பாரத இந்து மக்களே! உஷார்! உஷார்!! உஷார்!!! ஆக்கம்: பவித்திரன்
பாரத இந்து மக்களே! உஷார்! உஷார்!! உஷார்!!!
ஆக்கம்: பவித்திரன்
காங்கிரஸ்
– கம்யூனிஸ்ட் – திருணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க எந்தவிதமான
காரியத்தையும் செய்யத் துணிந்து விட்டதாகவே படுகிறது.
காங்கிரஸ்
கட்சி பி.ஜே.பி. தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அது ஆட்சியில் இருந்த போதே,
ஹிந்து தீவிர வாதம் தலை தூக்கி விட்டது. அதற்கு பி.ஜே.பி.தான் காரணம் என்று பகிரங்கமாகவே
அறிக்கை வெளியிட்டார்கள். அதுவும் அப்போதைய காங்கிரஸ் உள்துறை அமைச்சர்களே குற்றம்
சாட்டி உள்ளார்கள். அதற்குக் காரணம் ‘இந்துக்கள் எப்படியும் காங்கிரசை கைவிட மாட்டார்கள்.
முஸ்லீம்களின் ஓட்டுக்களைப் பெற இந்து தீவிரவாத அறிக்கை உதவும்’ என்று அனுமானித்தார்கள்.
ஆனால், இந்துக்கள் காங்கிரசை நம்மவில்லை. காங்கிரசை ‘44’ லோக்சபா உறுப்பினர்களாக தோற்கடித்து,
அதற்கு எதிர்கட்சி அந்தஸ்தையும் கிடைக்காமல் செய்து சரித்திரம் படைத்தார்கள். மோடியின்
தலைமையில் மத்தியில் ஆட்சியை ஜனநாயகக் கூட்டணி அமைத்தது.
காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவர்களான மணி சங்கர் ஐயர் – திக்விஜய் சிங் ஆகியவர்கள் மிகவும் ஆணித்தரமாக
பாகிஸ்தான் அரசியல் வாதிகளைத் தொடர்பு கொண்டு அவ்வப்போது இந்தியாவின் ஜனநாயக ஆணிவேரையே
அசைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். ‘தேர்தலில் மோடியைத் தோற்கடிப்பதற்கு காங்கிரசுக்கு
நீங்கள் உதவ முன்வர வேண்டும்’ என்று பகிரங்கமாகவே எந்தவித கூச்சமும் இன்றி ‘தியாகம்
செய்து இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியைச் சேர்ந்த தலைவர்கள்’
என்று மார்தட்டும் அவர்கள் சொன்னதையும் இந்திய மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
‘இந்து
தீவிரவாதம்’ என்று 2014 லோக் சபா தேர்தலுக்கு முன்பு சொன்ன அதே காங்கிரஸ் வருகிற
2019 லோக் சபா தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு, ‘மோடி ஜெயித்தால், இந்தியாவில் ஹிந்து
தீவிரவாதம் நாட்டில் பரவும். அரசியல் சாதனச் சட்டத்தில் இடம் பெற்ற அடிப்படை உரிமைகள்
பரிக்கப்படும்’ என்று சசி தரூர் முழங்கி உள்ளார். ஆனால், அதை காங்கிரஸ் மறுக்காமல்,
‘அவர் சொன்ன கருத்து சரிதான். ஆனால் வார்த்தைப் பிரயோகம் தான் சரி இல்லை’ என்று சமாதானம்
சொல்லித் தப்பிக்கப்பார்க்கிறது.
ஆனால்
சசி தரூர் இன்னும் ஒரு படி மேலே போய், ‘மோடி அரசு மீண்டும் பதவிக்கு வந்தால், ஹிந்து
தாலிபான் அரசாக இந்தியா போய்விடும்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதை எல்லாம் விஞ்சும் அளவிற்கு,
காங்கிரசின் முடிசூடா மன்னராக வலம் வரும் தலைவர் ராகுல் ‘காங்கிரஸ் கட்சி முஸ்லீம்
கட்சி’ என்று சமீபத்தில் நடந்த முஸ்லீம் அறிவு ஜீவிகள் கலந்துரையாடலில் வெளிப்படையாகவே
சொல்லி இருக்கிறார். ராகுலின் இந்தக் கருத்து ‘இங்குலாப்’ என்ற உருது பத்திரிகையில்
வெளியாகி உள்ளதை ‘ஆம், ராகுல் காங்கிரசை ஒரு முஸ்லீம் கட்சி என்று சொல்லி உள்ளார்’
என்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் தலைவரும் உறுதிபடக் கூறி உள்ளார்.
