விஷ்வ குரு பாரதப் பிரதமர் மோடியின் 75-வது ஆண்டு பூர்த்தி



பாரதப் பிரதமர் மோடியின் 75-வது ஆண்டுப் பிறந்த நாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அவரது 11 ஆண்டுக் கால ஆட்சியின் சிறப்பைப் பற்றி வாய்மை மிகவும் பெருமையோடு நினைவு கூறுகிறது. 

'உழைக்கும் மோடி - உயரும் பாரதம்' என்று ஒரே வரியில் மோடியின் ஆட்சியைப் பற்றி குறிப்பிட்டு பாரத மக்கள் அனைவரும் மோடியைப் பாராட்டிப் போற்றும் நிலையில் அவர் ஆட்சி சிறப்பாக அமைந்துள்ளது

மோடியின் அரசியல் பயணம் 2001-ல் குஜராத் மாநில முதல்வராகத் தொடங்கியது. தொடர்ந்து 2014 வரை முதல்வராக பதவியினை 13 ஆண்டுகள் வகித்துள்ளார். பிறகு பாரதீய ஜனதா கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளராக களம் இறங்கி 2014-ல் பாரதப் பிரதமராகப் பதவி ஏற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியில் இருக்கிறார். அவரது 11 ஆண்டு கால ஆட்சியில் பாரதம் வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்துள்ளது. தன்னிறைவு என்ற தாரக மந்திரம் தான் பாரத தேசத்தை ஒரு வளர்ந்த தேசமாக ஆக்கி உள்ளது

மோடியின் கடந்த 11 ஆண்டுக் கால ஆட்சியை ஒரு பறவைக் கண்ணோட்டத்தில் இங்கு பதிவு செய்ய விழைகிறோம்

