ஆங்கில ஹிந்து தினசரியின் செய்தி வெளியிடுவதில் நிகழ்ந்த தவறுகள்




ஆங்கில ஹிந்து தினசரி இதழ் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னிருந்தே - அதாவது 1889 வருடத்திலிருந்து வெளிவரும் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான பத்திரிகையாகும். 128 வருடங்களாக வெளிவரும் பத்திரிகை என்ற பெருமைகொண்ட தினசரி ஹிந்துப் பத்திரிகையாகும். இத்தகைய பெருமை இந்தியாவில் வேறு எந்தப் பத்திரிகைக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஹிந்துவில் ஒரு செய்தி வெளிவந்தால், அது அரசாங்க கெஜெட் போல் மிகவும் நம்பிக்கைக்கையானதாகவே பல வருடங்களாக புகழ் பெற்ற பத்திரிகையாகும். இப்பொழுதும் மற்ற தினசரிகளை ஒப்பிடும் போது ஹிந்து தினசரியில் பெரும் குறைகளைக் காண முடியாது. ஆனால், சமீபகாலமாக பல தவறான செய்திகளும் - தலையங்கங்களும், தலைப்புகளும் இடம் பெறுவதை ஹிந்துவில் காணும் பொழுது, மனதிற்குச் சங்கடமாக இருக்கிறது. அதுவும் முஸ்லீம்களைப் பற்றிய செய்திகளிலும், மோடியைக் கணிப்பதிலும் வெளிபடையாகத் தெரியும் தவறுகளைக் காணமுடிகிறது. அதை விளக்கவே இக் கட்டுரை.

சமீபத்தில் லக்னோவில் ஒரு தீவிரவாதியான சய்ஃபுல்லா என்பவன் லக்னோவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். அவன் ஐ.எஸ்..எஸ். என்ற தீவிர வாத அமைப்பைச் சேர்ந்தவன் என்பதும், அவன் வழிகாட்டுதலின் படியே உஜ்ஜெயின் ரயில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது என்பதும் நிரூபணமாகி உள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவனின் தந்தையான சார்தாஜ் கான்பூரில் வசிக்கிறார். அவர் மீடியாவில் முதன் முதலில் சொன்னது: ‘தாய்-தந்தையர்களின் பேச்சைக் கேட்காத பிள்ளைகளுக்கு இந்தக் கதிதான் ஏற்படும். ஒரு தேசத்துரோகி என்னுடைய மகனாக இருக்க முடியாது. ஆகையால், என் மகனின் உடலை நான் கேட்க மாட்டேன்.’ ஆனால், பிறகு, ‘போலீஸ் சொல்வதை நம்ம மாட்டேன். இது ஒரு போலி என் கவுண்டர். என் மகன் தவறு இழைத்திருக்க மாட்டான்என்று சொன்னார்.


ஆனால், தந்தையின் கூற்றின் அடிப்படையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பாராளுமன்றத்தில்தேசத்துரோகியான என் மகனின் உடலை ஏற்க மாட்டேன் என்று மறுத்த அந்த தந்தைப் பார்த்து இந்த பாராளுமன்றமும், தேசமும் பெருமிதம் கொள்கிறதுஎன்று தெரிவித்துள்ளார்.



ஆனால் ஹிந்துவில்மகனை இழந்த தந்தை தீவிரவாத குற்றச்சாட்டிற்கு ஆதாரம் கேட்கிறார்’ (Bereaved dad wants terror charges proved - Reporter: Shubhomoy Sikdar) என்ற தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. அது கூட மன்னிக்கப் படலாம். ஆனால், பிரிண்டில் வந்த இதே தலைப்பை இணைதளத்தில் இப்படி மாற்றி உள்ளனர்: Father calls Saifullah killed in Lucknow encounter a traitor, refuses to accept body.

ஒருவேளை அந்த தீவிரவாதி தங்கி இருந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 45 கிராம் தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்களுடன் 600 தோட்டாக்கள், 8 பிஸ்டல்கள், வெடிகுண்டு தயாரிக்க உதவும் பொருட்கள், ஒயர்கள், .எஸ்..எஸ். கொடி ஆகியவைகளைப் பற்றி செய்தியை அறிந்த உடன், தங்கள் இணைய தள தலைப்பை மாற்றி இருக்கலாம்.  

நியாயத்தைப் பார்க்காமல் சுடப்பட்டவனின் மதம் - இனம் பார்த்துசிக்குலர்கோணத்தில், ஹிந்துவும் பத்திரிகைத் தர்மத்தை மறந்ததுடன், இணைதளச் செய்தியை பிரிண்ட் செய்தியிலிருந்து மாறுபட்டு வெளியிடுவது - அதுவும் மிக முக்கியமான கருத்தை மாற்றி பிரதிபலிக்கும் அளவில் பிரசுரித்து வெளியிடுவது, பாரம்பரிய மிக்க ஹிந்துப் பத்திரிகைக்கு ஏற்புடையது அல்ல.

இங்கு பிரசுரமான ஹிந்துவின் செய்தியின் நகல்கள் மேலே சொல்லி உள்ளவைகளுக்கு ஆதாரமாகத் திகழும்.   

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017