ஶ்ரீ ராமஜென்மபூமி
அயோத்தியா
பிரச்சினையை இந்துக்களும், முஸ்லீம்களும் 1990 ஆண்டிலேயே
சுமுகமாக பேசி நல்லதீர்வை எட்டியபோது
இடையில் புகுந்து இந்து, முஸ்லீம் நல்லிணக்கத்தை
சீர்குலைப்பதற்காக, முஸ்லீம்களைத்தூண்டிவிட்டு பிரச்சினையை பெரிதாக்கி, பெரும் கலவரங்களுக்கு காரணமாக
இருந்தவர்கள் தேசவிரோதிகளான கம்யூனிஸ்ட்கள் - என்று 90,95 களில் தொல்லியல்
துறை இணை ஆணையாளராக பணியாற்றிய
K.K. முகம்மது தான் எழுதியுள்ள புத்தகத்தில்
தெரிவித்துள்ளார்.
அயோத்தியில்
பாபர் மசூதி இருந்த இடத்தில்
பல்வேறு காலகட்டங்களில், ஆய்வுகளை மேற்கொண்டு, ராமர்
கோயில் மீது தான் பாபர்மசூதி
கட்டப்பட்டுள்ளது என முதன்முதலில் ஆதாரப்பூர்வமாக
உலகிற்கு அறிவித்தவர் ஆர்க்கியோலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா
இணை ஆணையாளராக பணியாற்றிய திரு K.K.முகம்மது.
இது
தொடர்பான தகவல்கள் K.K. முகம்மது
மலையாளத்தில் எழுதியுள்ள
"ஞானென்ன பாரதியன்"
( ഞാനെണ
ഭാരതിയൻ ) என்ற சுய சரிதை
புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
கேரளா
மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவரான
இவர் 1988முதல்2012 வரை தொல்லியல் துறையில்
பணியாற்றி நாடுமுழுவதும் பல்வேறு ஆய்வுகளில் பங்கேற்றுள்ளார்.
K.K.முகம்மது தன்சுயசரிதையில் அயோத்தியா பற்றி அறிந்ததும் தெரிந்ததும்
உண்மையாக என அத்தியாயத்தில் பின்வருமாறு
எழுதியிருக்கிறார்.
நான்
பி.பி லால் தலைமையிலான
குழுவில் அங்கம் பெற்று அயோத்தியாவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது
பாபர் மசூதியின் சுவர்களில் 11,12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட
கோவில் தூண்கள் இருப்பதைக் கண்டோம்.
இரண்டு மாத கால ஆய்வில்
எட்டு ஐஸ்வர்ய சின்னங்களில் ஒன்றான பூர்ணகலசத்துடன்
கூடிய 14 தூண்கள் இருப்பதையும் கண்டோம்.
பாபர்மசூதியின் அடிப்பகுதியிலும், வசங்களிலும் இந்து புராதான கோவில்களில்
காணப்படுவது மாதிரியான இஷ்டிக அடித்தட்டுகளையும் காணமுடிந்தது.
ராமர்
கோவிலின் மீது தான் பாபர்
மசூதி, பாபரின் படைத்தலைவனாக இருந்த
மிர்பாக்கி'யால் எழுப்பப்பட்டுள்ளது என்பதற்கான
ஏராளமான ஆதாரங்களை அறிந்தோம்.
இந்த
தகவல்களையெல்லாம் நான் ஒரு அறிக்கையாக1990ல் வெளியிட்டேன்.
இந்தியன்
எக்ஸ்பிஸ், லட்டர்-டு- த
எடிட்டர் ஆகிய பத்திரிகைகள் அனைத்து
எடிஷனிலும் வெளிவந்தன. இந்தக் காலகட்டத்தில்தான்
அயோத்திப் பிரச்சினை மிகத் தீவிரமாக இருந்தது.
அயோத்தி, இந்துக்களின் உணர்வுப்பூர்வமான இடம் என்பதை ஏற்றுக்கொண்ட
முஸ்லீம்கள். ராமர்கோயில்மீது
கட்டப்பட்டுள்ள பாபர்மசூதியை
இடித்துவிட்டு ராமர்கோவிலை புணரமைக்க ஒப்புக்கொள்வதற்கு தயாராக இருந்தனர். பல
மிதவாத முஸ்லீம் அமைப்புகளும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தனர்.