  • சுத்தம் சுகம் தரும் என்பார்கள். மோடி பதவி ஏற்றதும் சுத்தம் என்பதற்குத் தான் முன்னுரிமை கொடுத்தார். வெட்ட வெளியில் இயற்கை உபாதைகளைக் கழுக்கும் வழக்கத்திற்கு முடிவு கட்ட ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட மானியத்துடன் நிதி உதவி வழங்கி அதை போர்க்கால அடிப்படையில் செயல் படுத்தி வெற்றி கண்டார். இது கோடானு கோடி பெண்களின் கண்ணியத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.
  •  குப்பை கூளங்களாக இருந்த ஆபீஸ் வளாகம் தூய்மை பெற்று பொலிவுடன் விளங்க வைத்தார். பழைய வேண்டாத பல கோப்புக்களை குப்பைகளாக வெளியேற்றினார். உடைந்த சாமான்கள் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டு, புதியவைகள் வாங்கி உபயோகிக்கப்பட்டன.
  • ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள் நீக்கப்பட்டன; சட்டங்களின் வாசகங்கள் பாமர மக்களும் படித்தால் எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் மாற்றம் பெற்றன.
  •   பல ஆறுகளை மாசுபடுத்தும் தொழிற்கூடங்களிலிருந்து வெளிவரும் நச்சுப் பொருட்களை அந்த தொழிற் கூடங்களே தூய்மைப் படுத்துவது உறுதி செய்யப்பட்டது. அந்த மாசுகள் நதிகளில் கலப்பது தடுக்கப்பட்டது. கங்கை போன்ற நதிகளின் தூய்மைக்கு பெரிய திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு அவைகள் இன்று தூயமையாக இருப்பதைக் காண்கிறோம். காசி வளாகம் விரிவாக்கம் ஒரு பெரிய சவாலான ஒன்று. அதுவும் வெற்றிகரமாக செயல்படுத்தியதை பலரும் வியந்து பாராட்டுகிறார்கள்.
  •  அயோத்தியா கோயில் எழும்பி இன்று அது ஒரு பெரும் சுற்றுலாத்தலமாக ஆகியதை நினைத்து ஒவ்வொரு இந்துவும் ஆச்சரியமும், ஆனந்தமும் அடைகிறான். இது நடக்கும் என்பதை ஒருவரும் நம்பவில்லை; ஆனால் ராமன் அருளால் நடந்துவிட்டது.
  •  காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து தனி அந்தஸ்து நீக்கப்பட்டு அங்கு அமைதி நிலவி பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
  •  முத்தலாக்கு என்ற முஸ்லீம் கல்யாணம் ஆன பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி நீக்கப்பட்டது ஒரு நம்பமுடியாத ஒரு அரசியல் சாதனையாகும்
  •  வடக்கு கிழக்கு எல்லை நாடுகளின் கலவரங்கள், மத மாற்றங்கள், நக்சலட்டுகளின் அட்டகாசம் அனைத்தும் நசுக்கப்பட்டு இப்போது அங்கு அமைதி நிலவி பல நம்ப முடியாத வளர்ச்சித் திட்டங்களால் முன்னேற்றங்கள் அங்கு நிகழ்ந்து அமைதி நிகழ்ந்துள்ளதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருத முடியாது. இது ஒரு அசாதாரண அரசியல் சாதனையாகும்.
  •   ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு - ஆரம்ப பணம் போடாமலேயே கணக்கை ஆரம்பிக்கும் விதி மாற்றல், டிஜிடல் பண மாற்றம், பல அரசு நிதி மான்யங்களை நேரடியாக பல கோடிக்கணக்கானவர்களின் கணக்குகளில் இமைக்கும் கால நேரத்தில் வரவு வைக்கும் அதிசயம், விலை இல்லா காஸ் இணைப்புகள், விலை இல்லா - குறைந்த விலையில் வீடுகள், ஒரே தேசம் - ஒரே ரேஷன் கார்ட் என்ற திட்டத்தால் குடிபெயர்ந்தாலும் ரேஷனைப் பெறும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் - பட்டியல் நீண்டது.
  •   தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan), மேக் இன் இந்தியா (Make in India), டிஜிட்டல் இந்தியா (Digital India), பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) என்ற திட்டங்கள் அனைத்தும் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக - அதிலும் உலகத்திலேயே வளர்ந்த நாட்டில் முதல் இடத்தில் இந்தியாவின் 100வது சுதந்திரதினமான 2045 அன்று வரும் வண்ணம் மோடி உழைக்கிறார் உழைக்கிறார் - அப்படி உழைக்கிறார்.
  •   கல்விச் சாலைகள் பல திறக்கப்பட்டுள்ளன; பல துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன; பல ரயில் நிலையங்கள் புதிப்பிக்கப் பட்டுள்ளன; பல ரயில்கள் நவீனமாக்கப்பட்டுள்ளன; பல ஆகாய விமான நிலையங்கள் நவீனமாக்கப்பட்டுள்ளன; பல புதிய ஆகாய விமான நிலயங்கள் நிறுவப்பட்டுள்ளன; பல சாலைகள் நான்கு - ஆறுவழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆளில்லா ரயில் கேட்டுக்களில் கீழ்ப் பாலம் அமைக்கப்பட்டுள்ளன.
  •   நமது முப்படைகளும் மிகவும் நவீனமாக்கப்பட்டுள்ளன; வீரர்களுக்கு அதி நவீன உடைகள், ஆயுதங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் உள்ளூர் தயாரிப்புகளாகும். பல ஆயுதங்களை பல நாடுகளுக்கு விற்கும் அளவில் நம் ராணுவ பாதுகாப்பு ஆயுதங்களின் உற்பத்தி பெருகி இருக்கிறது.
  •   விண்ணுலகில் நமது ஆளுமை வளர்ந்த பல நாடுகளை வியப்படைய வைக்கின்றது. இஸ்ரோவின் வளர்ச்சி இமாலய வளர்ச்சி என்று வளர்ந்த நாடுகள் அதிசயிக்கின்றனர்.
  •   விவசாய உற்பத்தியில் தன்னிறைவு, அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது இந்த 11 வருடங்களில் நடைமுறைப்படுத்தியதை ஒரு பெரும் சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.
  •   ஏழ்மை பெரும் அளவில் நீக்கப்பட்டுள்ளதை பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். வேலை வாய்ப்புகள் பெரும் அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
  •   பார்லிமெண்ட் புதிய கட்டிடம் திறப்பு, பல துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமையும் காரிடார் வளாகம் உருவாக்கம் ஆகியவைகள் சாதாரணமானது இல்லை.
  •   நாட்டைக் காப்பதில் மோடி அரசு என்றுமில்லா அளவில் செயல்பட்டு மக்களின் நன் மதிப்பைப் பெற்றதை நாம் பெருமையுடன் நினவு கூறலாம்.
  •   வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் கை ஓங்கியே இருந்துள்ளதை அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
  •   தீவிர வாதத்தை எதிர்ப்பதில் மோடி அரசு உலகத்திற்கே வழிகாட்டி மோடியை 'விஸ்வ குரு' என்ற அந்தஸ்திற்கு உயர்த்தி உள்ளது.
  •   ஜிஎஸ்டி வரி அதிரடியாக குறைப்பு - 0, 5, 18 என்ற சதவீகிதத்தில். 10% குறைவான பொருள்களில் தான் 18% ஜிஎஸ்டி வரி என்பதும் இங்கு கவனிக்க வேண்டும். இதனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். மோடியின் சுதேசி பொருட்களை இந்திய மக்கள் வாங்க வேண்டும் என்ற அறிவுரைக்கு இது வலுசேர்க்கும். 

