வள்ளுவம்: வளைவது வணக்கம் அல்ல ஆக்கம்: கரன்சங்க்
'வில் வணக்கம்', 'சொல் வணக்கம்' என்றும் 'வில்லேர் உழவர்', 'சொல்லேர் உழவர்' என்றும் பதப்பிரயோகங்களை வள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு வணக்கம் செலுத்துவதில் பல வகைகள் உண்டு. தன்னை விட வயதில் மூத்தவர்களையும், மெத்த படித்த மேதாவிகளையும் வணங்கும் பொழுது, வணங்குபவர் தம் உடம்பை மிகவும் வளைத்து, தன் இருகைகளையும் கூப்பி வணங்குவது வழக்கம். இதில் அவரது செய்கையும், உள்ளமும் இயந்து இயங்கினால், அது வரவேற்கத் தக்கது தான். அப்படி யில்லாமல், அவரது உள்ளம் விஷத்தால் நிரம்பி இருப்பின், அவரது வணக்கம் உண்மையிலேயே வெறுக்கத் தக்க தாகும். அதில் ஆபத்தும் பொதிந்திருக்கும். நாதூராம் கோட்சே மஹாத்தா காந்தியை கைகூப்பி வணங்கினான். பிறகு, தன் கைத் துப்பாக்கியால் மஹாத்தாவைச் சுட்டுக் கொன்று விட்டான். இப்படிப் பட்ட நாதுராம் கோட்சேயின் வணக்கத்தையும், நாம் சந்தித்திருப்போம். ஆனால், அதைத் தெரிந்து கொள்வதுதான் மிகவும் கஷ்டமான ஒன்றாகும். நேருக்கு நேராக எதிப்பவர்கள் நமக்குத் தீங்கு செய்பவர்கள் தான் என்றாலும், மறைமுகமாக வெளிவேஷதாரியாக நம்மிடம் பழகியே தீங்கு ...