வாகன எரி எண்ணைக்கு மாற்று - இஸ்ரேல் அரசாங்கப் பரிசு!

இடமிருந்து : ஜி . கே . சூர்யபிரகாஷ் , நோபல் பரிசு பெற்ற ஜியார்ஜ் ஏ . ஒலாஹ் , ஒலாஹும் - சூர்யபிரகாஷும் சேர்ந்துள்ள போட்டோ . ஜி . கே . சூர்யபிரகாஷ் தெற்கு கலிபோர்னியா யுனிவர்சிடியின் வேதியல் பேராசிரியராக இருக்கிறார் . முழு விவரங்களுக்கு மேலே உள்ள மின் வலைத் தொடர்பைக் கிளிக் செய்து படிக்கவும் . உலகப் பொருளாதாரத்தின் ஏற்றத் தாழ்வுகள் - அரேபிய மற்றும் எண்ணை வள நாடுகளின் கைகளில் தான் இருக்கின்றன . அவைகளின் எண்ணைக் குழு நிர்ணயம் செய்யும் பெட்ரோல் விலைகள் உலக வர்த்தகம் - பொருளாதாரம் ஆகியவைகளைப் பாதிக்கும் நிலைதான் காணப்படுகிறது . இயற்கையாகக் கிடைக்கும் எண்ணைக் கிணறுகளின் பெட்ரோலுக்கு மாற்றாக வேறு எந்த வேதிப் பொருளும் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை . ஆனால் , மெதனால் என்ற எரிசாராயப் பொருள் பெட்ரோலுக்கு மாற்றாகச் செய்ய பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன . அந்த மாதிரியான ஆய்வுகளுக்கு ஊக்கம் கொடுத்து , பெட்ரோலுக்கு மாற்றுப் பொருளைக் கண்டு பிடிக்க ஒரு மில்லியன் டாலர் பரிசை ‘ வாகனங்களுக்குப் பயன்படும் மாற்று எரிபொருட்களுக்கான ஆய்வுக் கண்டுபிடிப்புகளுக்கான எரிக் மற்றும் ஷீலா சாம்சன் பிர...