வால்மீகியின் அயோத்தியா காண்டம் – ஸர்க்கம் 100
ராமர் பரதனுக்கு ராஜ நீதியை உபதேசித்தது
ராமர் பரதனுக்கு 76 பாக்களில் ராஜ நீதியை உபதேசிக்கிறார். அந்த ராஜ நீதி
உபதேசங்கள் ஒரு ராஜ்யம் எப்படி ஆட்சி செய்யப்படவேண்டும் என்பதை விரிவாக
விளக்குவதாக அமைந்துள்ளது. ஆகையால் எந்த ஒரு ராஜ்யம் ராமர் விவரித்த நீதியைக்
கடைப்பிடிக்கிறதோ அந்த ராஜ்யம் ‘ராம ராஜ்யம்’ என்று போற்றப்படும் என்று
உலகத்திற்கு உபதேசிப்பதாகவே கொள்ள வேண்டும்.
நம் நாட்டு தேசப்பிதாவும் இந்த ராமனின் அறிவுரையைக் கடைப்பிடித்து
இந்தியாவில் ‘ராம் ராஜ்யத்தை’ உருவாக்க வெளிப்படையாகவே தமது விருப்பத்தைத்
தெரிவித்தார். ஆனால் பலவித அரசியல் நிர்பந்தங்கள் – காந்திஜியின் திடீர் அகால
மரணம் – அதுவும் ஒரு ஹிந்து தீவிரவாதி கோட்சேவால் துப்பாக்கியால் சுடப்பட்டு –
நிகந்து, காந்திஜியின் விருப்பம் –‘செகுக்லரசம்’ – என்ற கொள்கையால் ஹிந்துமதம் பல
ஹானிகளை எதிர்கொண்டு தனது கலாச்சாரம், கலைகள், ஹிந்துமத நம்பிக்கைகள், கடவுள் –
கோயில் வழிபாடுகள், திருவிழாக்கள், மதச் சடங்குகள், வேதம் – இதிகாசம் – பக்திப்
பாடல்கள் ஆகியவைகளைக் காப்பாற்ற சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளாகியும் போராட
வேண்டி உள்ளது.
ராம் – கிருஷ்ணன் – சீதா ஆகிய இந்துக்கள் வணங்கும் எண்ணற்ற தெய்வத்தின்
ஸ்தானத்தில் வைத்து துதிக்கும் கடவுளர்களையும் இழிவு படுத்தும் கூட்டத்தினரின்
மத்தியில் தார்மீக ரீதியாக அதீத சகிப்புத்தன்மையை கடைப்பிடித்து – அதையே
ஹிந்துக்களின் பலஹீனமாகக் கருதும் நிலையிலும், ஹிந்துக்களுக்கு இருக்கும் ஒரே
நாடான பாரத தேசம் என்னும் இந்தியாவில் வாழ்வதிலும் எதிர்கொள்ள வேண்டிய இன்னல்கள்
இன்னமும் தொடர்கின்றன.
காலம் மாறும் – காத்திருப்போம் – என்று தான் ஹிந்துக்கள் நம்பிக்கையுடன்
அந்த ‘ராம் ராஜ்யத்தை’ காண ஏங்கிய வண்ணம் இருக்கிறார்கள்.
அந்த ராமர் கண்ட ராம் ராஜ்யம் எப்படி இருக்கும் என்பதை இங்கு ராமரின் 76
பாக்களின் அடிப்படையில் மிகவும் சுருக்கமாக உங்களுக்கு இங்கே இந்த ராம நவமி தினமான
– 02-04-2020 – வியாழக்கிழமை – அன்று சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் ராமர் அருள்
கிடைக்க வேண்டுகிறேன்.
ராமர் கண்ட ராம்ராஜ்யம்
நமது ராஜ்யம் உன்னுடைய
இளம் பிராய அனுபவமின்மையால் கஷ்டப்படாமல் காப்பாற்றப்படும் என்று நான்
நம்புகிறேன்.
