பி.எஸ்.எடியுரப்பாவின் 10 கோடி ஊழலில் கோர்ட் தீர்ப்பு 2008
வருடம் நடந்த கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி.யை முதன் முதலாக ஆட்சி பீடத்தில் அமர்த்தியவர் என்ற
பெருமை பி.எஸ்.எடியுரப்பாவிற்கு ஏற்பட்டு,
அவரும் 30 மே 2008 முதன்
மந்திரியாகப் பொறுப்பேற்றார்.
ஆனால்,
அவரது துரதிஷ்டம் சந்தோஷ் ஹெக்டே என்ற கர்நாடகாவின் லோகயுக்தா
(2006-லிருந்து ஜூன் 2010 வரை பதவி வகித்தவர்)
மற்றும் அப்போதைய கர்நாடக கவர்னராக இருந்த எச்.ஆர்.பரத்வாஜ் ஆகிய இருவரின் மூலம் வந்தது. பங்களூர் மற்றும் ஷிமோகா ஆகிய இடங்களில்
சட்டத்திற்குப் புறம்பாக கனிவளச் சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கியது - நிலம் வாங்கியதில் முறைகேடு ஆகியவைகளை ஆய்வு செய்த அறிக்கையை ஏற்று பரத்வாஜும்
எடியூரப்பாவின் மேல் வழக்குப் பதிவு செய்து, போலீஸ் காவலில் வைத்து
விசாரிக்கவும் உத்திரவிட்டார். அதனால், எடியுரப்பா 15-10-2011 அன்று கைதி செய்யப்பட்டு,
23 நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டுள்ளார்.
பி.ஜே.பி.யின் அப்போதைய மேலிடம் அத்வானியின்
சொல்படி, எடியுரப்பாவைக் காப்பாற்ற முயலவில்லை. சந்தேஷ் ஹெக்டேயிடம் அத்வானிக்கு ஒரு தனி நம்பிக்கை உண்டு என்பதை இங்கு குறிப்பிட
வேண்டும். ஆகையால், எடியுரப்பா
31-07-2011 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் தனது எம்.எல்.ஏ.
பதவி, பி.ஜே.பி.யின் உறுப்பினர் அந்தஸ்து ஆகியவைகளையும்
30-11-2012 துறந்து, பிறகு தனிக் கட்சி ஆரம்பித்து,
அமித் ஷா - மோடியின் தலையீட்டில் 2014 லோக் சபா தேர்தலுக்கு முன்னால், அதையும் கலைத்து,
பி.ஜே.பி.யில் சேர்ந்து கர்நாடகாவின் பி.ஜே.பி.யின் தலைவராக ஆக்கப்பட்டார். 2014 தேர்தலிலும் ஷிமோகாவிலிருந்து 3.63 லட்சம் ஒட்டு வித்தியாசத்தில்
வெற்றி பெற்றார்.
அந்த ஊழல் குற்றச் சாட்டு கோர்டினால் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் மார்ச் மாதம்
8, 2012, கூறப்பட்ட தீர்ப்பில் ஹெக்டேயையும், பரத்வாஜையும்
மிகவும் கடுமையாக விமரிசித்துள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும்.
அந்த திர்ப்பில் உள்ள முக்கியமானவற்றை மட்டும் வாசகர்கள் முன்னிலையில்
வைக்கிறேன்.
எடியுரப்பா 10 கோடி ரூபாயை ஜே.எஸ்.டபுள்யூ. ஸ்டீல் லிமிட்ட் இருந்து அவரது மகன்கள் பி.ஒய்.ராகவேந்திரா & பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அவரது மாப்பிள்ளை சொஹன்
குமார் ஆகியவர்களின் பெயர்களில் நடக்கும் பிரேனா டிரஸ்ட்டுக்கு நன்கொடையாக வாங்கி
உள்ளார். அத்துடன் வெறும் 2 கோடி பெறுமானம்
உள்ள அவரது உறவினர்களுக்குச் சொந்தமான நிலத்தை சவுத் வெஸ்ட் மைனிங் கம்பனி என்ற
நிறுவனத்திற்கு ரூபாய் 20 கோடிக்கு விற்றுள்ளனர்.
உயர்
நீதி மன்றத்தின் தீர்ப்பு:
ஹெக்டேயினால்,
எடியுரப்பா ஒருதலைப் பட்சமாக தன்னிட்சையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரது தரப்பினரின் பதிலைக் கேட்டுப் பெறாமல் இதில் ஹெக்டே நடந்திருப்பது,
இயற்கையான நீதிக்கு மிகவும் புறம்பானது. மேலும்,
அரசாங்க நடைமுறையையும், தர்மத்தையும்,
சட்டத்தின் விதிகளையும் மீறி ஹெக்டே செயல்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் குறிப்பிடப்பட்ட கம்பனிக்கு தன் அரசாங்கப் பதவியைப் பயன்படுத்தி முறைகேடாக நடந்தார் என்பதற்கு எந்தவிதமான ஒரு ரிகார்டையும் சமர்ப்பிக்க வில்லை.
சுரங்கம் தோண்டும் உத்திரவு 2007-ம் ஆண்டு செப்டம்பரில் கர்நாடக அரசால் கொடுக்கப்பட்டது.
அப்போது எடியூரப்பா ஒரு சுரங்க மந்திரியாகவோ அல்லது முதல் மந்திரியாகவோ இல்லை. மேலும்,
சுரங்கம் தோண்ட அளிக்கும் அதிகாரம் மத்திய அரசைச் சார்ந்தது. ஆகையால்,
எடியுரப்பா தமது அரசாங்கப்பதவியை துஷ்பிரயோகம் செய்து கம்பனிகளுக்கு 2007-லிருந்து
2010 வரை உதவினார் என்று சொல்வது ஒருவரது அறிவிற்கு அப்பார்ப்பட்டது.
