மஹா சிவராத்திரி - 26 - 02 - 2025 - புதன் கிழமை
மஹா சிவராத்திரி என்றால் மிகவும் பெரிய - சிறப்பு மிக்க சிவராத்திரி என்று பொருள்.
இந்த நாளின் சிறப்பு: இந்த நாளில் தான் சிவ - பார்வதி கல்யாணம் நடந்துள்ளது. இதே நாளில் தான் சிவனின் ஊர்த்துவ தாண்டவம் அரங்கேறியது. அது மட்டுமல்ல. இதே நாளில் தான் சிவன் உலகம் காக்க ஆலகால விஷத்தை உண்ண, பார்வதி தேவி சிவனின் கழுத்தை தமது திருக்கரங்களால் பிடித்து அந்த விஷம் கழுத்திலேயே தங்கி, சிவனும் திருநீலகண்டராக புகழப்படுகிறார். அன்று ராத்திரி முழுவதும் கண் விழித்து சிவ - பார்வதியை பல தோத்திரங்களால் வணங்கி ஆலயங்களில் நடக்கும் பல கால அபிஷேக ஆராதனைகளைக் கண்டு பிரார்த்தித்து சகல விதமான நன்மைகளையும் அடைய வேண்டும்.
வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் கிட்ட சிவ-பார்வதியை இந்த
நன்நாளில் பிரார்த்தித்து நலம் பெறுவோமாக.
Comments