வசிஸ்டர் மஹரிஷியின் மகன்
சுயக்னா – வேத வித்தாக பணிவில் உயர்ந்தும் உயர்குடியில் பிறந்தவன் – உன்னால்
மதிக்கப்படுகிறான் என்று நான் நம்புகிறேன்.
நம்
கலாச்சாரம் – சடங்குகள் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்ற அறிவும், நேர்மையும் உள்ள ஒரு
பிராமணன் யாகத் தீயை அணையாமல் பாதுகாத்து, தேவதைகளுக்கு அன்னப் பிண்டம் படைப்பது
ஒழுங்காக நடைபெறுகிறது என்று நான் நம்புகிறேன்.
கடவுள்கள், உன்னுடைய முன்னோர்கள்,
உற்றார்-உறவினர்கள், உனது ஆச்சார்கள், வைத்தியர்கள் ஆகிய அனைவரையும் உன்னத
ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறாய் என்று நான் நம்புகிறேன்.
உனக்கு ஆயுதப் பயிற்சி
அளித்த குரு சுதன்வா அரசியல் அறிவும் பெற்றவர். மேலும், அவர் மனிதர்களின் உள்
உணர்வுகளை அவர்களின் வெளியே தெரியப்படுத்தும் சைகளைக் கொண்டு அறியும் திறமைசாலி.
அவரை தகுந்த பதவியில் அமர்த்தி இருப்பாய் என்று நான் நம்புகிறேன்.
ராஜாக்களின் வெற்றி
ரகசியமாக ஆலோசனைகளை அளிக்கும் அரசியல் ஞானம் கொண்ட மந்திரிகள் காரணமாகிறார்கள்.
அந்த மந்திரிகள் ரகசியங்களை காப்பதிலும், அதை வெளியிடாமல் இருக்கும் திறனும்
கொண்டவர்கள்.
பரதா! நீ அதிகமாக
தூங்கும் பழிக்கு ஆளாக மாட்டாய் என்று நான் நம்புகிறேன். துயிலிருந்தும் நீ சரியான
நேரத்தில் விழிக்க வேண்டும். மேலும், நீ இரவு நடுச் சாமத்திற்குப் பிறகு நீ செய்ய
நினைத்த காரியத்தைப் பற்றி ஆராயும் பழக்கத்தை மேற்கொள்கிறாய் என்று நான்
நம்புகிறேன்.
பரதா!
நீ தனியாக எந்த ஒரு முடிவையும் எடுக்காமல், அதே சமயத்தில் அதிகமானவர்களிடம்
ஆலோசனையும் செய்வதையும் தவிர்த்து செயல்படுகிறாய் என்று நான் நம்புகிறேன். இந்த
ஆலோசனைகள் – முடிவுகள் வெளியே – அவைகள் உத்திரவுகளாக வெளிவருவதற்கு முன்பே –
மக்களுக்குத் தெரியாமல் இருக்கும் அளவில் செயல்படுகிறாய் என்று நான் நம்புகிறேன்.
அதுவும் மற்ற ராஜாக்களுக்கு உன் ராஜாங்கத்தின் திட்டங்கள் வெற்றிகரமாக முடிந்த
பிறகு தான் தெரிய வேண்டும். ஆலோசனையில் இருக்கும் திட்டங்கள் யாருக்கும்
தெரியக்கூடாது.
பலபேர்கள் ராஜாங்கத்தில் இருப்பினும், ஒரு அறிவாளியான, தைரியமான,
திறமையான மந்திரியின் அறிவுரையால் மட்டுமே ராஜாவிற்கு பெரிய செல்வத்தையும்
கீர்த்தியையும் ஏற்படுத்த முடியும். அந்த மந்திரி ராஜாவின் நம்பிக்கைக்கு
பாத்திரமாகி, ராஜாவின் தனி அதிகாரத்தையும் பெறவேண்டும். ஒவ்வொரு ராஜாங்க
வேலையையும் தகுதி பார்த்து அளிக்க வேண்டும்.
பரதா! பல விலைஉயர்ந்த காணிக்கைகளை பெறுவதில் ஆர்வம் உள்ள ராஜா என்ற
அவப்பெயரை எடுக்கக் கூடாது. அது உன் ஆசையைத் தான் வெளிக்காட்டும்.