சந்தோஷ் ஹெக்டே லோக்காயுக்தா என்ற ஒரு நீதிபதிக்கு சமமாக உள்ள பதவியை வகித்தவர்.
ஆகையால், அவர் தாம் எடுக்கும் செயல்
- முடிவு ஆகியவைகளில் நேர்மையாக கூடியமட்டும் இருக்க வேண்டியது அவசியம். அதுவும் பலவிதமான விளைவுகளை எற்படுத்தும் மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணத்தில்,
குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் தரப்பு நியாயத்தைச் சொல்ல அவர்களுக்கு அனுமதி அளிக்காதது, நீதியையும்
- நேர்மையையும் அழிப்பதற்கு ஒப்பாகும். அதிலும்,
வாதம் - எதிர்வாதம் உள்ள இப்படிப்பட்ட வழக்கில் இது மிகவும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
ஒரு
அரசியல் சட்டத்தின் மூலம் உறுதிமொழி எடுத்து பதவியில் இருக்கும் ஒருவரின்
நன்மதிப்பை வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் அழிப்பது அநியாயமான செயல். சந்தோஷ் ஹெக்டே இதற்கு இறையாகி உள்ளார்.
இந்த
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, சந்தோஷ் ஹெக்டேயும், கவர்னர்
பரத்வாஜ் அவர்களும் பல முறை மீடியாக்களுக்கு பேட்டி என்ற பேரில் எடியுரப்பாவைக்
குற்றம் சாட்டியும், தரம்
சிங்க், எஸ்.எம்.கிருஷ்ணா
போன்றோர்களை குற்றமற்றவர்கள் என்று வெளிப்படையாக கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆசிரியர்
தொகுப்புரை:
இந்தத் தீர்ப்பைப் படிக்கும் வாசகர்கள் எடியுரப்பா தவறான முறையில் ஊழல்
குற்றம் சாட்டப்பட்டவர் என்பதை உணர்வார்கள் என்று கருதுகிறேன். மேலும் இப்போது ஹெக்டே
மற்றும் பரத்வாஜ் ஆகியவர்களின் மீடியா பேட்டிகளை பார்த்தால், அந்த இருவரும் எவ்வளவு கீழ்த்தரமாக தங்களது பதவிகளை துஷ்பிரயோகம்
செய்துள்ளனர் என்பது தெரியவரும். அவர்கள் இருவரும் அவர்கள்
வகித்த பதவிக்கு லாயக்கற்றவர்கள் என்பதும் தெரியவரும்.
முதல் முதல் பி.ஜே.பி.யை அரசுக்
கட்டிலில் அமர்த்திய எடியுரப்பாவை அப்போதைய பி.ஜே.பி. மேலிடம் - முக்கியமாக
அத்வானி - காப்பாற்றவில்லை என்பதுடன், இப்போது
எடியுரப்பாவின் மேல் சாட்டப்பட்ட குற்றம் முற்றிலும் தவறானது என்ற தீர்ப்பிற்குப்
பிறகு, அத்வானியும் தம் தவறுக்கு மன்னிப்பும் கேட்கத் தவறி
விட்டார்.
மோடி - அமிர்த்
ஷா வந்த பிறகு தான் எடியுரப்பாவிற்கு நியாயம் கிடைத்தது. இப்போதும்
வாய்மை வாசகர்களில் சிலர் உண்மை நிலவரத்தை அறியாமல், ‘எடியுரப்பா
ஒரு ஊழல் பேர்வழி’ என்று குற்றம் சாட்டிய படி இருப்பதால்,
இந்தப் பதிவு. இது நான் எனது பேஸ் புக்கில் ஆங்கிலத்தில்
8--03-2012 அன்றே பதிவு செய்ததின் அடிப்படையில் எழுதியது.
அப்போதே எடியுரப்பாவின் விளக்கத்தைக் கேட்டு, அதை ஆராய்ந்து பார்த்து, பி.ஜே.பி. அவரை பதவி விலகாமல் இருந்திருக்கச் செய்திருந்தால், கர்நாடகாவில்
அரசியல் ரீதியாக நன்கு கால் பதிந்திருக்கும். எடியுரப்பா
உடனே தமது எம்.எல்.ஏ. பதவி - முதல் அமைச்சர் பதவி அனைத்தையும் - ஏன், பி.ஜே.பி. உறுப்பினர் பதவியையும் துறந்தார் என்பதையும்
இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனாலும், எடியுரப்பா
ஊழல் பேர்வழி என்ற தவறான அடைமொழி மக்கள் மனதில் இருப்பது பி.ஜே.பி.யின் தவறான அணுகுமுறையால் என்பதை இப்போதாவது
உணர்ந்து செயல்படுவதை நினைத்து மகிழலாம்.
கேஜ்ரிவால் மேல் ஊழல் குற்றம் நேரிடையாக இல்லை. அவர் தமது கட்சியின்
வசூலில் ஊழல் என்பதை அவர் மேல் சுமத்துகிறோம். அதுவும் எந்த
கோர்ட் வழக்குகளும் இது குறித்து பதிவாக இல்லை. ஆகையால்,
அவரையும் ஊழல் பேர்வழி என்று கணிப்பதும், விவரிப்பதும்
தவறு என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
தவறான ஊழல் குற்றச் சாட்டை முன் வைத்த ஹெக்டே - பரத்வாஜ் ஆகிய
இருவர்களும் தார்மீக ரீதியில் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அப்படி
நிகழும் நாளில் தான், ‘சத்யமேவ ஜெயதே’ என்ற
மத்திய அரசுச் சின்னத்தின் வாசகம் சக்தி உடையதாகத்திகழும்.
Comments