பிரசாந்த் கிஷோர் - பிஹார் விகாஸ் மிஷன் 2016 என்ற அமைப்பின் வழிகாட்டி:



நிதிஷ் - லல்லு - ராகுல் கட்சிகளை ஒன்றினைத்து பிஹாரில் வெற்றிக் கனியைப் பறிக்க உதவிய கிஷோரை, அதற்குக் காணிக்கையாக பீஹார் முதல் மந்திரி நிதிஷ் குமார் பதவி ஏற்ற உடனேயே அவருக்கு மந்திரி பதவிக்கு நிகரான பதவியில் அவரை அமர்த்தி தமது நன்றிக் கடனை செலுத்தியதாக அப்போதே பத்திரிகைகளில் செய்தி வந்தது. அதன் தொடர்பாக ஜனவரி 2016 அன்று பிஹார் மந்திரிசபைக் கூட்டத்தில் பீஹார் விகாஸ் மிஷன் என்ற தனி அமைப்பை உருவாக்கி அதற்கு கிஷோரை தலைமை தாங்கி வழி நடத்த ஒப்புதல் பெறப்பட்டது. அந்த மிஷனின் முக்கிய நோக்கம் - பிஹார் மாநிலத்தில் நல்ல அரசாங்கம் - வளர்ச்சி ஆகியவைகளை அடைய ஐந்து வருட திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு வழிகாட்டுவதாகும். இதில் சுமார் 1500 கொள்கை - மற்றும் தொழில் வல்லுனர்கள் இடம் பெற்று, நிதிஷ் குமாரின் வளர்ச்சித் திட்டங்களை தீவிரப்படுத்துவார்கள். இது ஒரு தனியான நிதிஷ் குமாரின் இன்னொரு அரசாங்க கிளைபோல் இயங்கும். முக்கியமாக நிதிஷ் குமாரின் ஏழு அம்ச திட்டங்களை - இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றம், வேலையில் ஒதுக்கீடு மற்றும் பெண்கள் முன்னேற்றம், அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள், அனைவருக்கும் வீடு, கல்வி போன்றவைகளைக் கவனிப்பதாகும். இந்த மிஷன் - கிஷேரால், கிஷேரினால், கிஷேருக்காக - உருவாக்கப்பட்டதாகும்நிதிஷ் குமாரும் தமது பல ட்வீட்களின் மூலம், இந்த கிஷோர் மிஷனை பாராட்டி உள்ளார். ‘இந்த மிஷன் நம்பிக்கையை அதிகரித்து, சேவை மையங்களை மக்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தி, பீஹாரை ஒரு முன்னேற்ற மாநிலமாக மாற்றும் செயல் திட்டம்என்று நிதிஷ் குமார் குறிப்பிட்டிருந்தார்.

ஆகையால் கிஷோர் கிட்டத்தட்ட பிஹார் அரசாங்கத்தின் அதிகாரி என்ற நிலையில் பணியாற்றுகிறார். அதற்கு அவருக்கு மந்திரிகளின் அளவுக்கு ஊதியம் - மற்றும் சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அரசு அதிகாரியும் - அவரது மற்றவர்களும், நடந்து முடிந்த 5 மாநில சட்ட மன்ற தேர்தல்களுக்கு  காங்கிரஸ் கட்சிக்குப் பணி ஆற்றி, அதிலும் ஊதியம் - பல சலுகைகள் பெறுவது சட்டத்திற்குப் புறம்பானதாகாதா? என்ற கேள்வி எழும் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு வேளை பீஹார் விகாஸ் விஷனிலிருந்து தற்காலிகமாக விலகி, தேர்தல் வேலை செய்கிறாரா? என்றும் தெரியவில்லை. பத்திரிகைச் செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டது இது தான்: வெற்றியோ தோல்வியோ எதுவானாலும், கிஷோர் வழி காட்டுதலின் படிதான், 2019 தேர்தல் வரை காங்கிரஸ் கட்சி செயல்படும் என்று ஒப்பந்தம் கை எழுத்தாகி உள்ளாதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதை எல்லாம் ஒன்றாகப் பார்க்கும் போது, பிஹார் அரசு வேலை செய்யாத ஒருவருக்கு அரசு சம்பளம் - சலுகைகள் ஆகியவைகளை கிஷோருக்கு வழங்குவதாகவே படுகிறது. இதுவும் ஒரு வகையில் ஊழலே. மேலும், அவருடன் பிஹார் விகாஸ் மிஷனில் வேலை செய்பவர்களும் இந்த 5 மாநிலத் தேர்தல்களில் பணிசெய்யும் வாய்ப்பும் இருக்கலாம். அவர்கள் பிஹார் அரசாங்கத்தில் பணம் பெற்று, காங்கிரஸ் கட்சி வேலை செய்திருந்தாலும், அதுவும் ஒரு வகையில் தவறே - ஏன், ஊழலே.


என் மனத்தில் சந்தேகம் எழுந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஏனென்றால், உண்மை நிலவரத்தை கிஷோர் - நிதிஷ் குமார் ஆகியோர்கள் தான் தெரியப்படுத்தி, அரசு சட்ட மீறல்கள் இல்லை என்பதை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கக் கடமைப் பட்டவர்களாவார்கள்.  

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017