நல்லமுறையில்
தீர்வை நோக்கிச் செல்லும் போது தான் ஜே.என் யு
வில் உள்ள இடதுசாரி வரலாற்றுப்பேராசிரியர்களான
S.கோபால், ரோமிலா மாப்பர், விபன்சந்திரா,
R.Sசர்மா, அக்தர்அலி, சூரஜ்பான், இர்பான் ஹபீப், T.N நந்தா,
போன்றவர்களின் தலையீடு சில தீவிர
முஸ்லீம் அமைப்புகளுக்கு உத்வேதம் அளிப்பதாக இருந்தது. இராமாயாணத்தை,
கற்பனைக் கதையென்றும், இராமர் ஒரு கற்பனை
கதாபாத்திரம் என்ற அளவிலும், பத்திரிகைகளிலும்,
பொதுக்கூட்டங்களிலும், மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனர்.
பல
இஸ்லாமிய மிதவாத அமைப்புகளிடமும் பாபர்மசூதி புராதான
சின்னம் என்றும் அதை இடிக்க
ஒப்புக்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தத் தொடங்கினர். இதில்
கொடுமை என்னவென்றால் மேற்குறிப்பிட்ட J.N.U பேராசிரியர்களில், சூரஜ்பானைத் தவிர யாரும் தொல்லியியலில்
சிறிதும் அனுபவம் இல்லாதவர்கள்.
வரலாற்றை எப்படி வேண்டுமாலும்
எழுதலாம். ஆனால்
தொல்லியியல் மூலமாகவே ஆதாரங்களை அறியமுடியும்.
பிறகு
இந்த பேராசிரியர்கள் பாபர் மசூதி ஆக்சன்
கமிட்டியின் ஆலோசகர்களாக அரசு சார்பாக நடந்த
ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பாபர்மசூதிக்கு
ஆதரவான நிலையை எடுத்துரைத்தார்கள். இவர்களை
அரசு மீட்டிங்கில் பங்கேற்கச்செய்ய அன்றைய
மத்திய வரலாற்று ஆராய்ச்சிக்கழகத்தின் தலைவராக இருந்த Dr.இர்பான்ஹபீப்
ஏற்பாடு செய்தார்.
டைம்ஸ்-ஆப்-இந்தியா போன்ற
ஊடகங்கள் இவர்களது தரப்பு கருத்தை மட்டுமே
முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. மக்களும் அரசும் கூட குழப்பமடைந்தது. இதைப்பயன்படுத்தி
தீவிர நிலைப்பாடுடைய முஸ்லீம் அமைப்பினருடன் சேர்ந்து, மிதவாத தலைவர்களும் மாறி
சிந்திக்கத் தொடங்கினர். இவ்வாறாக இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான
வாய்ப்பை கம்யூனிஸ்ட்கள் நிரந்தரமாக குழிதோண்டிப் புதைத்தனர். கம்யூனிஸ்ட் தீவிரவாதம் நாட்டுக்கு பெரும் சவாலாக இருக்கும்
என்பதை அப்போது நான்
உணர்ந்தேன்.
இந்தகாலகட்டத்தில்
நான் சென்னையில் ஆர்கியோலஜிகல்
சர்வே-ஆப்-இந்தியா- வில்
டெபுட்டி சூப்பிரண்டாக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
அப்போது
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வரலாற்று ஆய்வாளரும், தினமணி ஆசிரியராக இருந்த
ஐராவதம் மகாதேவனுடைய ஒரு கட்டுரையை படிக்க
நேர்ந்தது. அதில்
ராமர்கோவிலை இடித்துதான் பாபர்மசூதி கட்டப்பட்டது என்பதற்கு போதிய ஆதாரம் இல்லையென்றால்
மீண்டும் பாபர் மசூதி இருக்கும்
இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து பார்க்கலாம் என்றும்,
ஆனால் அதற்காக வரலாற்றுச்சின்னமான பாபர்
மசூதியை சேதப்படுத்துவது சரியானதல்ல என்றும் எழுதியிருந்தார்.
ஐராவதம் மகாதேவனுடைய இந்தக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும்
மாற்று மதத்தினருக்கு அவர் அளித்த மரியாதை
எனக்கு அவர்மேல் உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தியது.
அவருக்கு பாபர்மசூதியில் நான் பங்கேற்ற ஆய்வுக்குழு ஏற்கனவே ஆய்வு நடத்தியிருந்ததையும்
பாபர் மசூதியின் அடியிலும் பக்கவாட்டிலும் ராமர் கோவில் இருந்ததற்கான
ஆதாராங்கள் ஏராளமானவைகளை கண்டுபிடித்து அரசுக்கு ஆவணமாக அனுப்பியிருந்ததையும் ஒரு கடிதத்தில்
விவரமாக எழுதி அனுப்பினேன்.
