ஜெயலலிதா ஆடிய ஆட்ட மென்ன?
(வாட்ஸ் ஆப் மூலம் கிடைத்த தகவலின் சுருக்கம்)
ஒருவர் இறந்து விட்டால் அவரை புகழ
வேண்டும் என்று எந்த விதியும் இல்லை! அவர் மறைந்து விட்டார் என்பதற்க்காக அவர் செய்த வரலாற்று பிழைகளை மறைத்து அவரை அளவுக்கு அதிகமாக புகழ்வதும் தர்மம் இல்லை.
ஆண் ஆதிக்க சமூகத்தில் ஒரு பெண் இந்த
அளவிற்கு வந்தது, சாதித்தது!
ஆண்கள் அவரிடம் அடிமை போல் குனிந்தது! அதை எல்லா பெண்களும் ரசித்தது! எல்லா பெண்களுக்கும் அவரை ஆதர்ச PERSONALITY
யாக பார்த்ததும் உண்மையே! ஆனால் தன்னை விரும்பும் பெண், இனம் படும் துன்பத்தை அவர் சரிவரப் புரிந்து கொண்டாவராக அவரை மதிப்பிட முடியவில்லை.
தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறந்ததை எதிர்த்துப் போராடிய பெண்களை அடித்தது, சந்திரலேகா ஆசிட் வீச்சு, மூன்று பெண்கள் சொந்த கட்சிக்காரர் களால்
பஸ்ஸில் வைத்து எரித்தது - ஆனால் அவர் இவைகள் எதற்கும் கவலை பட்டதும் இல்லை வருத்தபட்டதும் இல்லை. அனாலும் பெண்
வாக்காளர்கள் ADMK விற்கு அதிகம்? அதுதான் புரியாத
புதிர்!
2015 டிசம்பர் ஏற்பட்ட வெள்ளத்தில் நிவாரணப் பொருட்களை வினியோகம்
செய்வதில் அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டிய பிறகே செயல்பட வேண்டும் என்ற உத்தரவால் கால தாமதம்
செய்தது, ஒரே நாளில் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் வேலையை விட்டு தூக்கி அடித்தது,
ஒரே வருடத்தில் 20 முறை அமைச்சரவையை மாற்றியது - இது தமிழ்
நாட்டு சரித்திர நிகழ்வுகள்.
இன்னும் பல சாதனைகள்!
Chief election
commisson சேஷன் முதல் ஆடிட்டர்
ராதாகிருஷ்ணன், வக்கீல் விஜயன், தராசு ஷியாம், நக்கீரன் கோபால் என்று ADMK வால் அடிவாங்காத
ஆட்களே இல்லை என்னும் அளவிற்கு சாதனை.
யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான்
செய்வார்கள் என்ற அறிய தத்துவம் சொன்னது!
முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் இந்த சோ called இரும்பு மனுஷி !
எதற்காகஒரு சர்வாதிகார தலைவியை புனிதர்
ஆக்கவேண்டும்?
வாழ்ந்தார். மறைந்தார் ......
அவ்வளவுதான்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை...
போல்ட் லேடி, அயர்ன் லேடி, ரோல் மாடல் என சில தோழர்கள் / தோழிகள் சொல்கிறார்கள்..
இந்திய வரலாற்றிலேயே முதல்வராய்
பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கால் தண்டிக்கப்பட்ட, ஜெயிலுக்கு சென்ற, பதவி பறிபோன ஒரே அரசியல்வாதி ஜெயா
தான். அதுவும் இருமுறை.. மூன்று ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே
தலைவரும் ஜெயா தான்....
- டான்சி நில மோசடி வழக்கில், கை எழுத்து என்னோடது இல்லை என சொல்லிட்டு, இல்லை என்னுடையது என சொல்லி, நீதிபதி
கண்டித்து, அதே வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என
தீர்ப்பு சொல்லி, எச்சரித்து விடுதலை செய்யபட்டார்.
- ஜெயலலிதாவுக்கு இது ஒரு வழக்குதானா
என்றால், 13 வழக்குகள் போடப்பட்டது. சொத்து
குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை. 100 கோடி ரூபாய் அபராதம். நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு. ஆதாரம்
இல்லாததால் விடுதலை. டான்சி வழக்கு. 3 ஆண்டுகள் சிறை,
மேல்முறையீட்டில் விடுதலை. பிரசன்ட்ஸ்டே வழக்கு,
ஓராண்டு சிறை மேல்முறையீட்டில் விடுதலை.
- ஸ்ட்ராங் லேடி ஏன் சொத்து குவிப்பு
வழக்கை, பல்வலி, தமிழ்ல கொடுங்க, ஆங்கிலத்தில் கொடுங்க, நீதிபதியை மாற்றுங்க, வக்கீலை மாற்றுங்க என 18 வருடம் வழக்கை இழுத்தார்?
