மஹாராஷ்டிரா - ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்

 மஹாராஷ்டிரா - ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்  - மற்றும் பல மாநிலஇடைத்தேர்தல்கள்  முடிவுகள்


1. மஹாராஷ்ரா மாநில தேர்தல் முடிவுகள்:

 

மஹாரஷ்ராவில் பிஜேபி தலைமையில் மஹாயுதி - காங்கிரஸ் தலைமையில் மஹா விஹாஸ் அகாடி என்ற இரண்டு அணிகள் தேர்தலில் போட்டி இட்டதில் மாஹாயுதியின் சுனாமியில் மஹாவிஹாஸ் அகாடி மூழ்கி ஹிமாலயத் தோல்வியைத் தழுவி இது ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த பிஜேபி அணியின் வெற்றி என்று புகழும் நிலை ஏற்பட்டுவிட்டது.

 

இந்த சுனாமியில் மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்தைப் பெறும் தகுதியையும் கார்க்கே காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா - சர்த்பவார் தேசியவாத காங்கிரஸ் எந்த ஒரு கட்சிகளும் பெறத் தவறி விட்டன

 

இதற்குக் குறைந்த பட்சம் மொத்த இடங்களில் 10% வெற்றி பெற்றிருக்க வேண்டும் - 29 சீட்டுக்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த மூன்று கட்சிகளும் உத்தவ் 20, கார்கே 16, சரத்பவார் 10 என்று ஒரு கட்சியும் அந்த இலக்கை அடையாமல் சுனாமியின் தாக்கத்தால் ஒரே அடியாகத் துவண்டு விட்டன.

 

31 மாநிலங்களில் சட்ட சபை உறுப்பினர்கள் உத்திரப்பிரதேசம் 403,

மேற்கு வங்காளம் 294, மஹாராஷ்ரா 288 - என்று மூன்றாவதான பெரிய சட்டசபை மெம்பர்கள் கொண்ட மா நிலமானதால் இந்த வெற்றி - அதிலும் சென்ற லோக் சபாவில் பிஜேபி 9, ஏகாணாத் ஷிண்டே சிவ சேனா 7, அஜித் பவார் காங்கிரஸ் 1 என்று வெறும் 17 லோக் சபா சீட்டுகளில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில், மஹாவிகாஸ் அகாடியோ 30 சீட்டுக்களுக்கும் மேல் லோக் சபாவில் வெற்ற நிலையில் - அசாதாரணமான வெற்றி ஆகும்.

 

இதற்கு உழைத்த அனைத்து மஹாயுதி கட்சியினர்களுடன், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் தியாக உழைப்பும் இந்த வெற்றிக்கு உதவின என்றும் சொல்லப்படுகிறது. அதுவும் ஆர்.எஸ்.எஸ்.தலைமையகம் இருக்கும் நாக்பூர் மஹாராஸ்டிராவில் இருப்பதால் இந்த வெற்றியில் அவர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள் என்பதும் தெரிய வருகிறது. அவர்களின் கோரிக்கையான முதல் அமைச்சர் பிஜேபியாகவே இருக்க வேண்டும் என்பதும் ஏற்கப்படும் என்று தான் தெரிகிறது.

 

'ஒன்று படுவோம், பாதுகாப்பாக இருப்போம்' என்ற மோடியின் கொள்கைக் கோஷம் மஹாராஷ்ரா மக்களை ஈர்த்துள்ளது.

 

அத்துடன், ஜூலை மாதம் ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மஹாயுதி கூட்டணியால் தொடங்கப்பட்ட லட்கி பஹின் திட்டம் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கும் குறைவான குடும்பங்களைச் சேர்ந்த 21-65 வயதுடைய பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.1,500 நேரடிப் பலன்களை வழங்கி உள்ளது.

 

இது மாதாமாதம் அவர்களின் கணக்குகளில் எந்தவித விண்ணப்பங்களும் இன்றி வரவு வைக்கும் திட்டமாகையால் இதுவும் பிஜேபி + வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

 

இது பிஜேபியின் மூன்றாவது முறையாக மஹாராஷ்ராவில் பதவியில் அமர்ந்த சாதனையாகும்.

 

 

 2. ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள்:

 

ஜார்கண்ட் சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்த கூட்டணியில் முக்கிய கட்சி தற்போதைய முதன் மந்திரியான ஹேமந்த் சோரனின் கட்சியான ஜார்க்கண்ட் முத்தி மோச்சா 34 இடங்களிலும், கார்கே காங்கிரஸ் 16 இடங்களிலும், மற்ற அவர்களது கூட்டணியினர் 6 இடங்கள் என்று மொத்தம் 56 இடங்களில் (மொத்த இடங்கள் 81 - பெரும்பான்மைக்கு 41 இடங்கள்) வென்றுள்ளது. முதன் மந்திரியான ஹேமந்த் சோரன் ஊழல் குற்றச் சாட்டில் சிறை சென்றும், பதவி இழந்தும், மீண்டும் பதவி பெற்றும் உள்ள நிலையில் இந்த அவரது வெற்றி சாமானியமானதல்ல.

