துடைப்பைக் கட்சியை தூசிபோல் தூக்கி எறிந்த டெல்லி ஓட்டர்கள்


26 வருடக் காத்திருப்பிற்குப் பிறகு பிஜேபி டெல்லி சட்டசபையை ஆம் ஆத்மி கட்சியை வெற்றி கொண்டு கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. இது பிஜேபிக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும். 

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 22 இடங்களில் வென்றாலும், அந்த கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலும் (சுமார் 4000 ஓட்டு வித்தியாசம்), அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் மனிஷ் சிசோடியாவும் (சுமார் 600 ஓட்டுக்கள்) தோல்வி அடைந்துள்ளது கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவு என்பது மிகவும் கவலை தரும் விஷயமாகும். 

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பாரதப் பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் உள்ள பிஜேபி கட்சி தலைமை அகத்தில் பேசியதின் சாராம்சம்: 'இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு முதன் முறையாக டெல்லி மற்றும் டெல்லியைச் சுற்றி உள்ள மாநிலங்களில் பிஜேபி அரசு உள்ளது. இதன் மூலம் டெல்லியை ஒரு சிறந்த உதாரண நகரமாக மாற்றி அமைப்போம். பல ஸ்மார்ட் நகரங்கள் டெல்லியில் அமைக்கப்படும். ஆப்டா (AAPda - பேரழிவு) விலிருந்து டெல்லி மக்கள் தங்களைக் காப்பாற்றி உள்ளனர். ஆப்டா முக்த் என்ற நிலையை டெல்லியில் உண்டாக்கியதால் இனி ஊழலற்ற, வளர்ச்சியை முன்னிலைப் படுத்தும் ஆட்சியை பிஜேபி அளிக்கும். ஊழலை ஒழிக்கிறேன் என்று கட்சி ஆரம்பித்தவர்கள் அதே ஊழலைச் செய்து ஜெயிலில் இருக்கின்றனர். காங்கிரஸ் ஒரு ஓட்டுண்ணி. அதனுடன் சேர்ந்தவர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து தான் கெட்டதுடன் தன்னுடன் மற்ற கட்சிகளையும் சேர்த்து தோற்கச் செய்யும் கட்சிதான் காங்கிரஸ். இனி டபிள் இன்ஜின் ஆட்சியால் டெல்லி மக்கள் மிகவும் நலமடைவார்கள். யமுனா நதியும் தூய்மைப்படுத்தப்படும். ஊழல் செய்த ஆம் ஆத்மி ஆட்சியாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனையை அளித்து நேர்மையான ஆட்சியை வழங்குவோம்.' 

காங்கிரஸ் தான் டெல்லியை 15 வருடங்கள் ஆட்சி செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிதான் முதன் முதலில் 2013-ம் வருடம் ஷீலா தீட்சித்தின் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிர்த்துப் போட்டி இட்டு ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, பிஜேபி 31 சீட்டுக்கள் என்ற அளவில் தேர்தல் முடிவு ஏற்பட ஆம் ஆத்மி காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை அமைத்து பிறகு காங்கிரசை உதறித் தள்ளி 2015-ல் தேர்தலைச் சந்தித்து 67 சீட்டுக்கள் பெற்று காங்கிரசுக்கு ஒரு சீட்டுக் கூட கிடைக்காமல் செய்து விட்டது.  அடுத்தடுத்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் பூஜ்யம் பெற்று டெல்லி மக்களடையே மிகவும் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உபய கர்த்தா திரு பூஜ்ய கர்த்தா ராஹுல்ஜி என்றால் அது மிகவும் சரியான கருத்தாகும்.  

இந்த டெல்லியின் தீர்ப்பால் காங்கிரசின் இந்தியா கூட்டணியின் (இதில் ஆம் ஆத்மி கட்சியும் உண்டு) கதி கேள்விக் குறியாக உள்ளது. வரும் பெங்கால் தேர்தலில் காங்கிரஸ் மம்தாவுடன் கூட்டு வைக்குமா? என்பது ஒரு பெரும் கேள்விக் குறியாகும். முதலில் மம்தா காங்கிரசுடன் தேர்தல் கூட்டணிக்கு ஓத்துவருவாரா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாகும். 

ஏற்கனவே பக்கத்தில் உள்ள பஞ்சாபில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஆம் ஆத்மி கட்சியின் முடிசூடா தலைவர் அர்விந் கெஜ்ரிவாலே தோற்ற பிறகு அவரது நிலை முன்பு போல் இருக்க வாய்ப்பில்லை. மேலும் 'டெல்லி ஓட்டர்கள் என்னைச் ஜெயிக்க வைத்து, என்னை நிரபராதி என்று நிரூபிப்பார்கள்' என்று பகிரங்கமாக தெரிவித்த பிறகு, அவரது அரசியல் வாழ்வில் இது ஒரு பெரிய இழப்பாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

கெஜ்ரிவாலின் குரு அன்னா ஹாசாரே சொல்கிறார்: 'எளிமை வாழ்வை நான் விரும்புகிறேன் என்று என்னிடம் சொன்னவர் பதவி பணம் என்று அதில் நாட்டம் கொண்டு தான் வசிக்க இருக்கும் பங்களாவைப் புதிப்பிக்க பல கோடிகள் செலவழித்துள்ளார். அதனால் பதவி புகழ் அனைத்தையும் இழந்துள்ளார்.' 

பிஜேபி டெல்லியில் முதல் அமைச்சர் யார் என்பதைத் தெரிவிக்காமலே தேர்தலில் 'மோடியின் காரண்டி .. டெல்லியின் வளர்ச்சி ....  ஆப் டா (ஆம் ஆத்மி கட்சிக்கு போடும் ஓட்டு பேரழிவுக்கு போடும் ஓட்டு)' என்ற கோஷங்களை முன் வைத்து வெற்றி பெற்றுள்ளது. 

மோடி இனி டெல்லியை மாடல் நகரமாக உருவாக்கி அதை பாரத அன்னைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அதை அவர் நிச்சயம் செய்வார் என்று நம்பலாம். 

இந்த தேர்தலுக்கு டெல்லி ஓட்டர்களுக்குத் தான் வெற்றிக் கீரீடம் அளிக்க வேண்டும். 

வாய்மை டெல்லி ஓட்டர்களுக்கு வெற்றிக் கிரீடம் அளித்து அவரகளின் வளர்ச்சிக் கனவு நிறைவேற ஆண்டவனை வேண்டுகிறது.




ஜெய் ஹோ ! மோடிஜி




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017