பாரதம் முன்னேற மோடி அரசின் சமீபத்திய சாதனைகள்
பாரதம் முன்னேற
மோடி அரசின் சமீபத்திய சாதனைகள்
சாம்சங்கின் உலகத்திலேயே பெரிய உற்பத்திச் சாலையை உத்திரப் பிரதேசத்தில் உள்ள நோய்டாவில் மோடியும், தென் கொரியாவின் பிரதமர் மூன் சே இன் அவர்களும் சேர்ந்து திறந்து வைத்துள்ளனர்.
அந்த
தொழிற் கூடத்தில் வருடத்திற்கு 120 மில்லியன் போன்கள் உற்பத்தி
செய்யும் இலக்கை நிர்ணயித்துள்ளனர். இந்த தொழில் வளாகம் 35 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி
உள்ளது. 1990-ம் ஆண்டுதான் சாம்சங்க் டி.வி. உற்பத்தியை இந்த தொழில் கூடத்தில் ஆரம்பித்து,
அது 1997 ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியது. அது மொபைல் போன் உற்பத்தியை 2005-ம் ஆண்டு
இணைத்தது. சென்ற வருடம் ஜூன் மாதம் தென்கொரியாவின் சாம்சங்க் நிருவனம் சுமார் ரூபாய்
5000 கோடி அளவில் முதலீடு செய்து அதன் தற்போதையை 67 மில்லியன் ஸ்மார்ட் போனை 120 மில்லியன்
ஸ்மார்ட் போன் என்ற அளவில் உற்பத்தியை – இரண்டு மடங்கு அதிகரிக்க உள்ளது. அத்துடன்
இந்த அதிகமான முதலீடு மூலமாக தனது டி.வி. உற்பத்தியையும் அதிகரிக்க உள்ளது. இதன் உற்பத்திக்
கூடம் தமிழ் நாட்டு ஸ்ரீபெரம்பதூரிலும் உள்ளது.
அந்த இரண்டு கூடங்களிலும் சுமார் 70,000 பேர்கள் வேலையில் உள்ளனர். தற்போது உள்ள அதன்
இந்திய மொத்த உற்பத்தியான 10% அளவை 50% ஆக வருகிற மூன்றாண்டுகளில் அதிகரிக்க உள்ளது.
2016-17 ஆண்டு விற்பனையான 50,000 கோடியில் 34,000 கோடி விற்பனை இந்தியாவில் உற்பத்தியானவைகள்
என்பது ஒரு முக்கிய செய்தியாகும்.
வர்ணாசியில் ‘வார்ணாசி நகர எரிவாய்வு விநியோக
திட்டத்தை’யும், வார்ணாசி-பாலியா இ.எம்.உ. ரயில் பாதையையும் நாட்டிற்கு அர்பணித்து
மோடி தமது முன்னேற்றத் திட்டங்களைத் தொடர்ந்து அளித்து வருகிறார்.
இந்த
எரிவாய்வு பைப்லைன் திட்டத்தின் முதலீடு 755 கோடி. அது 1535 சதுர கிலோ மீட்டர் விஸ்தீரணம்
கொண்டது. 37 லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்கள். இது அதன் பாதையில் அமைந்துள்ள நான்கு
தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 150 தொழிற் சாலைகளுடன், 500 கமர்ஷியல் அலுவலகங்களுக்கும்
எரிவாயுவை அளிக்கும். இதன் மூலம் சுமார் 1000 பேர்களுக்கு நேரிடை வேலையும், அதைச் சார்ந்த
பலருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
சுனூர் என்ற இடத்தில் கட்டப்பட்ட
பன்சாகர் கால்வாய்த் திட்டம் மிர்ஸாபூரில் மோடி திறந்து வைத்தார். இந்த 20 வருடத் திட்டம் மோடி அரசு வந்தபிறகு
தான் முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய்த் திட்டத்தினால் மிர்ஸாபூர் – அலஹாபாத்
விவசாயிகள் பயனடைவார்கள். இது மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்கள்
சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட திட்டம். இந்தக் கால்வாயில் மொத்த நீளம் 171 கி.மீட்டர்.
அதன் மொத்தச் செலவு ரூபாய் 3400 கோடி
பாலத்தையும் – இது மிர்ஸாபூர் –
வர்ணாசியை இணைக்கும் பாலம் – நாட்டிற்கு அர்பணித்துள்ளார்.
