நவராத்திரி - 22 - 09 - 2025ல் தொடங்கி 01 -10 - 2025ல் முடிவு
இந்த ஒன்பது நாட்களும் மூன்று முக்கிய பெண் தெய்வங்களை நாம் வணங்குகிறோம்:
முதல் 3 நாட்கள்: வீரத்திற்கும், துணிச்சலுக்கும் உரிய அன்னை துர்கா தேவியை வழிபடுகிறோம்.
அடுத்த 3 நாட்கள்: செல்வத்திற்கும், செழிப்பிற்கும் உரிய அன்னை லட்சுமி தேவியை வணங்குகிறோம்.
கடைசி 3 நாட்கள்: கல்விக்கும், ஞானத்திற்கும் உரிய அன்னை சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி
ஆயுத பூஜை என்பது நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் (மகாநவமி) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தொழில், கல்வி, வாழ்வாதாரத்திற்கு உதவும் அனைத்து கருவிகள், வாகனங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து, அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழிபடுவார்கள்.
பத்தாவது நாள் தான் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த
நாள் "வெற்றி நாள்" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் அன்னை துர்கா
தேவி மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த புனிதமான
நாளில் புதிய கலைகளையும், தொழில்களையும் தொடங்கினால் அது வெற்றியில் முடியும் என்பது
ஒரு நம்பிக்கை.
வீரம், செல்வம், கல்வி ஆகிய அனைத்து திறமைகளும் வாய்மை வாசகர்களுக்கு வற்றாத அளவில் என்றும் கிடைக்க துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை வணங்கி வாய்மை வேண்டுகிறது.


Comments