காங்கிரஸின் முந்தய மூன்று மத்திய அமைச்சர்களின் வாசகங்கள்
நமது
மத்திய அரசாங்கத்தின் மூன்று மும் மூர்த்திகள் 2011-ல் அவர்கள் பதவியில் இருந்த கால கட்டத்தில் உதிர்த்த பொன் மொழிகள் இப்போது நினத்துப் பார்த்தாலும், நம்மை எல்லாம் சோகத்தில் ஆழ்த்தும் என்பது திண்ணம். .
1.
“முக்கிய
கடிதத்தைப் பெற்றதற்கு ஒப்புக் கொண்டாலே, அதற்குப் பதில் அளித்தாகத்தான் அர்த்தம்” என்பதின் ஆங்கில மொழி பெயர்ப்பு இன்னும்
சுலபமாகப் புரியும். “Acknowledgement
of letter itself is Action” – இந்தப்
பொன் மொழிக்குச் சொந்தக் காரர் நமது பிரதம மந்திரி மதிப்பிற்குரிய திரு. மன்மோஹன் சிங்க்.
(இது 2 ஜி ஸ்பெக்ரம்
புகழ் ராஜா – பிரதமர் எழுப்பிய மிகவும் முக்கியமான கேள்விகளுக்கு கடிதம் கிடைத்த அன்றே
ஒரு சில மணிகளிலேயே, ‘நான் முன்பு குறிப்பிட்டவைகள் அனைத்தும் சரியானவையே. நான் அப்படித்
தான் செய்யப்போகிறேன்’ என்ற ராஜாவின் கடிதத்திற்கு,
‘பெற்றுக் கொண்டேன்’ என்ற ஒரு வரிப் பதில் கடிதம்
எழுதியது நமது பிரதர் அலுவலகம்!)
2.
“எந்தச்
செயலும் செய்யாமல் இருப்பதும் செயல்தான்”
என்றதின் ஆங்கில மொழி பெயர்ப்பு: No Action is also Action. இந்த பொன் மொழிக்குச் சொந்தக்காரர் திருவாளர் ப.சிதம்பரம்
– மத்திய உள்துறை அமைச்சர். (இது காஷ்மீர் தீவிரவாதிகள் சிலரைக் கைது செய்யாமல் இருப்பதைப்
பற்றிக் கேட்ட பொழுது, உதிர்த்த பொன்மொழிகள்.)
3.
“தவறான
உரையைப் படிப்பதில் என்ன தவறு?” எனறதின் ஆங்கில மொழி பெயர்ப்பு:
What is wrong with a wrong speech. இந்தப் பொன் மொழிக்குச் சொந்தக்காரர்
வெளியுறவு மந்திரி திருவாளர் எஸ்.எம். கிருஷ்ணா. (இது யு.என். பாதுகாப்புச் சபையில்
நமது நாட்டு உரைக்குப் பதிலாக போர்ச்சுகீஸ் நிதி அமைச்சரின் உரையை சுமார் மூன்று நிமிடங்கள்
முழகங்கியதற்கு உதிர்த்த பொன் மொழிகள்.)
அப்போது இதைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு, நமது ஆதங்கத்தை இப்படி வெளியிட்டுள்ளோம்.
"உள்
நாட்டுக் கொள்கையும் சரியில்லை. உணவுக்கொள்கையும் சரியில்லை. வெளியுறவுக் கொள்கையும்
சரியில்லை.
‘தலையும்
சரியில்லை. வாலும் சரியில்லை’ என்று நாம் நம் தலையில் அடித்துக்
கொள்வதும் சரியில்லை.
பிரதமர்
காங்கிரஸ் அதிபதியான திருமதி. சோனியாவுக்குப்
பயப்படுகிறார். தன் பதவியைத் தக்க வைப்பதற்குத் தான் நமது பிரதமர் முயற்சிக்கிறாரே
தவிர நாட்டின் நலன் நட்டாற்றில் விடப்பட்டு விட்டது.
இளைய
தலைமுறையினரைக் கவர்ந்த நமது பாரதப் பிரதமர் நல்லவராக இருப்பது எந்த விதத்திலும் நாட்டிற்கு
நலன் பயக்காது. சிறந்த நிர்வாகியாகச் செயல்படுவதுதான் நமக்கு வேண்டும். அதை நாம் நமது
பிரதமரிடம் எதிர்பார்க்க முடியாது என்பது உறுதியாகி விட்டது.
பிரதமரை
யாரும் மதிப்பதில்லை. அதைப் பற்றி அவரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
மவுனமாக
இருப்பதால், நமது பாரதப் பிரதமருக்கு இருக்கும் ‘ஊழல் செய்யாத உத்தமர்’ என்ற அந்த ஒரே நல்ல குணமும் ‘ஊழலைத் தடுக்காத
பிரதமர்’ என்ற அவப்பெயரினால் எடுபடாது
போகும் சூழ்நிலை உருவாகி விட்டது.
இன்னமும்
காலம் தாழ்த்தாமல் செயல்பட்டு, நாட்டின் அவப்பெயரை ஓரளவுக்காவது காப்பாற்ற முனைய வேண்டியது
நமது பாரதப் பிரதமரின் அவசரக் கடமையாகும்."
இந்த கால கட்டத்திலும் காங்கிரஸ் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல், ராகுல் யு.எஸ். சென்று உதிர்த்த அப்பட்டமான அபத்த உரைகளையும், உரையாடல்களின் போது வெளிப்படுத்திய 'ஆர்டிவிஷியல் இண்டலிஜண்ட்' டிரேட் மார்க் தலைவர் ராகுலை இன்னும் சில மாதங்களில் காங்கிரஸ் பிரசிடண்டாகத் தேர்வு செய்யும் முடிவை எடுத்த காங்கிரசை நினைத்தால் சிர்ப்புத்தான் வருகிறது. 'வாரிசு அரசியல் காங்கிரசுக்கு மட்டும் இல்லை. மற்ற அரசியல் கட்சிகளிலும் உண்டு. இது இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதது' என்றும், 'காந்தி, நேரு,அம்பேத்கார், பட்டேல், ஆசாத் அனைவரும் என்.ஆர்.ஐ.யே. நானும் என்.ஆர்.ஐ. நிங்களும் என்.ஆர்.ஐ.தான். உங்களின் கருத்துக்களைக் கேட்டு, காங்கிரஸ் செயல்படும்' என்றெல்லாம் யு.எஸ்.சில் வெளிப்படுத்தி, தனது அறியாமையை வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் இந்தியாவில் தனது அரசியல் மதிப்பை உயர்த்த நினைத்து அதிலும் தோல்வி அடைந்துள்ளார். பேஸ் புக் - டிவிட்டரில் இதைப் பற்றிய கேலிப்பேச்சை மிகவும் கேவலமாக விமரித்துள்ளனர். 'இந்த ராகுல் திருந்தவே மாட்டாரா?' என்று பல காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் கவலைகொண்டதாகத்தான் படுகிறது. ஆனால், அதற்கு விமோசனம் தான் தென்படவில்லை.
Comments