நவராத்திரி விழா – 21-09-2017 வியாழன் ஆரம்பித்து 29-09-2017 வெள்ளி வரை
சிவபெருமானுக்கு
சிவராத்திரி ஒரு நாள். ஆனால் நவராத்திரி விழாவில் மூன்று தேவிமார்களான இச்சா சக்தியான
துர்கா தேவிக்கு முதல் மூன்று நாட்கள், அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியான மகா
லட்சுமிக்கு, கடைசி மூன்று நாட்கள் ஞான சக்தியான சரஸ்வதிக்கு என்று நவராத்திரியாக
– ஒன்பது ராத்திரியாக அந்த மூன்று தேவியர்களும் இரவில் பூஜிக்கப்படுகிறார்கள். ஆண்டிற்கு
நான்கு நவராத்திரிகள் உண்டு. வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, பாத்ரபத அல்லது சாரதா
நவராத்திரி என்பதாகும். இதில் கடைசியாக வரும் சாரதா நவராத்திரியைத் தான் 21-09-2017
ஆரம்பித்து கொலு – கோலாட்டம் என்று அந்த நவராத்திரி மிகவும் கோலாகலமாக இந்தியா முழுவதும்
கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைக் கூடுதலாகச் சேர்த்து தசராவாக
மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு தசராவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வங்காளத்தில்
துர்க்கா பூஜை என்ற பெயரால் மிகவும் ஆர்வமாக துர்க்கா சிலைகளைக் நிறுவி கொண்டாடுகிறார்கள்.
இந்த முப்பெரும்
சக்தி தெய்வங்கள் ஒவ்வொன்றுக்கும் மும் மூன்று அம்சங்கள் உண்டு.
துர்கை: மகேஸ்வரி,
கெளமாரி, வராகி.
லட்சுமி: மகா லட்சுமி:
வைஷ்ணவி, இந்திராணி
சரஸ்வதி: சரஸ்வதி,
நாரிசிம்மி, சாமுண்டி.
ஒன்பது நாட்கள்
மகிஷாசுரனுடன் போரிட்ட துர்க்கா தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள்.
இந்நாளே விஜயதசமி – வெற்றி நாள் – என்று கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் குழந்தைகளின்
கல்வி கற்பிப்பதை ஆரம்பிப்பார்கள். அந்த நாளில் ஆரம்பிக்கும் அனைத்தும் வெற்றியை நல்கும்
என்பது நம்பிக்கை.
ராமன் இந்த விஜயதசமி
அன்றைத் தேர்வு செய்து ராவணனுடன் போருக்குப் புறப்பட்டதாக வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.
பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் முடிந்து, தாங்கள் கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் இந்த
விஜயதசமி நாளில் எடுத்துப் பிரித்துக் கொண்டனர் என்று மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நவராத்திரி
பற்றிய புராணக் கதை:
ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். பெண்களால் தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தைப் பெற்றான். அந்த வரத்தின் மமதையால் தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். அவனை வெற்றி
கொள்ள சிவன் தன் சக்தியால் ‘சந்தியாதேவி’ என்ற சக்தியை உருவாக்கினார். சந்தியா தேவியின்
அழகில் மயங்கிய மகிஷன் அவளை திருமணம் செய்ய விழைந்தான். ஆனால், சந்தியா தேவி ‘போரில்
என்னை ஜெயிப்பவர்களையே மணம் செய்வேன்’ என்ற நிபந்தனையில்படி, மகிஷன் போருக்கு வரவும்,
அவனை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷனிடம் போர் செய்து வென்று தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசுரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.
கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் உருவான சம்பவம்
கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் உருவான சம்பவம்
தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார்.
“நீ காளியை வணங்கு. வெற்றி நிச்சயம்” என்றார் குருதேவர்.
தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா.
காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்” என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.
“நீ காளியை வணங்கு. வெற்றி நிச்சயம்” என்றார் குருதேவர்.
தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா.
காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்” என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.
நவராத்திரியின் ஒன்பது
நாட்களிலும் பெண்கள் ஒவ்வொரு நாளில் மஞ்சள், பச்சை, பழுப்பு, ஆரஞ்சு,
வெள்ளை, சிகப்பு, கரும் நிலம், இளம் சிவப்பு, ஊதா என்று ஒன்பது வண்ண வண்ண ஆடைகளால்
தங்களை அலங்கரித்தும், துர்கை, லட்சுமி, சரஸ்வதி போன்று வேடமணிந்தும்,
கொலுவைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று, ஆடிப்பாடியும், கீர்த்தனைகள் –
ஸ்லோகங்கள் இசைத்தும், கோலாட்டம் – கும்மி ஆகிய விளையாட்டுக்களை ஆடியும், குஜராத்
– மஹாராஷ்ரா போன்ற இடங்களில் தாண்டியா என்ற கோலாட்டங்களையும் ஆடி பெண்கள் ஆனந்த
சாகரத்தில் திலைப்பார்கள்.
பத்தாம் நாள் தசராவாக டெல்லியில்
நடைபெறும் ராம் லீலா கொண்டாட்டத்தில் பெரிய அளவில் நிறுவப்படும் ராவணன், மேகநாதன்
மற்றும் கும்பகர்ணன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகள் எரிக்கப்படும் நிகழ்ட்சி
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாக நடைபெறும். அப்போது பலர் ராமர், இலக்குவன், பரதன்,
அனுமான், சீதை என்று வேடமிட்டு ராமாயணக் காட்சிகளை நமக்கு நினைவூட்டுவதாக அமையும்.விஜய தசமியில் ஆயுத பூஜை ஒரு
சிறப்பு அம்சமாகும். வாழ்வு சிறப்பாக அமைய உதவும் ஆயுதங்களை பூஜைப் பொருளாக
வைத்து, சக்தி-செல்வம்-கல்வி ஆகிய தேவிகளை நினைத்து பூஜித்து வணங்குவர். ‘செய்யும்
தொழிலே தெய்வம்’ என்பது தான் இதில் அடங்கியுள்ள தத்துவமாகும். அதாவது செய்யும்
தொழிலில் நேர்மை, நியாயம், தர்மம் ஆகியவைகளைக் கடைப்பிடிப்போம் என்ற உறிதிமொழியை மீண்டும்
நிர்ணயம் செய்யும் பூஜையாகும்.
அன்னை பராசக்தி, மஹா லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிமார்களின்
பரபூர்ண அருள் வாய்மை வாசகர்கள் – அவர்களின் உற்றார் உறவினர்கள் ஆகிய அனைவருக்கும்
கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
Comments