 

பஜக அணி 24 இடங்களில் (பிஜேபி 21 + மற்றவை 3) வெற்றி பெற்றுள்ளன. சென்ற தேர்தலில் பாஜக + வென்ற இடங்கள் 25 - அதாவது இந்தத் தேர்தலில் ஒரு சீட்டைத் தான் குறைவாகப் பெற்றுள்ளது.

 

இது பிஜேபிக்கு தோல்விதான் என்றாலும் சிறிது ஆராய்ந்தால் பிஜேபியின் இழப்பு தற்காலிகமானதாகவே கருதலாம். ஏனென்றால், முக்கிய கட்சியான ஹேமந்த் சோரன் கட்சி 34 இடங்களை 23.4% ஓட்டு பெற்று வென்றுள்ளது. ஆனால் பிஜேபியோ 21 இடங்களை 33.2 % (கிட்டத்தட்ட 11% ஓட்டு அதிகம்) ஓட்டு பெற்று வென்றுள்ளது என்பதால் அது வென்ற இடங்களில் எல்லாம் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வென்று இருக்க வேண்டும். இது மோடி மேஜிக் என்று தான் கணிக்க வேண்டும்.

 

ஆகையால் ஹேமத் சோரன் வென்றாலும் அவர் மக்களின் மதிப்பீட்டில் வெல்ல வில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் வெற்றி வெற்றி தான் தோல்வி தோல்வி தான் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும்.

 

3. மாநில இடைத் தேர்தல்கள் & லோக் சபா தேர்தல்கள்:

 

மாநில இடைத்தேர்தல்:

 

மொத்தம் 13 மா நிலத்தில் 48 இடங்களுக்கு மா நில சட்டசபைத் தேர்தல் நடந்துள்ளது. மேலும் கேரளா வாய்நாடு - மற்றும் மஹாராஷ்ட்ரா நாண்டெட் லோக் சபாவிலும் இடைத்தேர்தல் நடந்துள்ளது.

 

46 இடங்களில், பிஜேபி + 26 இடங்களில் (9 இடங்கள் அதிகம்) வென்றுள்ளது.

 

கார்க்கே காங்கிரஸ் 7 இடங்களில் (6 இடங்கள் இழப்பு) வென்றுள்ளது.

 

டிடி மேற்கு வங்காளத்தில் அனைத்து 6 இடங்களிலும் வெற்றி.

 

ஆம் ஆத்மி கட்சி 3, சமஜ்வாதி கட்சி 2,

 

இடது சாரி ஆளும் கட்சிக்கு கேரளாவில் 1 இடம் கிடைத்துள்ளது.

 

லோக் சபா இடைத்தேர்தல்:

 

இரண்டு இடங்களில் நடந்த லோக் சபா தேர்தல்களில் காங்கிரஸ் இரண்டிலும் வென்றுள்ளது.

 

வாயநாட்டில் லோக் சபாவுக்கு போட்டி இட்ட பிரியங்கா காந்தி 4.1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். (பிரியங்கா காந்தி பெற்ற ஓட்டு: 6.22 லட்சம். ராகுல் காந்தி பெற்ற ஓட்டு: 6.47 லட்சம் - இது முன்பு ராகுல் காந்தி பெற்ற ஓட்டுக்களை விட சுமார் 25,000 ஒட்டுக்கள் குறைவு.)

 

மஹாராஷ்ராவில் நாண்டட் லோக்சபாவில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசமான 1457 ஓட்டுக்களில் கார்க்கி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

 

பொதுவான குறிப்பு:

 

உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பிஹார் ஆகிய இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் பிஜேபி+ அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் 9 இடங்களுக்கு 7 இடங்கள் பிஜேபி+ வென்று சமஜ்வாதி கட்சி வெறும் 2 இடங்களில் வென்றுள்ளது. ஆகையால் இந்த மாநில இடைத்தேர்தல் பிஜேபிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. மேலும் இதில் அந்தந்த மாநில ஆளும் கட்சிகள் தான் பொதுவாக வென்றுள்ளன என்பதையும் காணலாம். வெற்றி பெற்ற அனைத்து கட்சி உறுப்பினர்களையும் வாய்மை பாராட்டுகிறது.

 

குறிப்பாக மஹாராஷ்ராவில் வெற்றி பெற்ற மகாயுதி - இந்தியா கூட்டணி ஹேமந்த் சோரன் வழிகாட்டலில் ஜார்கண்ட்டில் வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் - கார்க்கே காங்கிரஸ் ஆகியவர்களுக்கு வாய்மை பூச்செண்டு கொடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு நல் ஆட்சி வழங்க வாழ்த்துகிறோம்

 



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017