கடிதம்
கிடைத்த, அன்றே தமிழக தலைமைச்
செயலகத்தில் உள்ள என் அலுவலகத்துக்கே
வந்துவிட்டார் மகாதேவன். என்னுடைய
கடிதத்தை பத்திரிகைகளில் வெளியிட அனுமதி கேட்டார். அரசு
அனுமதியில்லாமல் அரசு ஊழியரான நான்
ரகசிய தகவல்களை வெளியிட்டால் அது தற்கொலைக்குச் சமம்
என்றேன்.
பிறகு
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு உண்மையை மறைத்து
வைப்பது மனசாட்சிக்கு செய்யும் துரோகம் என்று வருவதைச்
சந்திக்கலாம் எனத் தீர்மானித்து கடிதத்தை
வெளியிட சம்மதம் தெரிவித்தேன்.
1990 டிசம்பர்15 அன்று
நாடு முழுவதும் முண்ணனி பத்திகைகளில் என்னுடைய
கட்டுரை வெளியானது. அதைத்
தொடர்ந்து தொலைபேசி வாயிலாக பல கொலை
மிரட்டல்கள் வந்தன. ஆர்க்கியோலஜிகல் டைரக்டர்
ஜெனரல். திரு.ஆர்.டி
திரிபாதியும்,மத்திய பண்பாட்டுத் துறை
செயலாளர் திரு
எம்.சி ஜோஷியும் என்னை
அழைத்த்தார்கள். அரசின் அனுமதி பெறாமல்
ஆவணங்கள் வெளியிட்டதற்காக என்னை கண்டித்தார்கள்.
நான் நாட்டின் நன்மைக்கு வேண்டியே தகவல்களை வெளியிட்டேன் எனக்கூறி பிரபல சமஸ்கிருத ஸ்லோகம்
ஒன்றைக் கூறினேன்.
#லோகசங்ரமேவாபி_சம்பர்ஸ்யன் #கர்த்துமர்ஹசி .
அலாகாபாத்
பிராமணான எனக்கே சமஸ்கிருதம்
சொல்லிக்கொடுக்கிறாயா?
என கோபப்பட்டார் திரிபாதி.
உன்னை
சஸ்பெண்ட் செய்கிறேன் என்றார்.
நான்
அமைதியாகச் சொன்னேன்.
#ஸதர்மேநிதநம்ஸ்ரேய.
#ஸமதர்மநிர்வஹணத்தில்
#மரணமேயானாலும்அதை_ஏற்கிறேன் என்றேன்.
பிறகு
என்னுடைய மன உறுதியைக்கண்டு
என்னைப் பாராட்டினார்.
நீ
ஒரு ஆர்க்கியோலஜிஸ்ட்'ஆக இப்போது சொல்ல
வேண்டிய அவசியம் இருப்பதை உணர்கிறேன்.
ஆனாலும் மேலிட நிர்பந்தம் இருப்பதால்
நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
பிறகு
எதிர்பார்த்த படியே, சஸ்பெண்ட் ஆர்டர்
கிடைத்தது. இதையறிந்த
ஐராவதம் மகாதேவன் மிகவும் வருத்தப்பட்டு, மேலிடத்தை
நிர்பந்தித்து சஸ்பெண்ட் 'டை பணிமாறுதலாக
குறைத்தார்.
கோவாவிற்கு
பணிமாறுதல் செய்ப்பட்டேன்.
கோவாவில்
நான் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் 1992 டிசம்பர்6 ல் பாபர்மசூதி இடிக்கப்பட்ட
செய்தி கிடைத்தது. பாபர்மசூதி இடிக்கப்பட்ட இடத்திலிருந்து ராமர்,
சீதாதேவி, சிவ பார்வதி சிலைகள்
உள்பட ஏராளமான இந்து தெய்வங்களின் சிலைகள்
எடுக்கப்பட்டன.