ஜெயலலிதா ஊழல் செய்யாதவர், உத்தமமானவர் என்றால், 18 வருடம் ஏன்
வழக்கை இழுத்தடிக்க வேண்டும். 185 முறை ஏன் வாய்தா வாங்க வேண்டும்?
- அரசியலில் நுழைந்ததும், எம்ஜியார் நினைவில்லாமல் இருக்கிறார் என சொல்லி, ஆட்சியை கலைத்து தன்னை முன்னிலை படுத்த பிரதமருக்கு கடிதம்
எழுதினார்..
- எம்ஜியார் இறந்ததும், அதிமுகவை கைப்பற்ற எம்ஜியாருக்கு அவரது மனைவி ஜானகி மோரில் விசம்
வைத்து கொன்று விட்டதாக புகார் தெரிவித்தார்.
- முதல் சட்டமன்ற நுழைவில், முதல்வராக கருணாநிதி பட்ஜெட் படிக்கும் பொழுது, அதை பிடுங்கி அவர் மீது அடித்தார்.
- ஆட்சிக்கு வந்ததும், யாரையும் மதிக்காமல், கண்மூடித்தனமாக சொத்து சேர்த்தார்,
பலரிடம் பயமுறுத்தி எழுதி வாங்கினார்..
- தன்னை விமரிசித்த தலைமை தேர்தல்
அதிகாரி டி.என்.சேஷன் விமான நிலையத்தை விட்டு வெளியே வராமல், தனது கட்சி மகளிர் அணியை அனுப்பி ஆபாச நடனம் ஆட வைத்தார்..
- தன்னை விமரிசித்த சுப்ரமணிய சாமிக்கும்
அதே ஆபாச நடன வரவேற்ப்பு.
- ஆட்சியில் இருந்த பொழுது மத்திய
அமைச்சர் அருணாசலத்தை
மதுரையில் விமானத்தில் இருந்து அவரை கீழே இறக்க வைத்தார்..
- கவர்னர் சென்னாரெட்டியை மாற்றுவதற்காக,
அவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி
செய்ததாக அவர் மீது மானபங்க குற்றச்சாட்டு வைத்தார்..
- நிறைய பணத்தை எடுத்துட்டு போய்ட்டார்
என, வளர்ப்பு மகன் சுதாகரன் மீது கஞ்சா வழக்கு
போட்டு சிறையில் அடைத்தார்..
- நடராஜன் உடன் நெருக்கமாக இருக்கிறார்
என செரீனா என்ற பெண் மீதும் கஞ்சா வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்..
- உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாசன்
வீட்டுக்கு மின் இணைப்பையும் குடிநீர் இணைப்பையும் நிறுத்தியது..
- வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும்
விஜயன் மீதான தாக்குதல், தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மீதான
தாக்குதல், அமைச்சர் ப.சிதம்பரம் மீது
தாக்குதல்...
- நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது
கஞ்சா வழக்கு..
- ஆடிட்டரை செருப்பால் அடித்து
துவைத்தது..
- அப்பல்லோ மருத்துவமனை மூத்த மருத்துவர்
கருணாநிதி என்பவரை, சிவந்தி ஆதித்தனை பார்க்க வந்த
முதல்வர் ஜெயலலிதாவிடம் காலணிக்கு மேல் மேலுரை மாட்டி வார்டிற்குள் வரும்படி
சொன்னதற்காக, பொய் வழக்கு போட்டு இரவோடு இரவாக
சிறைக்கு அனுபியது..
- தனக்கு எதிராக பேசினார்கள், எழுதினார்கள் என்று சொல்லி நூற்றுகணக்கான அவதூறு வழக்குகளை போட்டது
எந்த அயன் லேடி?
நடு இரவில் வீடு புகுந்து அரசு
அலுவலர்களை அள்ளிச் சென்ற போது அவர்களுடைய மனைவிகளின் குரல்கள்.
அனைத்து அரசியல்வாதிகளை போல இவரும்,
சொல்லபோனால், அதை விட மோசமாகவே இவரது சரித்திரம் இதுவரை இருக்கிறது! ஒருவரை
ஆதரிக்கும் முன்பு அவர் அதற்கு தகுதியானவர் தானா என்பதை யோசிக்கவேண்டியது ஒவ்வொரு
மக்களின் கடமை, உரிமை!
எனது தாய்த்தமிழ் நாட்டின்
அலங்காரத்தோரனம் மெரினா கடற்கரையை கல்லறைத் தோட்டமாக மாற்றியதுடன் அதில் ஒரு குற்றவாளியை
அடக்கம் செய்திருப்பது தமிழினத்திற்கு அவமானம்.
Comments