ராகுலின்
இந்த ‘காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி’ என்று தான் சந்தித்த முஸ்லீம் அறிவு ஜீவிகளிடம்
சொன்ன சம்பவத்தைப் பற்றி நிர்மலா சீதாராமன் இப்படி விவரிக்கிறார்: ‘காங்கிரஸ் ஒரு முஸ்லீம்
கட்சி, நாங்கள் எங்கள் பாதையிலிருந்து விலகியதால், அதைச் சரிசெய்ய வேண்டும். அதை நான்
நிச்சயம் சீர் செய்து, காங்கிரஸ் முன்பு எவ்வாறு முஸ்லீம்களுக்கு இருந்ததோ அதே நிலையை
ஏற்படுத்துவோம்.’
இவ்வளவு
தெளிவாக ராகுல் பேசி இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இது உண்மையானால், அது இந்திய
நாட்டிற்கும் – ஏன், முஸ்லீம் சகோதர – சகோதரிகளுக்கும் கூட நல்லது இல்லை. அதிலும் குறிப்பாக
முஸ்லீம் பெண்களுக்கு காங்கிரசிடம் நீதி கிடைக்காது என்பது திண்ணம்.
ராகுல்
பூணூல் போட்ட பிராமணன் என்று காங்கிரஸ் குஜராத் தேர்தலின் போது சொல்லி, கோயில் கோயிலாக
வலம் வந்து ஓட்டுக் கேட்டதெல்லாம் வேஷம் என்று ராகுல் சொல்லாமல் சொல்வதாகவே படுகிறது.
கர்நாடகாவில் தேர்தலின் போது – தனிக் கொடி, ஹிந்தித் திணிப்பு, சிறுபான்மை மதம் லிங்காயத்
– என்று காங்கிரஸ் சொல்லி, ராகுலும் கோயில் – மடாதிபதிகள் சந்திப்பு என்று தேர்தல்
பிரசாரத்தில் செய்ததெல்லாம் ‘அரசியல் நாடகம்’ என்று ராகுலே தெரிவிப்பதாகப்படுகிறது.
காங்கிரஸ்
இப்படி என்றால் கம்யூனிஸ்ட்கள் ஹிந்துக்களைக் கவர ராமாயணம் ஓதுவதை கேரளாவில் அவர்களே
சம்ஸ்கிரத பண்டிதர்களை வைத்து ஏற்பாடு செய்துள்ளனர். ஜூலை 17-ம் தேதி முதல் ஆடி மாதம்
முழுவதும் கேராளாவில் ராமாயணம் வீடுகளில் ஓதுவது காலம் காலமாக இருந்துவரும் பழக்கம்.
மேற்கு வங்காளத்திற்குப் பிறகு, திரிபுரா மாகாணத்திலும் கம்யூனிஸ்ட்கள் படு தோல்வி
அடைந்து விட்டதால், கேரளாவையாவது தங்கள் ஆட்சியைக் காப்பாற்ற எதையும் செய்யத் துணிந்து
விட்டதையே இது காட்டுகிறது. சிவப்புக் கலர் கம்யூனிஸ்டுகளுக்கு கசப்பாகி, காவியை ஏற்கும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ‘காப்பிடல்’ கார்ல் மார்க்ஸை ஒதுக்கி விட்ட கம்யூனிஸ்டுகள்,
சம்ஸ்கிரத ராமாயணப் பாராயணத்தை தங்கள் மந்திரமாகிக்கி ஓதத்தொடங்கி விட்டார்கள்.
ஹிந்து
பாகிஸ்தான், ஹிந்து தாலிபான் புகழ் சசிதரூர் இதற்கெல்லாம் பிராயச் சித்தமாக கேரளாவில்
பல இடங்களில் ராமாயணம் ஓதும் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அதை காங்கிரஸ்
மேலிடம் – காங்கிரஸ் முஸ்லீம் கட்சி மேலிடம் – தடுத்து விட்டது.
‘செக்குலரிஸம்’,
‘சிறுபான்மைச் சமூகத்தினர்’ – என்ற கொள்கைகள் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகளிடம்
அகப்பட்டு திக்குத் தெரியாமல் திண்டாடுகின்றன.
ராகுல்,
சசுதரூர் ஆகியவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் அளவில் சி.பி.எம். ஜெனரல் செக்ரட்ரி
சீதாராம் யெச்சூரி போனாலு என்ற பூக்களுக்கான விழாவில் தெலுங்கானாவில் மஹாகாளி தேவி
வழிபாட்டிற்காக பூக்கள் நிறைந்த கூடையை பக்தி சிரத்தையுடன் சுமந்து பங்கேற்றுள்ளார்.
