குமாரசாமி தீர்ப்பின் கணக்கீட்டுக் குளறுபடி



ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் குமாரசாமி தீர்ப்பின் அஸ்திவாரமே இது தான்: ‘கிருஷ்ணானந்த் அக்னி ஹோத்ரி என்பவரின் வழக்கில், வருமானத்தை விட சொத்துக்கள், 10% வரை கூடுதலாக இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யலாம்என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு உள்ளது. மேலும், வருமானத்தை விட கூடுதலாக, 20% வரை சொத்து இருந்தால், அதை அனுமதிக்கத் தக்க அளவாக கருதலாம் என்று ஆந்திர அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய பண வீக்கத்தை கருதி, 10 முதல் 20 சதவீதம் வரையிலான சொத்து குவிப்பை அனுமதிக்கத் தக்க அளவாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து குவிப்பு வருமானத்தை விட, 8.12% இருப்பதால், அது அனுமதிக்கத் தக்க அளவுக்குள் இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள். முக்கிய குற்றவாளி விடுதலை செய்யப்படும் போது, சிறிய பங்கு வகித்த மற்ற மூன்று பேரும் விடுதலை பெற தகுதியானர்கள் தான்.

உச்ச நீதிமன்றம் கிருஷ்ணானந்த் அக்னி ஹோத்ரி வழக்கின் தீர்ப்பு இந்த வழக்கிற்குப் பொருந்தாது. எனவே, அந்த தீர்ப்பின் பலன்களை, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெற முடியாது என்று கூறிவிட்டது. இருப்பினும், குமாரசாமியின் கணக்கின் பிழையே அவரது தீர்ப்பிற்கு பாதகமாகி விட்டது.

அதைப் பற்றிப் பார்ப்போம்.

குமாரசாமியின் வருமானத்திற்கு அதிகமான சொத்தின் மதிப்புக் கணக்கீடலை இங்கு மிகவும் சுருக்கமாகப் பார்ப்போம்.

மொத்த சொத்து மதிப்பு: 37.59 கோடி
மொத்த வருமானம்: 34.77 கோடி
இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் 2.82 கோடி
(இது தான் வருமானத்திற்கு மீறிய சொத்து மதிப்பு)

இது மொத்த வருமானத்தில் 8.12% - அதாவது 10% கீழாக உள்ளது.


குமாரசாமி கணக்கின் குளறுபடி:


Ø  வருமானமாக கருதி, கடன் தொகைகள் பட்டியல் இடப்பட்டு அதன் கூட்டுத் தொகையாக 24.17 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் சரியான கூட்டுத் தொகை 10.67 கோடி மட்டும் தான்.  அந்தப் பிழையைச் சரி செய்தாலே, சொத்தின் மதிப்பு 16.32 கோடியாகி விடும். இதன் மூலம் மொத்த வருமானத்தில் இதன் அளவு 76.7% ஆகிவிடுவதால், குமாரசாமியின் 10% தான் சொத்தின் மதிப்பு வருமானத்தை விட அதிகம் என்பது தவிடு பொடியாகிறது.
Ø  கடன் தொகையை வருமானமாக உயர்நீதி மன்றம் கொள்வதை ஏற்றுக் கொள்வதில் அபிப்பிராய பேதம் இருந்தாலும், வங்கியின் கடன் அனுமதி வழங்கியதையே அதன் முழுத் தொகைகளையும் - அந்தப் பணம் வங்கிலிருந்து எடுக்கப்படாவிடினும் வருமானமாக குமாரசாமிக் கணக்கில் எடுத்துக் கொண்டது தவறு என்று அறிய எந்தவிதமான சட்ட அறிவு தேவை இல்லை என்பது தான் அப்பட்ட உண்மை. பல இந்தியன் வங்கிகளின் கிளைகளிலிருந்த கடன்கள் இதில் அடங்கும். மேலே உள்ள பட்டியலைப் பார்க்கவும்.
Ø  கட்டுமான செலவாக 8.60 கோடி ரூபாய் செலவானதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களே ஒப்புக் கொண்ட தொகையை 5.10 கோடியாக்கி, 3.50 ரூபாய் செலவாக குறைத்து, வருமானத்தை அதிகமாகக் கணக்கில் காட்டப்பட்டுள்ளது.
Ø  வருமானமாக ஜெயா ப்ப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் 1.15 கோடி ரூபாய் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களே ஒப்புக் கொண்ட தொகை 4 கோடியாக கணக்கிட்டுள்ளது.

குமாரசாமியின் கணக்குக் குளருபடி ஜெயலலிதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவே அடிக்கல் நாட்டியதாகி, எதிர்மறை விளைவுகளை அவர் அறியாமலேயே செய்து, தவறிழைத்து விட்டார்.

நீதி கிடைத்தாலும், தண்டனையை அரசியல் மேல்மட்ட பிரதிநிதிகள் அவமதிப்பதாகவே படுகிறது. அதற்கு சசிகலா சிறைவாசமும் ஒரு எடுத்தாக்காட்ட இருக்குமோ என்ற பயமும் உண்டாகிறது.

பீஹாரில் ஊழல் குற்றச் சாட்டில் தண்டனை அனுபவிக்கும் லல்லு பிரசாத் தேர்தல் பிரசாரம் செய்கிறார்; தமது மகன்களை மந்திரிகளாக்கினார். அதில் ஒரு மகன் துணை முதல் அமைச்சர். அனைத்து மந்திரிகளும் அவருக்கு வணக்கம் செய்கின்றனர். இதன் மூலம் ஜனநாயகமே கேள்விக் கூத்தாகிறது.

நீதி தண்டித்தாலும், அரசியல் மூலம் அவர்கள் தண்டனையை அனுபவிக்காமல் நாட்டில் தாதாவாகவே வலம் வருவதைப் பார்க்கும் போது ஜனநாயகமே வேண்டாம் என்ற நிலைக்கு மக்கள் வராமல் இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017