ஒரே தேசம் – ஒரே தேர்தல்
இந்தியாவில் ஒரே
சமயத்தில் லோக் சபா – மாநில சட்டசபைகள் ஆகியவற்றிற்கு 1952-லிருந்து நான்கு தேர்தல்கள்
நடந்துள்ளன. பிறகு தான் பலவித அரசியல் காரணங்களால் இந்தியாவில் அடிக்கடி தேர்தல் நடக்கும்
துர்லபம் ஏற்பட்டது. அது இன்னும் தொடர்கிறது. அந்த நிலையை தடுத்து நிறுத்த இப்போதைய
மோடி அரசு – “ஒரே தேசம் – ஒரே தேர்தல்’ – என்ற முன்பு நடைமுறையில் உள்ள நிலையை உண்டாக்க
ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க முயன்று வருகிறது. சமீபத்தில் லோக்சபா – ராஜ்ய சபா ஒன்றாகக்
கூடும் கூட்டத்தில் பாரத ஜனாதிபதி ராம்நாத் கோவிந் அவர்களும் இதே கருத்தையே வெளியிட்டு,
அதை அனைவரும் ஆராய்ந்து, அந்த நோக்கத்தை நிறைவேற்ற ஒருமித்த செயல்திட்டத்தைக் கொண்டுவர
வேண்டுகோள் விடுத்தார். இதற்காக, சமீபத்தில் மோடி – அமித் ஷா தலைமையில் பி;ஜே.பி. ஆட்சி
செய்யும் 19 முதல் மந்திரிகள் – துணை முதல் மந்திரிகள் அலோசனைக் கூட்டம் நடந்தேறியது.
இதைப் போல் பி.ஜே.பி.
இல்லாத மாநில முதல் மந்திரிகளின் ஆலோசனையும் கேட்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டு, இந்த
‘ஒரே தேசம் – ஒரே தேர்தல்’ என்பதை 2019 லோக் சபா தேர்தலிருந்தே நடைமுறைப்படுத்தும்
முயற்சி முன்னிறுத்தப்பட்டது. இதன் சாதக – பாதகங்கள் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டால்
தான் இதன் கொள்கையின் தன்மை மக்களுக்குத் தெரியவரும். மேலும் 31 மாநிலங்களில் சுமார்
20 மாநிலங்களில் பி.ஜே.பி ஆட்சி இருப்பதால், இந்த நல்ல தருணத்தை அரசியல் சாதுர்யம்
– சாணக்கியம் என்ற தத்துவத்தில் செயல்பட்டு வெற்றி பெற்றால், இந்திய வரலாற்றில் இந்த
செயல் திட்டம் சரித்திர முக்கியத்தம் வாய்ந்ததாகி விடும். வரும் காலம் தான் இதைத் தீர்மானிக்கும்.
தேர்தல் ஆணையம்
1980-களில் லோக்சபா – மாநில சபாக்களின் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பலவிதமான யோசனைகளை
அப்போதைய அரசாங்கத்திற்கு அனுப்பி இருந்தது. அதன் படி அப்போதே அது செயல்பட்டிருந்தால்,
ஒரே தேசம் – ஒரே தேர்தல் என்ற தத்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்பதையும்
இந்தத் தருணத்தில் நினைவு கூறவேண்டும்.
அப்போதே ‘ஒரே தேர்தல்
ஏன் வேண்டும்?’ என்பதற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அடிக்கடி தேர்தல்
நடப்பதால், தேர்தல் விதிமுறைகள் அப்போது அமல் படுத்தும் நிலையால், பொது மக்கள் மிகவும்
பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஏனென்றால் அந்த விதிமுறைகள் சில சமயங்களில் இரண்டு – மூன்று
மாதங்களுக்கு நடைமுறையில் இருப்பதால், அரசாங்க இயத்திரமே அந்த நாட்களில் முடங்கி விடுகிறது.
அத்துடன் தேர்தல்
செலவுகள் கணிசமாக குறையும் ஒரே தேர்தல் நடைபெற்றால். லோக் சபா தேர்தல் செலவு 2009-ல்
ரூபாய் 1115 கோடியாக இருந்தது, 2014-ல் நடந்த லோக்சபா தேர்தல் செலவு ரூபாய் 3870 கோடியாகி
மூன்று பங்கிற்கும் மேலாகச் செலவழிக்கும் நிலை ஏற்பட்டது.
இத்துடன் ஒவ்வொரு
லோக்சபா அங்கத்தினரும் சட்டப்படி ரூபாய் 70 லட்சம், ரூபாய் 28 லட்சம் சட்டசபை அங்கத்தினரும்
(இது சட்டசபையின் அளவைப் பொருத்து மாறுபடும்) செலவழிக்க வேண்டிவரும். மேலும் தேர்தலில்
ஊழல் என்பது தடுக்க முடியாத நிலையும் உண்டு. கருப்புப் பணம் தேர்தல் சமயத்தில் புழங்குவதும்
அதிகம் நிகழும். மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுகளுக்காக பணம் வசூல் செய்வதும்
நிகழ்ந்து, அதிலும் நேர்மையான கணக்கும் காண்பிக்கப்படுவதில்லை.
அடிக்கடி தேர்தல்
நடப்பதால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும், தேர்தல் பிரசாரத்தால்,
வகுப்புக் கலவரங்கள், போராட்டங்கள், அரசியல் படுகொலைகள் – ஆகியவைகளும் ஒரே தேர்தல்
என்ற நிலை ஏற்பட்டால், நாட்டிற்கு அமைதி ஏற்பட உதவியாக இருக்கும்.