புன்முறுவல், அறிவு,
வீரம், நன்நடத்தை, சிறந்த குடிப் பிறப்பு, உடன் வேலை செய்பவர்களின் அன்பைப்
பெற்றவர், திறமைசாலி ஆகிய குணங்கள் கொண்டவரையே உன் ராணுவ தளபதியாக நீ தேர்வு செய்ய
வேண்டும்.
உன் வீரர்களுக்கு உணவு,
சரியான சம்பளம் ஆகியவைகள் எந்தவித காலதாமதம் இல்லாமல் வழங்கப்படுகிறது என்று நான்
நம்புகிறேன். இதில் நீ தவறினால், அவர்கள் ஊழல் செய்யத் தூண்ட்படுவார்கள். உன்
வீரர்கள் உனக்காக உயிரையும் விடத் தயாராக இருக்கும் சத்திரியர்களாக இருக்க
வேண்டும்.
அயல் நாட்டில்
நியமிக்கப்படும் உன் நாட்டுத் தூதுவர்கள் திறமைசாலிகளாக இருப்பதுடன், பேசும்
திறமைசாலிகளாக இருக்க வேண்டும். ஒற்றர்கள் மூன்று பேர்கள் நியமித்து – அவர்கள்
ஒருவருக்கு ஒருவரைத் தெரியாமல் இருந்து அவர்கள் 18 அதிகார வர்க்கத்தினர்களின் செயல்களையும்,
15 வகையான உன் சொந்த நாட்டின் அதிகாரிகளின் செயல்களையும் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
1. முதல் மந்திரி 2. குடும்ப புரோகிதர் 3. இளைய ராஜா 4. ராணுவ
தளபதி 5. முதன்மை காப்பாளர் 6.
ராஜாவின் வீட்டு வேலைகளைக் கவனிக்கும் மேலாளர் 7. ஜெயில் அதிகார் 8. கருவூல
அதிகாரி 9. கட்டியம் கூறுபவர் 10.
அரசாங்க வக்கீல் 11. நீதிபதி 12. சொத்து மதிப்பீட்டாளர் 13. ராணுவத்தினருக்கு
சம்பளம் கொடுக்கும் அதிகாரி 14. தொழிலாளிகளுக்கு
சம்பளம் கொடுப்பவர் 15. பொது மராமத்து
அதிகாரி 16. எல்லையைப் பாதுகாக்கும் அதிகாரி 17. மேஜிஸ்ரேட் 18. நீர், குன்று,
காடு ஆகியவைகளைப் பாதுகாக்கும் அதிகாரி.
மேலே உள்ள முதல் மூன்று பேர்களை நீக்கினால் 15 பேர்கள் வரும்.
அவர்களின் செயல்பாடுகளையும் அயல் நாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பவர்
தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் ராமர் பரதனுக்குக் கூறும் அறிவுரையாகும்.)
பரதா! அயோத்தியாவை
அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் உருவாக்க வேண்டும். இந்த அயோத்தியா நம்
வீரர்களான மூதாதையர்கள் வாழ்ந்த நகரம். யானைப் படை, குதிரைப் படை, தேர்ப்படை
ஆகியவைகளுடன், வலுகொண்ட வீரர்களால் பாதுகாக்கப்படும் கோட்டைக் கதவுகள்
ஆகியவைகளுடன் வணிகர்கள், மிகவும் பொறுப்புள்ள குடிமக்கள், படித்த பண்டிதர்கள்
ஆகியவர்கள் சூழ்ந்த நகரமாகும் அயோத்தியா.
பரதா! அது மட்டுமா?
