ஓணம் பண்டிகை - 05 -09 - 2025
ஓணம் என்பது தை மாதம் தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் பொங்கல் திருவாழாவைப் போன்றதாகும். இந்த ஓணம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய அறுவடைத் திருவிழா ஆகும். இது பத்து நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5-ஆம் தேதி திருவோணத்துடன் நிறைவடைகிறது.
ஓணம் பண்டிகை அஸ்தம் நட்சத்திரத்தி தொடங்கி கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்துடன் முடியும். இந்த பத்து நாட்களிலும் பல்வேறு சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும். அதில், திருவோணம் எனப்படும் பத்தாவது நாள் மிக முக்கியமானதாகும்.
இந்த பண்டிகை மகாபலி சக்கரவர்த்தியின் வருகையை நினைவு கூறுகிறது. மகாபலி ஒரு காலத்தில் கேரளாவை ஆட்சி செய்த ஒரு மன்னர். அவர் மிகவும் நல்லவரும், தாராள குணம் கொண்டவரும் ஆவார். மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள்.
விஷ்ணுவின் அவதாரமான வாமனர், மகாபலியின் பெருமையைச் சோதிக்க பூமிக்கு வந்தார். வாமனர் மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்டார். மகாபலி அதற்கு சம்மதித்தார். வாமனர் முதல் அடியால் வானத்தையும், இரண்டாவது அடியால் பூமியையும் அளந்தார். மூன்றாவது அடியை வைப்பதற்கு இடம் இல்லாததால், மகாபலி தனது தலையை நீட்டினார். வாமனர் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவரைப் பாதாள லோகத்திற்கு அனுப்பினார்.
ஆனால், தனது மக்களைப் பார்க்க ஆண்டுக்கு ஒருமுறை பூமிக்கு வர மகாபலிக்கு வாமனர் அனுமதி அளித்தார். அந்த நாளைத்தான் ஓணம் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சங்கள்:
அத்தப்பூ கோலம்: வீட்டிற்கு முன்பு பல வண்ணப்
பூக்களைக் கொண்டு கோலம் போடுவது.
சத்யா: பாரம்பரிய ஓணம் விருந்து. இதில் 20-க்கும் மேற்பட்ட
வகையான சைவ உணவுகள் வாழை இலையில் பரிமாறப்படும்.
புலிக்களி: புலி வேடமிட்டு நடனமாடுவது.
வள்ளம் களி: படகுப் போட்டி.
ஓணம் பண்டிகை கேரளாவில் மதங்களைக் கடந்து அனைவரும்
ஒற்றுமையுடன் கொண்டாடும் ஒரு திருவிழா.
வாய்மை வாசகர்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள்.


Comments