மோடியின் 71-வது சுதந்திர தின எழிச்சி உரை – புதிய இந்தியாவை அமைப்போம்!
இந்திய
சுதந்திர இயக்கத்தின் முக்கிய திருப்பம் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற
மஹாத்மாவின் அறைகூவலும், ‘பூர்ண சுதந்திரம் நமது பிறப்புரிமை’ என்ற லோகமான்ய
திலகரின் முடிவுமாகும். இதனால், 1942-ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகளில் நம் நாடு
பூர்ண சுதந்திரம் அடைந்தது. 1942-ம் ஆண்டு எடுத்துக் கொண்ட உறுதிமொழியான
‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற மக்களின் ஒட்டுமொத்த சுதந்திர தாகத்தின் சக்தி
சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய மைல்கல்லாகும். அதைப் போல் 70 ஆண்டுகள் இந்தியா
சுதந்திரம் பெற்று பூர்த்தியாகிய நிலையில் வருகிற 75-வது சுதந்திர தினத்தில்
வருகிற ஐந்து ஆண்டுகளில் புதிய பாரதத்தை 2022 ஆண்டுக்குள் உருவாக்க உறுதி மொழி
எடுக்க இந்திய மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் நமது பாரதப் பிரதமர் மோடி.
ஊழலற்ற,
தூய்மையான, ஏழ்மை அற்ற, தீவிரவாதமற்ற, ஜாதிவெறியற்ற, மதவாதமற்ற இந்தியாவை நாம்
அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய இந்தியாவை 2022 ஆண்டிற்குள் உருவாக்குவோம் என்ற
உறுதிமொழியை இந்திய மக்கள் எடுத்து அந்த இலக்கை நோக்கிய பயணத்திற்கு
வித்திட்டுள்ளார் மோடி.
தொலை
நோக்குடன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டீம் இந்தியா மூலம் நியூ இந்தியாவை
உருவாக்க மோடி தாம் மேற்கொண்ட செயல்பாடுகளை 71-வது ஆண்டு சுதந்திர விழா அன்று
செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு பட்டியலிட்டு, உரை நிகழ்த்தி உள்ளார்.
அந்த
உரையின் முக்கிய அம்சங்கள்:
·
- பல வருடங்களாக ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் பினாமி சொத்துக்களை ஒழிக்க துணிந்து எடுத்த நடவடிக்கைகளால், £ 800 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அரசாங்கம் குறைந்த கால அவகாசத்தில் பறிமுதல் செய்துள்ளது.
- · ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் – என்ற ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படையினரின் கோரிக்கை 30-40 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்தது, இப்போது முடிவிற்கு வந்துள்ளது.
- · மிகவும் கடினமான ஆனால் பயன் தரக்கூடிய சரக்கு-சேவை வரி அமல் படுத்தப்பட்டு, அதன் பலன்களை மக்கள் பெறும் நிலை உண்டாகி இருக்கிறது.
- · புதிய ரயில் பாதைகள், சாலைப் போக்குவரத்து வசதிகள், வங்கிக் கணக்கு வசதிகளை அனைவருக்கு அளித்தல் ஆகியவைகளுடன், புதிதாக சுமார் 2 கோடி ஏழை மக்களுக்கு சமையல் எரிவாய்வு அளித்து புதிய இந்தியாவிற்கு அடிக்கல் நாட்டி உள்ளது.
- · 8 கோடி பேர்கள் வங்கியில் எந்தவிதமான உத்திரவாதமும் இன்றி கடன் பெற்று சுய தொழில் செய்ய வழி வகுத்துள்ளதுடன், அனைவருக்கும் வீடு என்ற திட்டமும் முழுவிச்சில் செயலில் உள்ளது.
- · கடந்த 3 ஆண்டுகளில், 6 ஐ.ஐ.டி., 7 புதிய ஐ.ஐ.எம் மற்றும் 8 புதிய ஐ.ஐ.ஐ.டி. ஆகியவைகளால் படிப்பு-வேலைவாய்ப்பு ஆகியவைகள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வேலைத் திறன் பயிற்சிகள் நாடுமுழுவதும் செயல்பட்டு வருகின்றன.
- · ‘மூன்று முறை தலக்’ முறைக்கு முடிவு கட்டி, முஸ்லீம் பெண்களுக்கு உதவ அரசு ஆவண செய்ய முன் வந்துள்ளது.
- · ரூபாய் மதிப்பு இழக்கச் செய்யும் மிகவும் துணிவான செயலால், £ 2 லட்சம் கோடி கருப்புப் பணம் வங்கியில் செலுத்தப்பட்டது தெரிவந்துள்ளது. மேலும் வங்கியில் செலுத்தப்பட்ட £ 1.75 லட்சம் கோடி பணம் கள்ளப்பணமா? என்ற ஆய்வும் தொடங்கி உள்ளது. மேலும் பலரிடம் கருப்புப் பணம் ரெய்டுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் உச்ச கட்டமாக 1,75,500 ஷெல் கம்பனிகள் மூடப்பட்டு, சாதனை படைத்துள்ளது. 400 கம்பனிகள் ஒரே விலாசத்தில் செயல்பட்டுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுளளன.
- ஸ்மார்ட் சிடிகள் உருவாக்கும் திட்டம் இப்போது பல மாநில அரசாங்கத்தால் போட்டி போட்டு செயல்வடிவம் பெற்று வருகிறது.
- · 14,000 கிராமங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் எலக்ரிசிடியைப் பெற்றுள்ளன. அடுத்த வருடத்திற்குள் எலக்ரிசிடி இல்லாத இடமே இல்லை என்ற நிலையை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்திய
மக்கள் இப்போது ‘சல்தா ஹை’ – ‘எது நடந்தா நமக்கென்ன?’ என்ற மனநிலை மாறி, ‘பாதல்
சக்தா ஹை’ – ‘நாம் மாற்ற முடியும்’ என்ற மனநிலையால், தேசம் பயன்பெறும் என்று
குறிப்பிட்ட மோடி, காஷ்மீர் மக்களுக்கும் இந்த உரையில் ஒரு வேண்டுகோள்
விட்டுள்ளார்: ‘கோலி அவுர் காலி’ – குண்டுகள் மற்றும் பழிச்சொற்கள் – ஆகியவைகள்
பிரச்சனைக்குத் தீர்வாகாது. காஷ்மீர மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு,
அரவணைத்து, அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று மோடி தெரிவித்த கருத்து
பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
“01-01-2018
ஆண்டு சாதாரண நாள் இல்லை. இந்த நாளில் 21-வது நூற்றாண்டில் பிறந்தவர்கள் 18
வயதுடையவர்களாக மாறுவார்கள். அத்தகைய மேஜரான அனைத்துப் பேர்களையும் இந்த புதிய
இந்தியாவை உருவாக்கும் வேள்வியில் பங்குகொள்ள அழைக்கிறேன்’ என்றும் தமது உரையில்
குறிப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க
பாரதம். ஓங்குக புதிய பாரதம்.
Comments