அரசாங்க ஊழியர்கள்
தேர்தல்களில் அடிக்கடி ஈடுபட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், அவர்களது அன்றாட அலுவல்கள்
பாதிக்கப்பட்டு, மக்களுக்கு சேவை செய்யும் நேரமும் விரயமாகிறது.
அதைவிட முக்கியமான
ஒன்று, போலீஸ் – சிறப்பு படை ஆகியவர்களை அடிக்கடி தேர்தல் வேலைக்கு அழைப்பதால், மக்களின்
பாதுகாப்புப் பணிகள் வெகுவாகப்பாதிக்கப்படும் நிலை உண்டாகிறது.
ஒரே தேர்தல் என்ற
நிலை ஏற்பட்டால், அரசியல் கட்சிகள் நீண்ட கால தொலை நோக்குத் திட்டங்களில் கவனம் செலுத்த
முடியும். ஓட்டிற்காக குறுகிய நோக்கத்துடன் செயல்படும் மனப்பான்மையும் மாறும் நிலை
உண்டாகும்.
இதைச் செயல்படுத்த
அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புக் கொடுத்தால் தான் நடைமுறைப் படுத்த முடியும். மேலும்,
அரசியல் சாசன சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையின்
படி, 2019 தேர்தலில் ஆரம்பித்து, 2024 – தேர்தலில் ஒரே தேர்தல் இந்தியாவில் சாத்தியம்
என்று மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
அரசியல் ரீதியாக
இந்த ஒரே தேர்தலை எதிர்ப்பவர்கள் கூறும் காரணம் இதோ:
Ø ஓரே
தேர்தல் என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். ஏனென்றால், மாநிலத்தில் தனிப்பட்ட
பிரச்சனைகள் இந்த ஒரே தேர்தல் தத்துவத்தில் அடிபட்டுப் போகும். மக்கள் மத்தியில் ஆட்சியில்
இருக்கும் கட்சிக்கே ஓட்டுப் போடும் நிலை நீடிக்கும்.
Ø
அடிக்கடி
தேர்தல் வந்தால் கட்சியின் வேட்பாளர்கள் மக்களுக்குப் பதில் சொல்லும் நிலை உண்டாகும்.
இதனால் மக்களின் மதிப்பு அதிகரிக்கும். அவர்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும்.
2019 லோக் சபா
தேர்தலுடன் 5 மாநிலத் தேர்தல்கள் – அருணாசலப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா,
சிக்கிம் – நடைபெற உள்ளன.
இந்த தேர்தலுடன்
கீழ்க்கண்ட மாநிலத் தேர்தல்களையும் சேர்க்க அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. அதைச் சேர்ப்பதற்கு
அந்தந்த சட்டசபைகள் சில மாதங்கள் நீடிக்கவோ – குறைக்கவோ சட்ட திருத்தம் தேவை என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும். ( சட்டசபையை, + என்பது நீடிப்பு, - என்பது குறைப்பு)
1.
சக்தீஸ்கர்
- + 5 மாதம்
2.
ஹரியானா
- - 5 மாதம்
3.
ஜார்கண்ட்
- - 7 மாதம்
4.
மத்திய
பிரதேசம் - + 5 மாதம்
5.
மஹாராஷ்ரா -
- 5 மாதம்
6 6. மிஸோராம் -
+ 6 மாதம்
7.
ராஜஸ்தான் -
+ 5 மாதம்
8.
டெல்லி -
- 8 மாதம்
சட்டசபையை நீடிக்க
எதிர்ப்பு இருக்காது என்றாலும், 5 மாதம் ஹரியானா மற்றும் மஹாராஷ்ரா மாநிலச் சட்டசபைகளை
குறைக்கும் முடிவிற்கும், ஜார்க்கண்ட் 7 மாதம், டெல்லி சபை 8 மாதம் குறைக்கும் முடிவிற்கும்
எதிர்ப்புகள் உருவாகலாம். இருப்பினும், ஹரியானா – மஹாராஷ்ரா – ஜார்கண்ட் பி.ஜே.பி.
ஆட்சியில் இருப்பதால், டெல்லியைத் தவிர்த்து, மற்ற 7 மாநிலங்களை 2019 லோக்சபா தேர்தலுடன்
இணைப்பது சாத்தியமாகலாம். அது நிகழ்ந்தால், 2019 லோக்சபா தேர்தலுடன் 12 மாநிலத் தேர்தல்களும்
ஒரு சேர நடக்கலாம்.
மற்ற 19 மாநிலங்கத்
தேர்தலை 2012 – அக்டோபர் – நவம்பர் தேர்தலில் ஒன்றாக நிகழ்த்தினால், வருகிற 2024 லோக்
சபா தேர்தலில் அனைத்து மாநிலத் தேர்தல்களும் ஒன்றாக – ‘ஒரே தேசம் – ஒரே தேர்தல்’ என்ற
நிலை சாத்தியமாகும்.
முயன்றால் எதுவும்
சாத்தியமாகும். தடைகள் வரத்தான் செய்யும். அதையும் மீறி தேசத்திற்கு நன்மை என்று தெரிந்த
பிறகு, அதை மக்கள் மன்றத்தில் முறையிட்டு, நடை முறைப்படுத்துவதான் ஒரு தீர்க்க தரிசிக்கு
ஏற்புடையதாகும்.
மோடி ஒரு தீர்க்க
தரிசி. அவர் திட்டமான – ஒரே தேசம் – ஒரே தேர்தல்’ –என்பதை வெற்றி பெற மக்கள் அனைவரும்
ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
வந்தே மாதரம்!
பாதர மாதாவுக்கு ஜே!
Comments