திண்ணைக் கச்சேரி
பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர்,
நிருபர், பொதுஜனம்
பொதுஜனம்: சென்ற சில மாதங்களாக அறிவு ஜீவிகள், சிக்குலர்
மேதாவிகள், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவைகள் ஒன்றாக பிரச்சனைகளை தீவிரமாக
ஆராயாமல், அரசியல் ஆதாயத்திற்கு போராட்டம் – ஊடகத்தில் கருத்துக்கள் என்று மிகவும்
தீவிரமாகச் முஸ்லீம் சிறுமி கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்
செயல்படுகிறார்கள். ஜம்மூவில் கதுவாவில் சமீபத்தில் எட்டு வயது பாக்கர்வால் என்ற நாடோடி.
அந்தச் சிறுமி குதிரைகளை மேச்சல் செய்பவர். 2018 ஜனவரி 10-ல் மாலையில் குதிரையுடன்
அந்தச் சிறுமி வீடு திரும்பாததால், ஜனவரி 12-ல் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார்
செய்ய, ஜனவரி 17-ம் தேதிதான் அந்தச் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு பிரத பரிசோதனை
செய்யப்பட்டதில், மயக்க மருந்து கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதை இந்துக்கள்
செய்ததாகவும், அந்தச் சிறுமியை ஹிந்துக் கோயிலில் அடைத்து, கற்பழிக்கப்பட்டதாகவும்
சொல்லப்பட்டுள்ளதால், இது ‘ஹிந்து – முஸ்லீம்’ மத ரீதியான வழக்காகி, அது உலக அளவில்
கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன.
வாசகர்: இந்த கதுவா கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து,
உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் உன்னோவ் பகுதியில் ஒரு பெண் ஒரு வருடத்திற்கு முன்பு
பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றம் சாட்ட, அந்தப்
பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை குல்தீப்பின் சகோதரர் சில பாஜக ஆட்களுடன் தாக்க, அவரும்
மருத்தவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பாதிக்கப்பட்ட
பெண்ணும் யோகி ஆதித்தனார் வீட்டுக்கு முன் தீக்குளிக்க முயன்று, அது தடுக்கப்பட்டுள்ளது.
இதுவும் இந்தியாவை உலக அளவில் பாதிக்கும் வண்ணம் மீடியா மற்றும் மோடியை வெறுக்கும்
கும்பல்கள் இந்திய இந்துக்கள் அனிவரும் ‘பாலியல் குற்றவாளிகள்’ ‘இந்தியா ஒரு ரேபிஸ்ட்தான்’
– என்ற அவதூறுகள் பரப்பப் படுகின்றன. இந்த சம்பவங்கள் ஐ.நா. சபை வரைக்கும் இவர்கள்
கொண்டு சென்றுள்ளார்கள். ஜனவரியிலிருந்து இன்று வரை ஏதோ இந்த இரண்டு பாலியல் சம்பவங்கள்
தான் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன என்ற அளவில் செய்திகள் பரப்படுகின்றன. இதை விட மிகவும்
கொடூரனமான பாலியல் வன்முறைகள் முஸ்லீம் சமூகத்தால் நடைபெற்றால், அவைகள் இரட்டடிப்புச்
செய்யப்படுகின்றன.
நிருபர்: எந்த அநியாயமும் எந்தவிதமான பாலியல் வன்முறையும்
மதச் சாயம் பூசி அவைகளை எதிர்ப்பதும், ஆதரிப்பதும் மிகவும் கீழ்த்தரமான அரசியலாகும்.
அதை எந்தக் கட்சி செய்தாலும், அது மிகவும் மூர்க்கமாகக் கண்டிக்க வேண்டியதாகும். ஆனால்,
இது கடந்த சில வருடங்களாக – குறிப்பாக மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு – ஹிந்துக்களின்
பாலியல் வன்முறைகள் எங்கு நடந்தாலும், அவைகளை உலக அளவில் கொண்டு சென்று மோடிக்கு அவப்பெயரையும்,
அவர் 2019 மீண்டும் தேர்தலில் ஜெயித்து மீண்டும் பிரதமராகக் கூடாது என்ற அளவில் அவதூறுகள்
பரப்படுகின்றன. கதுவா – உன்னோவ் சம்பவங்களில் ஈடுபட்ட கொடூரர்கள் மிகவும் கடுமையாகத்
தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
ஆனால், அந்த இரண்டு சம்பவங்களை மட்டும் தனியாகப் பிரித்து, உலக அளவில் கொண்டு செல்ல
வேண்டிய அவசியம் தான் என்ன? மோடி அரசு இந்த பாலிய வன்முறைக் கொடுமைகளை உடனேயே அந்தந்த
மாநில அரசுகள் தகுந்த விசாரணை நடத்த அறிவுறுத்தியும், மீடியா மோடியை விடுவதாக இல்லை.
