பாரதம் – இந்தியாவின் இதயம்
பாரத
பூமி புண்ணிய பூமி. ரிஷிகளின் வேதங்கள், ஆன்மிகத்தின் ஆணிவேராகத் திகழும் உபநிடதங்கள்,
பல புண்ணிய இதிகாசங்கள் என்று தேசமே தர்ம பூமியாக உருவாகியது.
தர்மம்
சிறக்க – செழிக்க – நிலைபெற – நான்கு வர்ணங்களை தோற்றுவித்தனர். வேதங்களை ஓதும் பிராமணர்கள்,
தேசத்தை காக்கும் வீரம் மிக்க சத்திரியர்கள், வாணிகம் செய்யும் வைஷ்யர்கள் – இந்த வர்ணத்தவர்களுக்கு
உதவியாகச் செயல்படும் தொழிலாளர்களாக இருக்கும் சூத்திரர்கள் என்று விதித்தனர். ஆனால்,
இந்த ஏற்பாட்டில், வர்க்க பேதம் – ஆட்சி அதிகாரம் – உயர்வு தாழ்வு என்ற பேதங்களால்
மாசு ஏற்பட்டு, தீண்டாமை என்ற பூதம் உருவெடுத்து, அது பூதாகாரமாகி இந்தியாவின் இதயமான
பாரதத்தையே தாக்கியது. ஆனால், அதை உயர்நிலை மூன்று வர்ணத்தார்களில் பல தலைவர்கள் இந்த
அநீதிக்கு முடிவுகட்ட பல கால கட்டங்களில் செயல்பட்டுள்ளனர்.
நான்கு
வர்ணங்களைப் பற்றி பகவத் கீதை – அத்தியாயம் 4 – 13 & அத்தியாயம் 18 – 41-லிருந்து
44-வரை உள்ள ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து ‘இந்த வர்ணங்கள் தொழில்
தொடர்பினால் அவர்களின் குணாதிசயங்களின் அடிப்படையில் என்னால் உருவாக்கப்பட்டுள்ளது’
என்று கிருஷ்ணன் விளக்கி உள்ளார். குணம் என்பது மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவைகள் – சத்வம், ரஜஸ், தமஸ் – ஆகியவைகளாகும். இவைகள் மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும்
கிருஷ்ணன் பகவத் கீதையில் 18-வது அத்தியாயத்தில் கூறியுள்ளார்.
மூன்று
குணங்கள் மூலம் நான்கு வர்ணங்கள் உருவாகின. சத்வம் அதிகமாகவும், ரஜஸ் – தமஸ் குறைவாகவும்
உள்ளவன் பிராமணன். ரஜஸ் அதிகமாகவும், சத்வம் – தமஸ் குறைவாகவும் உள்ளவன் ஷத்திரியன்.
ரஜஸ் அதிகமாகவும், தமஸ் – சத்வம் குறைவாகவும் உள்ளவன் வைஷ்யன். தமஸ் அதிகமாகவும், ரஜஸ்
– சத்யம் குறைவாகவும் உள்ளவன் சூத்திரன். ஆகையால் பகவான் கிருஷ்ணனின் கீதை வாக்கியப்படி,
வர்ணம் என்பது ஜாதியைக் குறிக்காமல், அவர்களின் குணங்களையே குறிப்பிடும். ஆனால், இது
பலகாலமாக மீறப்பட்டு, பாரதத்தின் இதயம் புண்பட்டு அதனால் பல வர்ணத்தினரும் துன்பப்பட்டது
பாரத தேசத்தின் கருப்பு அத்தியாயமாகும். இதனை உயர் ஜாதியினரே ஒப்புக் கொண்டு, அதற்கு
விமோசனம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாரத
தேசம் முஸ்லீம்களின் படையெடுப்பால் பல கலாச்சாரக் கட்டிடங்கள், நாளந்தா போன்ற பெரிய
நூலகங்கள், கோயில்கள் இடிக்கப்பட்டு, ஹானியையும், தீராத பகையினையும் ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆதிக்கம் மத பேதத்தையும், ஆங்கில மொழியையும் பாரத தேசத்தில்
புகுத்தி, கிருஸ்துவ மத மாற்றங்களையும் பாரத தேசத்தில் ஏற்படுத்தி, ஹிந்து மதத்தையும்
– ஹிந்து மத சிந்தனைகளையும் சீரழக்க முயன்று இந்தியாவின் இதயத் துடிப்பையே துண்டிக்க
முயன்றனர்.
பாரதம்
அதன் காரணமாக பாகிஸ்தான் – இந்தியா என்று பிளவு பட்டு, காஷ்மீரும் முழுமையாக இந்தியாவுடன்
இணையாமல் தனித்தன்மை கொண்டு, அதன் விளைவுகளை இன்றும் அனுபவைக்கும் நிலையைக் காண்கிறேம்.
இடதுசாரி
சிந்தனையாளர்கள் – பாரதத்தின் பழம் பெரும் உன்னத நிலையை இகழ்ந்து, ஹிந்து மதத்தையும்,
ஹிந்து மதத்தின் உயரிய ஆன்மீக சிந்தனைகளையும், வேதம் – உபநிடதம் – யோகம் ஆகியவைகளின்
அற்புதமான அரோக்கியமான அறிவுபூர்வமான கருத்துப் பதிவுகளை எல்லாம் கேவலமாக நிந்தித்து,
அனைத்து பாஷைகளின் தொன்மையான சமஸ்கிரதத்தை ஒதிக்கி – அவமதித்து, பாரதத்தின் இதயத்தையே
ரண சிகிட்சை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இளைய
சமூதாயம் விழித்துக் கொண்டு விட்டது. அதுவே பாரதத்திற்கு புனர்ஜென்மமாகும். ஹிந்து
மதம் பல வண்ண வண்ண விழாக்களைக் கொண்டதாகும். ஹிந்து சமூகம் அதன் மூலம் பலவிதமான – வர்ண
ஜாதி தொழில் உயர்வு – தாழ்வு ஆகியவைகளை எல்லாம் மறந்து கொண்டாடி பாரதத்தின் இதயத்திற்கு
வலுவூட்டி, பாரத தேசத்தின் உன்னத கொள்கைகளை அறிந்து, பரப்பி, உயிர்ப்பித்து, இந்தியாவின்
பெருமையை நிலை நாட்டுவோமாக.
பாருக்குள்ளே
நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு
பாரத
மாதவுக்கு ஜே!
Comments