கோயில்கள், குளங்கள், குட்டைகள், வழிப்போக்கர்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர்
தொட்டிகள், திருவிழாக்களில் குதுகலமாக கொண்டாடும் ஆண்களும் பெண்களும், நன்றாக
உழப்பட்ட விளை நிலங்கள், அன்போடு பராமரிக்கப்படும் கால் நடைகள், வானம் பார்த்த
பூமியாக இல்லாமல் பாசன வசதிகள் கொண்ட நிலங்கள், சுரங்கங்கள் சூழ்ந்த நிலப்பரப்பு,
பயமில்லாமல் தீயவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மக்கள் வாழ்வு – எங்கும் செழிப்பு –
நிம்மதி என்று அயோத்தியே சந்தோஷ சாகரத்தில் மூழ்கும் நிலையில் நம் முன்னோர்கள்
உருவாக்கி உள்ளனர்.
பரதா! விவசாயம்,
கால்நடைப் விருத்தி ஆகியவைகள் சரியாக நடைபெற்று அதில் ஈடுபட்டவரகள் செல்வச்
செழிப்போடு வாழ நீ வழிவகிக்கிறாய் என்று நான் நம்புகிறேன். ராஜா அனைத்து
பிரஜைகளையும் நேர்மையான வாழ்க்கை வாழ வழிகாட்ட வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு மிக
முக்கியம். பெண்களிடம் ரகசியம் பகிர்தல் கூடாது. பெண்யானைகள் காட்டில்
குறைவில்லாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவே குதிரைகளுக்கும்
பொருந்தும்.
பரதா! காலை நேரத்தில்
ஒவ்வொரு நாளும் நீ உப்பரிகையிலிருந்து மக்களுக்குத் தரிசனம் கொடுக்க வேண்டும்.
இல்லாவிடில் உன்னைப் பற்றிய தவறான செய்திகள் பரவ இடம் கொடுத்ததாகிவிடும்.
உன்
அருகில் உள்ள வேலையாட்கள் மனத்தில் நீ அவர்களை மதிக்கவில்லை என்ற எண்ணம் வராமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அவர்கள் ராஜாவை மிக எளிதில்
அனுகும்படியும் இருக்கக் கூடாது. இதில் ஒரு சமநிலைப் பாட்டைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
உன் ராஜ்யத்தின்
கஜானாவில் பணம் நிரம்பி இருக்க வேண்டும். தானியம், ஆயுதங்கள், தண்ணீர், தகுந்த
கலைஞர்கள், வில் வித்தை வீரர்கள் – ஆகியவைகளும் தகுந்த அளவில் இருக்க வேண்டும்.
உன் வரவு அதிகமாகவும்,செலவு குறைவாகவும் இருப்பதுடன், கஜனா அதிகாரிகள் நேர்மையானவர்களாகவும்
இருக்க வேண்டும்.
செலவுகள்
சரியானவற்றிற்குச் செலவிடப்படவேண்டும். நேர்மையான ஊழியர் தவறாகக் குற்றம்
சாட்டப்பட்டு சரியான விசாரணை இன்றி – சட்டங்களை கரைகண்ட வல்லுனர்களை புறக்கணித்து
மரண தண்டனை உன் ராஜ்யத்தில் வழங்கப்படாது என்று நான் நம்புகிறேன்.
பரதா! ஒரு திருடன் கையும்
களவுமாகப் பிடிபடுகிறான். விசாரணையில் தகுந்த ஆதரங்கள் இருக்கும். ஆனாலும், அவன்
பணத்தின் பேராசையால் இந்தத் திருட்டைச் செய்திருக்க மாட்டான். உன்னுடைய படித்த
நேர்மையான அமைச்சர்கள் இந்த வழக்கை பாரபஷ்டமின்றி விசாரித்து மறுபரிசீலனை செய்வார்கள்
என்று நான் நம்புகிறேன். இது பணக்காரன் – ஏழை பாகுபாட்டால் என்றால், அதற்கு
ஏற்றாற்போல் தீர்ப்பு இருக்க வேண்டும்.
ஏனென்றால்,
தவறான தண்டனை பெறும் அப்பாவிகள் விடும் கண்ணீர் நீதியை மதிக்காமல் ஏதோ மனம் போன
போக்கில் ஒருவித கொடூர சந்தோஷத்திற்காக தீர்ப்பு வழங்கியவர்களின் பிள்ளைகளையும்,
அவர்களின் சந்ததிகளையும் அழித்துவிடும். அப்படிப்பட்ட அப்பாவிகளை மூன்று வழிகளில்
கருணை காட்டி தீர்ப்பு வழங்கவேண்டும். பரிசுகள், அன்பான மனது, பணிவான வார்த்தை.