சமீபத்தில் பெர்லின் சென்ற சமயம், சிலர் இந்திய தூதரகத்தில் மலர் வலையம் வைத்து தங்கள்
கண்டனத்தைத் தெரிவித்தது, இந்தியாவின் நேர்மையை உலக நாடுகளில் தவறாகப் பிரசாரம் செய்வதாகத்
தான் தெரிகிறது. அதற்கு ஒரு கூட்டமே 24 x 7 மணி நேரமும் செலவழிக்கவும், மீடியாவைப்
பயன்படுத்தவும் செயல்படுவது தெரிகிறது. ‘இந்தியாவை மீண்டும் துண்டாடும் முயற்சி’ என்ற
அளவில் இவைகள் வெளிப்படையாகவே தைரியமாகச் செயல்படுகின்றன. இந்தியா விழித்து வீறுகொண்டு
முன்னேற வேண்டிய தருணம் வந்து விட்டது.
விமரிசகர்: ஹிந்து தீவிரவாதம் என்று இந்துக்களை இழுவு
படுத்தி, வழக்கு போட்டவைகள் எல்லாம் பிசுபிசுத்து விட்டது. ஆனால், அந்த காங்கிரஸ்
– இடது சாரியாளர்கள் அந்த வழக்கின் தீர்ப்பையும் நம்பத் தயாரில்லை. உச்ச நீதிமன்றத்தில்
‘நீதிபதி பி.ஹெச்.லோயா மரணம் இயற்கையான ஒன்று’ என்ற தீர்ப்பையும் காங்கிரஸ் – மற்றும்
இடது சாரிகள் – மக்கள் நல மனுதாரர்கள் நம்பத்தயாரில்லை. சுப்ரீம் கோர்ட் தனது 114 பக்கத்
தீர்ப்பில் – லோயாவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று கூட இருந்த அவரது சக 4 நீதிபதிகளின்
வாக்கு மூலத்தையும் நம்பாமல் இருப்பது, அவர்களையே லோயாவின் சாவிற்குக் காரணம் என்ற
அளவில் கருதுவது எவ்வளவு கீழ்த்தரமானது! ‘இவர்களின் முக்கிய நோக்கமே நேர்மையான தீர்ப்பை
அல்ல; நீதி ஸ்தலங்களையே தவறாக சித்தரிக்கும் அவர்களது மன நிலையையே வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது. மக்கள் நல மனுக்கள் எல்லாம் இப்போது நீதி மன்றங்களைத் தாக்கவும், அவர்களது
அரசியல் காழ்புணர்ச்சிக்கு வடிகாலாகவும் கொண்டு வரப்படுகின்றன. இதைத் தடுக்காவிடில்,
நீதி பரிபாலனமே கேலிக்கூத்தாகி விடும். இந்த மக்கள் நல மனுக்களை உச்ச நீதிமன்றம் கிரிமினல்
அவமதிப்பாகவே கருத வேண்டிய நிலை உள்ளது. ஆனால், நீதி மன்றத்தின் சக்தியே அதன் அறவழிப்
பலத்தில் அடங்கி இருப்பதால், இந்த மக்கள் நல மனுதாரர்களைப் பயமுறுத்தும் கிரிமினல்
அவமதிப்பை நீதி மன்றம் நாடவேண்டிய அவசியமில்லை.’ என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டி
உள்ளது.
பொதுஜனம்: லோயா மரணத்தில் அமித்ஷாவை சிறையில் அடைக்கும்
வரை காங்கிரஸ் ஓயாது என்ற அளவில் செயலில் இறங்கி உள்ளது. அதற்கு தலைமை தாங்குபவர் ராகுல்.
