தசரதரின் பரதனின் மேல் உள்ள பாசம்
தசரதரின் பரதனின் மேல் உள்ள பாசத்தை ராமன் வெளிப்படுத்துவது வால்மீகி
ராமாயணத்தில் அயோத்தியா கண்டத்தில்
ஸர்க்கம் 100-ல் வருகிறது. அவைகள் அனைத்தும் அற்புதமான அர்த்தபுஷ்டி உள்ள
ரசிக்கும் பாக்களாகப் பரிமளிக்கிறது.
தசரதர் பரதன் காட்டும் பாசத்தை ராமர் எப்படி வர்ணிக்கிறார் என்பதைப்
பார்ப்போம்.
இது பரதன் ‘ராஜ்யத்தை ராமன் தான் ஆளவேண்டும். ராமனை வேண்டுவேன்’ என்று குலகுரு
வசிஸ்டர், சுமந்தன், கெளசல்யா, கைகேயி, சுமத்ரா, அயோத்தியா மக்கள் ஆகியவர்களுடன்
ராமனைச் சந்திக்க வரும் பொழுது ராமரின் வர்ணனையாக வால்மீகி வெளிப்படுத்துகிறார்.
“தசரதர் எப்பொழுதாவது உத்தமமான புஷ்பங்களைப் பார்த்தால், ‘குழந்தை பரதனுடைய
தலையில் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று சொல்வார். ஆனால் அந்தப் பரதன்
கலைந்த சடைமுடியுடன் வந்திருக்கிறானே!
நேர்த்தியான வஸ்திரங்களைக் கண்டால் ‘பரதன் இவைகளைத் தரித்தால் அல்லவா
அழகாயிருக்கும். அப்படிப்பட்ட பரதன் இப்பொழுது மான் தோல் மரவுரிகளைத் தரித்துக்
கொண்டிருக்கிறானே!
‘ஒரு பதார்த்தத்தை வாங்கிக் கொள்’ என்று தசரதர் வேண்டினாலும், பரதன்
வாங்கிக் கொள்வது அரிது. ஆனால், இப்பொழுதோ அவனே தனக்கு வேண்டியதை தானே கைகூப்பி
நமஸ்கரித்துப் பிறரை அண்டிப் பிழைக்கும் படி நேர்ந்ததே!
மிருதுவான புஷ்ப சயனஹ்தில் உட்கார்ந்தாலும் பரதனுடைய தேகம் தாங்காதென்று
தசரதர் எப்போழுதும் பரதனை தன் மடியிலேயே வைத்துக் கொண்டிருப்பார். அப்படிப்பட்டவன்
இப்பொழுது வெறும் தரையில் கிடந்து புரளும்படி நேர்ந்ததே!
(லிப்கோவின் ஸகலகாரிய ஸித்தியும் ஸ்ரீமத் ராமாயணமும் – பக்கம் 225 –லிருந்து
நகல் எடுத்தது.)
Comments