26/11 பம்பாய் தீவிர வாதத்தாக்குதல்

சிறப்புக் கட்டுரை 26/11 பம்பாய் தீவிர வாதத்தாக்குதலில் காங்கிரசின் தேசிய விரோதச் செயல்கள் – ஆக்கம் : வாய்மை நிருபர் பவித்திரன் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் – என்று தான் ருத்திரமாக பொங்கி எழத் தோன்றுகிறது . காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி செய்யும் போது பிஜேபியை ஹிந்து தீவிரவாதக் கட்சியாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய காங்கிரஸ் – முஸ்லீம்கள் 26/11 பம்பாய் பாகிஸ்தான் தீவிரவாதத் தாக்குதல் (2008 - யு . பி . ஏ 1 ஆட்சியின் போது ) நடைபெறுவதற்கு முன்பே காங்கிரசின் மூத்த தலைவர்கள் – திக்விஜய் சிங்க் , ப . சிதம்பரம் , சிசில் குமார் ஷிண்டே , மணி சங்கர் ஐயர் ஆகியவர்கள் இந்தியாவில் நடக்கும் தீவிரவாதம் பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்களால் மட்டும் நடைபெற வில்லை . ஹிந்துக்களும் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க பல ஜோடிக்கப்பட்ட வழக்குகள் போட்டு பிஜெபியை அரசியல் களத்தில் தோல்வி அடைய முயன்றனர் . அதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவுக் கரம் நீட்டி மக்களை திசை திருப்பி தேர்தலில் வெற்றி பெற த...