லோயா மரணத் தீர்ப்பு சரி அல்ல; மீண்டும் அதை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் தலைமையில்
காங்கிரஸ் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளது. அத்துடன் நில்லாமல், இந்தியாவில் முதன் முறையாக
உச்ச மன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் மீது கண்டனத் தீர்மானத்தை 71 எம்.பி.க்கள் (காங்கிரஸ்,
காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், இந்தியன் யூனியன்
முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள்) கையெழுத்திட்ட கடிதத்தை ராஜ்ய சபா தலைவர்
துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவிடம் கொடுத்துள்ளனர். இதில் என்ன வேடிக்கை என்றால் கையெழுத்திட்டவர்களில்
7 பேர்கள் இப்போது ராஜ்ய சபா அங்கத்தினர்கள் இல்லை. இந்த கடிதத்தில், 10 வருடம் ஐக்கிய
முன்னேற்ற அணியின் முன்னால் காங்கிரஸ் பிரதம மந்திரி மன்மோஹன் சிங் கையெழுத்திடவில்லை.
மேலும், சிதம்பரம், குர்ஷித், சிங்கிவி, வீரப்ப மெளளி போன்ற காங்கிரஸ் வக்கீல்களும்,
காங்கிரசின் மூத்த தலைவர்களும் கையெழுத்திடவில்லை என்பது ஒரு முக்கியமான பின்னடைவு
காங்கிரசுக்கு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர்கள் குறிப்பிட்ட ஐந்து குற்றச்
சாட்டுகள் வலுவில்லாதவைகள் என்று நீதித்துறை நிபுணர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முன்பு ஜனவரியில் செலமேஸ்வர் தலைமையில் நான்கு மூத்த நீதிபதிகள் ‘உச்ச நீதிமன்ற நீதிபதி
தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக வழக்குகளை ஒதுக்குகிறார்’ என்ற குற்றச் சாட்டின் தொடர்ச்சி
தான் இது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. செலமேஸ்வர் ஜனவரியில் குற்றம் சாட்டியவுடன்,
அவர் அரசியல் பக்கங்களைப் புரட்டி தம் பக்க காரணங்களுக்கு வலு சேர்க்காமல், கம்யூனிஸ்ட்
தலைவர் டி.ராஜாவை சந்தித்து அரசியல் ஆதாயம் தேட முயன்றதையும் இந்திய மக்கள் கண்டார்கள்.
இது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததா? என்பதை அவரே சுய பரிசோதனை செய்யட்டும்.
வாசகர்: காங்கிரஸ் இந்த அவர்களது செயல் மூலம் தீராத
அவப்பெயரைப் பெற்று விட்டது. இந்த கண்டனத் தீர்மானம் தோல்வி அடைவது திண்ணம் என்றாலும்,
இந்தக் கண்டனம் உச்ச நீதிமன்றத்தையே பயமுறுத்தும் செயலாகப் பார்க்கப்படும். இது காங்கிரஸ்
செய்த உச்ச நீதிமன்றத்தின் அடித்தளத்தையே பதம் பார்க்கும் அநியாயம் என்று தான் இதைக்
கணிக்கத் தோன்றுகிறது. நாட்டுப் பற்றுடைய யாரும் இந்தச் செயலுக்கு காங்கிரஸை கண்டிப்பார்கள்
என்பது உறுதி. அதற்கு காங்கிரஸ் வருங்காலத்தில் வருந்தும் நிலை வரத்தான் போகிறது.
விமரிசர்: காங்கிரஸ் தலைமையில் கொடுத்த கடிதத்தில்
கூறப்பட்ட 5 குற்றச் சாட்டுகள் இதோ:
இந்த
குற்றச் சாட்டுகள் வலுவானவைகள் இல்லை என்பது தான் பலரது கருத்தாக இருக்கிறது என்பதை
இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். இவைகள் எல்லாம் தலைமை நீதிபதியை அக்டோபர் 2 – வரை பதவியில்
இருக்கும் அவரைச் செயல்படாமல் தடுக்கும் முயற்சியாகப் பலரும் இதைப் பார்க்கின்றனர்.
முக்கியமாக அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி அவர் ஓய்வு பெறும் அக்டோபர்
2-க்குள் வழங்காமல் இருக்க காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் நடத்தும் நாடகம் என்றும்
பலர் இதை விமரிசிக்கின்றனர்.
பொதுஜனம்: மோடி 2019-ல் மீண்டும் பிரதமராக வரக்கூடாது.
அதற்கு எதையும் நாங்கள் செய்யச் தயார் – என்ற மனோநிலையில் காங்கிரஸ் மற்றும் அதன் ஜால்ராக்
கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. அதை மோடி-அமித்ஷா இருவரும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம்
இருக்கிறது. தர்மம் ஒரு போதும் தோற்காது. வெல்லும். ஆகையால் 2019-ல் இந்தியாவிற்கு
நல்ல எதிர்காலமாக அமையும்.
Comments