இருப்பதுடன், வேட்டையாடியும் – காடுகளைத் தீக்கிறையாக்கி அழித்தும் – அணுகுண்டு போட்டு பூமாதேவிக்குத் தீராத ரணவலியைக் கொடுத்தும் உலக மனிதர்களின் மமதைகள் ஹிமாலய உச்சியையே தொட்டு விட்டது.

கொரோனாவைக் கொண்டு பூமாதேவி உலக மக்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்து விட்டாள்.

கொரோனா இன்னும் சில தினங்களில் கட்டுக்குள் வந்துவிடும். ஆனால் உலகம் பூமி தேவி இதன் மூலம் வெளிக்காட்டிய பாடத்தை மறக்காமல் வரும் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.


பூமாதேவியை தினமும் மேலே உள்ள சுலோகத்தை உச்சரித்து பிரார்த்தித்து அன்னையின் உக்கரத்தைத் தணித்து, அவரது அருளைப் பெறலாம்.


வாய்மையும் பூமாதேவியின் பாதங்களே சரணம் சரணம் சரணம் என்று உங்கள் அனைவரின் சார்பாக வணங்கி உலகம் சுபீட்சமாக இருக்க வேண்டுகிறோம். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017