‘கடவுளை நம்பாத நாஸ்திகர்கள் என்று கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகளின் கொள்கைக்கு இது
முரண்பாடில்லையா?’ என்று கேள்வி எழுப்பினால், ‘இது தெலுங்கானாவின் நாகரித்தின் வெளிப்பாடு.
அதில் பங்கேற்பது தெலுங்கானா மக்களை மதிக்கும் செயல்’ என்று மழுப்பலான பதிலில் அவர்கள்
தங்களை மறைத்துக் காத்துக் கொள்ளவும் செய்வார்கள். எல்லாம் ஓட்டு செய்யும் மாயம்.
மம்தாவும்
தன் பங்கிற்கு ‘நான் இந்துக்களின் நண்பன். அவர்கள் பண்டிகைகளில் கலந்து கொள்வது எனக்குப்
பிடித்த ஒன்று. முஸ்லீம்களையும், இந்துக்களையும் ஒன்றாகவே நான் நேசிப்பவள்’ என்று விளக்கம்
அளித்துள்ளார். ஆனால், அங்கு ஹிந்துக்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதை – கேரளாவிலும் இதே
நிலை தான் – அதுவும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. தொண்டர்கள் கொலைகள் – தடுக்காமலும்,
தண்டிப்படாமலும் அந்த இரு அரசுகளும் செயல்படுகின்றன.
காங்கிரஸ்
– கம்யூனிஸ்ட் – திருணாமுல் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஹிந்துக்களுக்கு எதிராகவும்,
முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும் – தர்மம், தார்மீகம், நேர்மை, நீதி ஆகிய கொள்கைகளை சிறிதளவும்
சிந்திக்காமல் செயல்படுவது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளன.
முஸ்லீம்களுக்கு
அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் இந்தியாவின் வளத்தில் முதல் பங்கு அளிக்க வேண்டும்
என்பதிலும் இந்த மூன்று கட்சிகளும் ஏகோபித்த கொள்கை கொண்டிருப்பதாகவே படுகிறது. ஹிந்துக்களுக்கு
சிறுபான்மையினரின் உரிமையின் அளவு கூட கிடைப்பதில்லை. ஹிந்துக் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில்
இருக்கும் போது, அவைகளின் வருவாய்கள் அரசிற்குச் சென்று ஹிந்துக் கோயிலின் பராபரிப்பும்
பாதிக்கபடும் நிலையில் இருக்கின்றன. ஆனால், முஸ்லீம் தர்கா போன்றவைகளின் வருவாய்கள்
அரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் வரா.
காஷ்மீரம் ஆர்டிகள் 370 என்ற இந்திய அரசியல் சாசனத்தின்
படி தனி நாடாகவே இன்னும் இயங்கி, அங்குள்ள முஸ்லீம்களுக்கு பல சலுகைகளும் மற்றவர்களுக்கு
பல கட்டுப்பாடுகளும் இருப்பதால், ஹிந்துக்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட
பல இன்னல்களை அடைந்து கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரம் இந்து மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டிருந்தாலும்,
முஸ்லீம்களின் ஆக்கிரபிப்பால் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஹிந்துக்கள் அடிமைகளாக
வாழும் நிலையும், அதன் உச்ச கட்டமாக பல ஹிந்துப் பண்டிட்கள் காஷ்மீரை விட்டு முஸ்லீம்களால்
துரத்தி அடிக்கப்பட்டதும் சமீப கால அரசியல் நிகழ்வாகும். அதன் ரணம் இன்னும் ஹிந்துக்களை
வாட்டிக் கொண்டிருக்கிறது.
இன்னும்
எத்தனையோ ரணங்களை இந்துக்கள் தாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த ரணங்களுக்கு
ஓரளவு நிவாரணம் மோடி ஆட்சிக்கு வந்தபின் கிடைத்துள்ளது. அதையும் கெடுக்கும் விதமாக
பல கட்சிகள் கூட்டணி என்ற போர்வையில் கொள்ளை அடிக்கவும், இந்தியாவை வளரவிடாமல் தடுக்கவும்
ஒன்று சேர்ந்துள்ளனர். அந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் வருகிற தேர்தல்கள் அனைத்திலும்
முன்பு போல் மோடியை நம்பி ஓட்டளிக்க வேண்டும்.
பாரத
மக்களே! உஷார்! உஷார்!! உஷார்!!! – என்று உங்களை உஷார் படுத்துகிறேன்.
Comments