இந்த வழிமுறைகள் வயதானவர்கள், குழந்தைகள், வைத்தியர்கள் – ஆகியவர்களுக்குப்
பொருந்தும்.
பணத்தின் மேல் அதிக
மோகம், பெண்மோகம், பேராசை, இந்திரிய சுகத்தில் மூழ்குதல் – ஆகியவைகளை நீ
தவிர்க்கிறாய் என்று நான் நம்புகிறேன்.
பரதா! 14 தீமைகளை ராஜா
கைவிட வேண்டும். அவைகள்: நாஸ்திகம், பொய், கோபம், கவனமின்மை, தள்ளிப் போடுதல்,
பெரியோர்களை அவமதித்தல், சோம்பல், ஐந்து இந்திரியங்களின் அடிமையாதல், யாரையும்
கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுதல், கீழான கருத்துள்ளவர்களின் யோசனையை
ஏற்றல், ஏற்கெனவே முடிவான திட்டத்தை கைவிடல், ரகசியத்தை வெளியிடல், புனிதமான
வார்த்தைகளைச் சொல்லாமல் இருத்தல், அடிக்கடி ஒவ்வொருவரையும் வரவேற்க
இருக்கையிலிருந்து எழுதல்,
பரதா! நீ இப்போது சில ராஜ
நீதிகளை அறிய வேண்டும்.
முதலில் நீ 10 தீமைகளைப்
பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இவைகளை நீ தவிற்க வேண்டும். அவைகளாவன: 1. வேட்டையாடுதல் 2. சூதாடுதல் 3. பகல் தூக்கம் 4. காமம் 5. மது
அருந்துதல் 6. அகம்பாவம் 7.பொய் சொல்லல் 8.வேலையில்லாமல் ஊர் சுற்றுவது 9. பாட்டு
10. நடனம்.
5 விதமான அரண்கள்: 1.
அகழிகள் 2. உயர்ந்த கோட்டைச் சுவர்கள் 3.பெரிய மரங்கள் 4. பண்டக சாலைகள் 5.
தண்ணீரின் ஓட்டத்தை மாற்றல்.
4 விதமான ராணுவ வியூகங்கள்: 1. சமாதானம் 2.
தனிந்து போதல் 3. பகை மூட்டல் 4. தண்டித்தல்
7
விதமான ராஜ்யத்தின் அங்கங்கள்: 1. ராஜா 2. மந்திரிகள் 3. நண்பர்கள் 4. கருவூலம் 5. எல்லைகள் 6. கோட்டைகள்
7. படை
3
விதமான மனிதர்கள் கடைப்பிடிக்கும் லட்சியங்கள்: 1. மத அறிவு 2. செல்வம் 3. உடல் இன்பம் அல்லது 1. உடல் சக்தி 2.
அடக்குதல் 3. அறிவுரையின்
சக்தி
3 வகையான கற்கும் வழிகள்: 1. 3 வேதங்கள் 2.
விவசாயம், வாணிபம் மற்ற பிற தொழில்கள் 3. அரசியல் அறிவியல்
6 விதமான யூகங்கள்: 1.
எதிரிகளுடன் சமாதானம் 2. யுத்தம் 3. படையுடன் எதிரியை
எதிர்கொள்ளல் 4. சமயம் பார்த்துத் தாக்குதல் 5. எதிரிகளுக்குள் சண்டை மூட்டல் 6.
சக்திவாய்ந்த இன்னொரு ராஜாவின் உதவி கோரல்.
தெய்வத்தின் அருளால் சேதம் ஏற்படல்: தீ,
நீர் – அதிக மழை அல்லது வெள்ளத்தால் சேதம், நோய்க்கிருமிகளால் பேராபத்து, பஞ்சம்,
தொற்று நோய், பூமி அதிர்ச்சி, சுனாமி
மனிதர்களால் ஏற்படும் அழிவுகள்:
அதிகாரிகள், திருடர்கள், எதிரிகள், ராஜாவின் ஆட்கள், ராஜாவின் பேராசை.
