காந்திஜியின் தனிச் செயலாளர் வெங்கட்ராம் கல்யாணம்:



வெங்கட்ராம் கல்யாணம் – 1922-வது வருடம் ஆகஸ்ட் 15-ல் பிறந்தவர் – இப்போது அவருக்கு வயது 95. அவர் மஹத்மா காந்தியின் தனிச் செயலாளராகப் பணி ஆற்றியவர். இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தில் காந்திஜியுடன் இவரும் கல்கத்தாவிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் பெலியகாட்டா என்ற இடத்தில் தங்கி இருந்தனர். நேரு காந்தியை சுதந்திரத் தினத்தன்று டெல்லிக்கு வரும்படி அழைத்த போது, காந்திஜி சொன்னார்:’ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமை எனக்கு சுதந்திரத்தை விட மிகவும் முக்கியமானதாகும்.’  காந்திஜி பிளவுபடாத இந்தியாவையே விரும்பினார். ஆனால், நேருவும் – ஜின்னாவும் அவர்களின் திட்டப்படி இந்தியாவைப் பிளவு படுத்திவிட்டனர் என்று கல்யாணம் குற்றம் சாட்டுகிறார்.

அவர் மேலும் சொன்ன தகவல்கள்:

கல்கத்தாவில் ‘நேரடி செயலில் இறங்கும் நாள்’ என்று 16-08.-1947 நாளை குறிப்பிட்டு, மொஹமத் ஜின்னா அழைப்பு விடுத்தார். அப்போது வங்காளத்தின் பிரதம மந்திரியாக ஹுசைன் ஷஹீட் சுஹ்ராவார்டி இருந்தார். அவர் எல்லா ஹிந்துக்களையும் சூரையாடும் படி உத்திரவு பிறப்பித்தார். இதனால், 10,000 பேர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பெரும்பான்மையினர் இந்துக்கள். ஜின்னாவும், சுஹ்ராவார்டியும் இஸ்லாம் மதவெறியர்கள். அவர்கள் ஹிந்துக்களைக் கொல்ல ஆணை இட்டவர்கள். அவர்கள் இந்த மதக் கலவரத்தை தடுக்க எந்த முயற்சியும் செய்ய வில்லை. இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லீம்களாக இருந்திருந்தால், நமது வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் இடதுசாரிகள் இதைப் பற்றி பக்கம் பக்கமாக பல புத்தகங்களை எழுதிக் குவித்திருப்பார்கள்.  

கல்யாணம் தான் காந்திஜியின் ‘காங்கிரசைக் கலைக்கவும்’ என்ற அறிவிப்பை எழுதியவர். அதைப் பற்றி கல்யாணம் சொல்கிறார்: ‘காந்திஜி காங்கிரஸ் கலைக்கப்படவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். காங்கிரஸ் உருவனதே – நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் – என்ற கொள்கைக்கு மட்டும் தான். ஆகையால் நாடு சுதந்திரமடைந்தவுடன், காங்கிரஸ் உருவான லட்சியம் பூர்த்தியாகிவிட்டது. காங்கிரசைக் கலைத்துவிட்டு, லோக் சேவக் சமிதி என்ற புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கு உழைக்க விரும்பினார். ஆனால், இதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. காங்கிரசில் ஊழல் மலிந்து தேர்தலிலும் படு தோல்வி அடைந்துள்ளது. மோடி அரசு நன்றாகச் செயல்படுகிறது. மோடி சரியான பாதையில் நாட்டை வழிநடத்துகிறார்.

சுதந்திர தினத்தில் பிறந்த நீங்கள் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவீர்களா? என்று கேட்டதற்கு, ‘இப்பொழுதும் வங்காளத்தில் நடைபெறும் கலவரத்தைப் பார்க்கும் போது, கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று மிகவும் ஆதங்கப்பட்டார்.


காந்தியால் காங்கிரசை கலைக்க முடியாததை ராஹுல் அனேகமாக காங்கிரசை 44 இடங்களை லோக்சபாவில் பெற்று நிறைவேற்றி விட்டார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017