கங்கா
நதியில் சுனாரில் பாலம் கட்ட 13-02-2007 அன்று அப்போதையை முதல் மந்திரியாக இருந்த முலாம்
சிங்கினால் அடிக்கல் நாட்டப்பட்டது. அது வெறும் சுமார் ஆயிரம் மீட்டர் நிளம் கொண்ட
பாலம் என்றாலும், சமஜ்வாதி மற்றும் பஹுஜன் சமஜ்வாதி கட்சிகளின் ஆட்சி காலத்தில் முடிக்கப்படவில்லை.
ஆனால், பி.ஜே.பி.யின் ஆட்சி யோகி ஆதித்தனார் தலைமையில் மார்ச் 2017 அமைந்த உடன் 17
தூண்கள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு, இப்போது முடிக்கப்பட்டு, முதியா மற்றும்
சுனார் பகுதிகளில் பாலத்துடன் இணைக்கும் ரோடுகளும் போடப்பட்டு, பாலமும் மோடியால் திறக்கப்பட்டுள்ளது.
இந்த காலதாமத்தால், இந்தத் திட்டத்தின் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது மக்கள் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
மோடி
பதவி ஏற்ற உடனேயே புதிய திட்டங்கள் அமல் படுத்துவதற்கு முன், முடிக்கப்படாத திட்டங்களை
ஆய்வு செய்து, அவைகளில் ஏற்கக் கூடிய திட்டங்கள் – கைவிடப்பட வேண்டிய திட்டங்கள் ஆகியவைகளை
அறிந்தும், சில அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாத நிலையில் திட்டங்களை முடிக்க முடியாமல்
போய்விடுகிறது. உ.பி.யில் பி.ஜே.பி. அரசு வந்தவுடன் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
340 கி.மீட்டர் நீளமுள்ள பூர்வாஞ்சல் விரைவு 6 வழிப்
பாதைக்கான அடிக்கல்லை மோடி அசாம்கார் பொதுக் கூட்டத்தில் திறந்து வைத்தார். அந்தச் சாலை பாராபாங்கி, பைசாபாத், அம்பேத்கார்
நகர், அமேதி, சுல்தால்பூர், அசம்கார், மாவ் வழியாக காசிபூரில் முடிவடைகிறது. இந்தப்
பாதை ஒரு தனியான துணைச் சாலை வழியாக வர்ணாசியையும் இணைக்க உள்ளது. மேலும் இந்தச் சாலையுடன்
லக்னோ – டெல்லி ஆகிய நகரங்களையும் இணைக்கும் திட்டமும் உள்ளது.
மேலும் வர்ணாசியில் 900 கோடி ரூபாய்க்கான புதிய
திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி உள்ளார் மோடி. ஸ்மார்ட் சிட்டி திட்டம், நாமாமி கங்கா,
இண்டர்நேஷனல் கன்வன்ஷன் செண்டர் ஆகியவைகள் இதில் அடங்கும்.
மிர்சாபூரில் மெடிகல் கல்லூரிக்கான அடிக்கல்லும்
நாட்டி உ.பி.யை ஒரு சிறந்த மேம்பட்ட மாநிலமாக உருவாக்க மாநில – மத்திய அரசு நடவடிக்கைகள்
எடுத்திருப்பதையே இவைகள் காட்டுகின்றன.
மோடியின்
அரசு மேகாலயா, மிசோராம், திரிபுரா, அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு எல்லையோற மாநிலங்களின் மேம்பாட்டுக்கும்
திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த மாநிலங்கள் இப்போது தேசிய ஜனநாயகக்
கூட்டணி அரசு ஆட்சி செய்வதால், முன்னேற்றத் திட்டங்கள் துரிதமாகச் செயல்படுத்தும் நிலை
ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் சாலைகள், கல்விக் கூடங்கள், சுகாதாரம், விளையாட்டு
ஆகியவைகளுடன் சுற்றுலாவையும் மேம்படுத்தி, அவைகளை இந்தியாவுடன் இன்னும் மிக நெருக்கமாக
பழகும் நிலையை உருவாக்கி உள்ளது.
மோடியின்
தளரா உழைப்பின் காரணமாகத்தான் திட்டங்கள் தரமாகவும், சீக்கிரமாகவும் செயல்படுத்தபடுகின்றன
என்பதை மக்கள் உணரவேண்டும்.
இந்திய
மக்களே! சிந்தியுங்கள்! 2019 ஆண்டில் சரியான முடிவெடுங்கள்!
வந்தே
மாதரம்! பாரதத் தாயை வணங்கி, நல் வழி காட்ட வேண்டுவோம்.
Comments