கி.மு 100க்கும் கிமு300
க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட 263 புராண வஸ்துகள் கிடைத்ததாக
உத்தர்பிரதேஷ் ஆர்கியோலஜிகல் டைரக்டர் Dr.ராகேஷ் திவாரி அறிக்கை
அளித்தார். புராதானப்
பொருள்களை சேகரித்த 131 பேர் கொண்ட குழவில்
52 பேர் முஸ்லீம்களும் இருந்தனர். இராமர்
கோவிலின் மீது தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன
ஆதாரம் கேட்கிறீர்கள் என அலகாபாத் உயர்நீதி
மன்றமே கேள்வி கேட்டது. அலகாபாத்
நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் இடதுசாரிகள்
மீண்டும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருந்தார்கள்.
இடது
சிந்தனையாளர்கள், யாருக்குமே பீல்டு ஆர்க்கியோலஜிகல் அனுபவம்
சிறிதும் இல்லையென்றாலும் அவர்களின் குரல் தொடர்ந்து ஓங்கி
ஒலிப்பதும் , அவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைப்பதும்
ஆச்சரியமாக உள்ளது.
என்னைப்
பொறுத்தவரையில் அயோத்தி இந்துக்களின்
கடவுளான இராமர் பிறந்த இடம்.
"
முஸ்லீம்களுக்கு மெக்காவும், மதினாவும் எப்படியோ, அப்படித்தான் இந்துக்களுக்கு அயோத்தியும், காசியும், மதுராவும். மெக்காவையோ, மதினாவையோ, வேற்று மதத்தினர் ஆக்கிரமித்தால்
அதை முஸ்லீம்களால் தாங்கிக் கொள்ள முடியுமா? ஒரு
முஸ்லீமாக இதை எண்ணிப்பார்க்கவே முடியாது.
காலங்களாக
முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பில் கொல்லப்பட்ட இந்துக்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. கொள்ளையடிக்கப்பட்ட
சொத்துக்களும் எண்ணிலடங்காது. 50,000 மேற்பட்ட
கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பெருமளவிலான கோவில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன. அதை
அனைத்தையுமே இந்துக்கள் திருப்பிக் கேட்கவில்லை.
இந்துக்களின்
முக்கிய புண்ணிய வழிபாட்டுத் தலங்களான
அயோத்தி, காசி, மதுரா ஆகிய
மூன்றை, மட்டுமே இந்துக்கள் கேட்கிறார்கள்.
இந்த
மூன்றையுமே இந்துக்களிடம், ஒப்படைத்து, முஸ்லீம்கள் தாங்கள்
செய்த பாவத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதே என் கருத்து.
என்னுடைய
சிறு வயது சம்பவம் ஒன்று
ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்ரேலில் ஜருஸ்லேமில் உள்ள
பைதுல்முகத்திஸ்'ஐ யூதர்கள் கைப்பற்றிய
செய்தியறிந்து எங்கள்
ஊர் மசூதி முன்பாக ஊர்மக்கள் அனைவரும் கூடி கதறி அழுதோம்.
முஸ்லீம்களுக்கு திரும்பக்கிடைக்க வேண்டி அல்லாவிடம் பிரார்த்தித்தோம்.
இதற்கும்அது
முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்குமான பொதுவான இடம். ஒரு மதத்தினரின் வழிபாட்டுத்
தலத்தை ஆக்கிரமிப்பது அது அவர்களுக்கு எவ்வளவு
வேதனையைத் தரும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
அயோத்திக்கும்,
முகம்மது நபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால்
அயோத்திக்கும் ராமருக்கும் அப்படியா? ராமர் பிறந்த இடமல்லவா
அயோத்தி.
அதை
கைப்பற்ற நினைப்பது இந்துக்களுக்கு எவ்வளவு மன வேதனை
அளிக்கக் கூடியது என்பதை முஸ்லீம்கள்
ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?
சுதந்திரத்திற்குப்
பிறகு முஸ்லீம்களுக்கென தனிநாடு
கேட்டு பிரிந்து சென்றபின்னரும் கூட இந்தியாவை இந்து
நாடாக ஆக்காமல் மதச்சார்பற்ற நாடாகவே வைத்திருக்கும் இந்துக்களின்
பரந்த மனப்பாண்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதுவே
இந்துக்கள் தனிநாடு வாங்கிப் போயிருந்தால்
முஸ்லீம்கள் இந்தியாவை இதுபோல
மதச்சார்பற்ற நாடாக ஆக்கியிருப்பார்களா? அல்லது
இந்துக்கள் அல்லாமல் வேறு மதத்தினர் இந்தியாவில்
பெரும்பாண்மையினராக இருந்திருந்தால் முஸ்லீம்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதையும்
முஸ்லீம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறாக
எழுதியுள்ளார் திரு KK முகம்மது.
Comments