பாரத தேசத்தை ஒரு பாம்பாட்டி தேசமாக முன்பு தெரியப்படுத்தி, நம் தேசிய பாரம்பரியத்தை இழந்தோம். ஆனால் மோடியோ யோகாவை உலகத்திற்கு அர்ப்பணித்தார்; பாரத தேசத்தின் பலவிதமான கலாச்சாரங்களை உலகத்திற்கு உணர்த்தினார்; பாரத தேசத்தின் பல மதிப்புமிக்க கலாச்சார சின்னங்களை பல நாடுகளுக்குப் பயணம் செய்து மீட்டெடுத்தார்

மோடி பாரதத்தின் 14-வது பிரதமராகும். இது வரை ஆட்சி பீடத்தில் இருந்த எந்த ஒரு பாரதப் பிரதமரும் மோடி போல் செயல்பட்ட து இல்லை; எந்த ஒரு பாரதப் பிரதமரும் மோடி போல் பாரத தேசத்தை முன்னேற்றப்பாதையில் செலுத்த வில்லை. அதே சமயத்தில் எந்த பாரதப் பிரதமரும் மோடி போல் பல உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகளின் எதிர்ப்புகளைச் சந்தித்தது இல்லை

எந்த பாரதப் பிரதமருக்கும் மோடி போல் வெளி நாட்டவர்கள் தங்கள் நாட்டின் மிகப் பெரிய விருதுகளை வழங்கி கவுரவிக்க வில்லை

உழைக்கும் மோடி - உயரும் பாரதம் - என்று ஒவ்வொரு தேசிய சிந்தனை கொண்ட இந்தியனும் உரக்கச் சொல்லி 'வாழ்க மோடி!' என்று மனம் விட்டு வாழ்த்துவதில் மனம் மகிழ்வாழ்வான்

வாய்மை மோடியை அவரது 75-வது வயது பூர்த்தியில் பூச்செண்டு கொடுத்து 'வாழ்க பல்லாண்டு - பாரதத்தை உலகத்தின் நம்பர் ஒன் வளர்ச்சி நாடாக உருவாக்கும் உத்தமர் மோடிக்கு வாழ்த்துக்கள்' என்று ஆண்டனைப் பிரார்த்திக்கிறோம்

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017