ஓவியர் ராஜா ரவி வர்மா வரைந்த ஆதிசங்கரர் ஒவியத்தின் பின்னணி



ரவி வர்வா பல ஹிந்துக் கடவுள்களின் ஓவியங்களையும், ராமாயணம் – மஹாபாரதத்தின் சம்ப்வங்களையும், நைடதம் போன்ற இலக்கியப் பாத்திரங்களையும் ஓவியங்களாகத் தீட்டி உள்ளார். அவரின் அந்திம காலம் நெருங்கும் தருவாயில், படுக்கையில் படுத்துக்கொண்டே ஒரு இரவில், ரவி வர்வா சிந்தனை வயப்பட்டார்.

‘நான் பல தெய்வங்களை ஓவியமாகத் தீட்டி உள்ளேன். ஆனால், என் நாட்டிலேயே பிறந்த மஹான் ஆதி சங்கரரை ஓவியமாகத் தீட்டவில்லையே! ஒரு தெய்வத்தை ஓவியமாகத் தீட்டுவதற்கு புராதனமான இலக்கியங்களில் உள்ள தியான ஸ்லோகங்களை மனத்தில் பதிய வைத்து, அவைகளின் சக்தியால் அந்த அந்த தெய்வங்களின் ஓவியங்களைத் தீட்டுவேன். ஆனால் ஸ்ரீ பகவத்பாதரான சங்கரரின் ஓவியத்தை வரைய அந்த மாதிரியான தியான ஸ்லோகம் இல்லையே!’ என்று நினைத்த படியே ரவி வர்மா நன்றாகத் தூங்கி விட்டார்.
அடுத்த நாள் விடிகாலையில் ரவி வர்மாவின் மனத்தில் ஆதி சங்கரர் தமது நான் கு சிஷ்யர்களுடன் அமர்ந்து தர்மோ உபதேசம் செய்யும் திவ்விய காட்சி ஒளிமயமாகக் காட்சி அளித்ததைப் பார்த்து ஆனந்த மடைந்தார்.

உடனே ரவி வர்மா தமது படுக்கையில் அமர்ந்து அந்த அற்புதமான ஒளிமயமான காட்சியைத் தியானம் செய்தார்.
அன்றே தூரிகையைக் கையில் எடுத்து தாம் மனத்தில் கண்ட காட்சிக்கு ஓவிய உயிர் கொடுத்தார்.

அவருக்கு தமது மாணக்கர்களில் ஒருவன் உதவி செய்துள்ளான்.
ஒரு மாதத்திற்குள் அந்த அற்புத ஆதி சங்கரர் ஓவியம் உயிர்பெற்றது.
தாம் கண்ட கனவில் தோன்றிய படியே அந்த ஓவியம் அமைந்ததைப் பார்த்து ரவி வர்மா ஆனந்தக் கடலில் மூழிகினார். அந்த ஓவியம் தான் இப்போதும் மிகவும் பிரபலமாகி, பல பூஜை அறைகளிலும் கொலுவீற்றிருந்து, ரவி வர்மாவின் புகழைப் பரப்பியபடியே இருக்கிறது.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017