BAPS – ஹிந்து கோயில் அபுதாபி

 


அபுதாபியில் மோடியின் புனிதமான திருக்கரங்களால் திறக்கப்பட்ட கோவில்  “BAPS - (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) ஹிந்து கோயில் அபுதாபி” என்று பெயர் பெற்றுள்ளது. இது ஸ்ரீ ஸ்வாமி நாராயணருக்கான கோயிலாகும்.  BAPS என்பது ஒரு சமூக ஆன்மீக ஹிந்து மதக் கொள்கைகளைப் பரப்ப உருவான சத் சங்கமாகும். ஹிந்து மதத்தின் அடித்தளமாக விளங்கும் நான்கு வேதங்கள் தான் அந்த சங்கத்தின் கொள்கையாகும். ஹிந்து மதத்தைப் பரப்ப, அதன் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு முதல் குருவான பகவான் ஸ்வாமிநாராயணன் (1781 – 1830) 18-வது நூற்றாண்டில் மக்களிடம் உபதேசித்தார். அதன், பிறகு சாஸ்திரிஜி மஹாராஜ் (1865 – 1951) அவர்களால் 1907 ஆண்டு இந்த பாப்ஸ் சன்ஸ்தா உருவாக்கப்பட்டு ஹிந்து மக்களின் உருவ வழிபாட்டிற்கும், ஹிந்துமதச் சடங்குகள் செய்வதற்கும் உதவும் விதமாக இந்தியா மற்றும் பல உலக நாடுகளில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக அபுதாபியில் மோடியின் முயற்சியால் கட்டப்பட்டு திறக்கப்பட்டது தான் இந்த பாப்ஸ் அபுதாபி இந்துக் கோயிலாகும்.

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்து கோவில் கட்டுவது குறித்த அறிவிப்பை அபுதாபி அரசு வெளியிட்டது. மேலும் கோவில் கட்டுவதற்காக 27 ஏக்கர் நிலத்தையும் அந்த அரசு வழங்கியுள்ளது. மோடி அபுதாபிக்கு அரசுப்பயணமாக 2018-ம் வருடம் வந்த பொழுது அந்த கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். 

கோவில் கட்டுவதற்கு இளஞ்சிவப்பு கற்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டது. இந்த ராஜஸ்தான் கற்களில் என்ன விசேஷம் என்றல் இது சுமார் 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கக்கூடியது. இந்த கோவிலின் உயரம் 108 அடி, நீளம் 262 அடி, அகலம் 180 அடி அளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை கட்டுவதற்கு சுமார் 904 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவில் அபுதாபியின் அல் ரபா என்ற இடத்தில் இருக்கும் அபு முரேகா என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் துபாய்க்கும் – அபுதாபிக்கும் இடையே அமைந்துள்ளது. துபாய், அபுதாபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்து மக்கள் அதிகம் இருப்பதால் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. துபாய்க்கும் – அபுதாபிக்கும் இடையே அமைந்திருந்தாலும் கோவில் அபுதாபியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அபுதாபியில் உள்ள முதல் இந்து கோவில் என்று கருதப்படுகிறது.

இந்த கோவிலை பிரதமர் மோடி 14 – 02 -2024 புதன் கிழமை அன்று திறந்து வைத்தார். அரபு நாட்டில் வாழும் சுமார் 1 கோடி இந்துக்களுக்கு இந்தக் கோயில் வழிபாட்டுத் தலமாகத் திகழப் போகிறது.

இந்த கோவிலில் சுவாமிநாராயணன், அக்ஷர்-புருஷோத்தம், ராதா-கிருஷ்ணா, ராம-சீதா, லக்ஷ்மணன், அனுமன், சிவன்-பார்வதி, விநாயகர், கார்த்திகேயர், பத்மாவதி-வெங்கடேஸ்வரா, ஜகன்னாதர் மற்றும் அய்யப்பன் உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயிலின் மூலவரான ஸ்ரீ நாராயணனை சேவித்து, வாய்மை வாசகர்கள் – அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவரது அருள் கிட்டப் பிரார்த்திக்கிறோம்.

பாரத தேசத்தின் தூய மூல வேரான வேதத்தைக் காக்கும் இந்த பாப்ஸ் சத் சங்கத்தையும் வாய்மை உங்கள் சார்பாக மலர்ச்செண்டு கொடுத்து மனதாரப் பாராட்டி போற்றுகிறது.

வேதம் தழைக்க, தர்மம் அரசாள, அகில உலகத்தினர் அத்தனை பேர்களும் சுபீஷ்டமாக வாழ பாப்ஸ் சத் சங்கத்தின் சேவை பரவட்டும். உலகம் அமைதிப் பூங்காவாக மாற அவர்களின் கொள்கைகளுக்கு ஆதரவு அதிகரிக்கட்டும்.

ஓம் நமோ நாராயணாய.

 

BAPS ஹிந்துக் கோவில் அப்தாபி – சில முக்கிய புகைப்படங்கள்









Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017