சில ராஜ நீதிகளைப் பற்றி நான் உனக்குச்
சொன்னேன்.
இப்போது 20 வகையான மோசமான ராஜாக்களைப்
பற்றித் தெரிந்து கொண்டு, நீ அந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ராஜாக்களின்
சகவாசத்தைத் தவிர்த்து நீதிபரிபாலனம் செய்ய வேண்டும்.
20 வகையான மோசமான ராஜாக்கள்:
1. குழந்தை ராஜா 2. வயதான ராஜா 3. அதிக நாட்கள் நோய்வாய்ப்பட்ட ராஜா 4.
சொந்தங்களால் ஒதுக்கப்பட்ட ராஜா 5. பயம் கொண்ட ராஜா 6. கோழைகளால் சூழப்பட்ட ராஜா 7. பேராசை
ராஜா 8. பேராசை கொண்ட கூட்டத்தால் சூழப்பட்ட ராஜா. 9. மந்திரிகளால்
புறக்கணிக்கப்பட்ட ராஜா 10. மனவலிமை
இல்லா ராஜா 11. பிராமணர்களையும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை இழிவுபடுத்தும் ராஜா.
12. ஆடம்பரம், காம இச்சைகளில் அதிக ஈடுபட்ட ராஜா. 13. சிடு சிடு முகம் கொண்ட ராஜா.
14. எல்லாம் விதியின் செயல் என்று நம்பும் ராஜா 15. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ராஜா
16. போரில் தோல்வியான ராஜா 17. அரண்மனையை விட்டு வெகு நாட்கள் வெளியில் தங்கும்
ராஜா 18. பல எதிரிகளைக் கொண்ட ராஜா 19. கஷ்ட காலத்தின் பிடியில் சிக்கியுள்ள ராஜா 20.
உண்மை – தூய்மை ஆகியவைகளை கடைப்பிடிக்காதா ராஜா.
பரதா! நமது தர்ம சாஸ்திர
நூல்களில் அறிவுறுத்தியபடி நீ 3 அல்லது 4 மந்திரிகளிடம் எந்த திட்டத்தையும்
கூட்டாகவும், பிறகு தனித்தனியாகவும் ஆலோசிக்கவும். தனியாக மந்திரிகளிடம்
ஆலோசித்தவைகள் அனைத்தும் ரகசியம் காக்கப்படவேண்டும். உன்னுடைய வேதப் படிப்பு
உனக்கு உதவிகரமாக இருக்கிறதா? உன்னுடைய நடவடிக்கைகள், நல்ல முடிவுகளைத்
தருகின்றனவா? உன்னுடைய மனைவியின் ஆலோசனைகள் உனக்கு உதவிகரமாக இருக்கிறதா?
ஓ, பரதா! நான் சொன்னது
எல்லாம் உனக்கும் உடந்தையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீண்ட ஆயுள்,
புகழ், மத நம்பிக்கை, இன்பம், செல்வம் ஆகியவைகள் அனைத்தும் இதன் மூலம் கிட்டும்.
இது நமது மூதாதையர்கள் கடைப்பிடித்த ஒன்று தான். அவர்கள் கடைப்பிடித்தவைகள்
எல்லாம் தர்மப் பாதை – மிகவும் நேர்மையான தனிப்பட்ட புகழை அருளும் பாதை.
ஓ, பரதா! இறுதியாக
ஒன்றைச் சொல்ல வேண்டும். உனக்கு கிடைக்கும் பதார்த்தங்களை உன் நண்பர்களுடன்
பகிர்ந்து உண்.
அறிவும், ஞானமும் உள்ள
ராஜா – இந்த பூமியை நேர்மையுடனும், நீதி வழுவாமலும் ஆட்சி செய்தால், இந்த அழியும்
உடலிருந்து உயிர் பிரியும் போது, அந்த ராஜா சொர்க்கத்தை அடைவது நிச்சயம்.
Comments