ரத சப்தமி – 16 -2 – 2024 – வெள்ளிக்கிழமை
ரதம்
என்றால் தேர். சப்தமி என்றால் திதி என்று பெயர். இந்த நாள் தான் சூர்யபகவான் அவதரித்த
திரு நாளாகும். ஆகையால் இந்த நாள் சூரிய ஜயந்தியாகும்.
ஏழு
குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் சூரிய பகவான் உலகத்தைச் சுற்றி பன்னிரண்டு ராசிகளையும்
கடந்து வருகிறார். அந்தக் குதிரைகள் ஏழு வர்ணங்களகவும், ஏழு நாட்களாகும் உருவகிக்கப்படுகிறது.
ஏழு குதிரைகளும் வெள்ளை நிறத்தவைகள் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த
அவரின் தேருக்கு சாரதி அருணா.
சூரியபகவான்
தன் அவதார தினத்தில் தன் ரதத்தை வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார். அது உழவர்களின்
அறுவடை நேரமாகும். மேலும் வசந்த காலத் தொடக்கமும் ஆகும்.
பாரத போரின் போது போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரிவதற்கு உத்திராயண காலம் வருவம் வரை காத்திருந்தார். உத்திராயணம் காலம் வந்த பிறகும் அவரது உயிர், உடலை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் புரியாமல் தவித்த பீஷ்மருக்கு விளக்குவதற்காக கிருஷ்ணர் அருளால் வியாசர் அங்கு வருகிறார். அவர் ரத சப்தமி வழிபாடு பற்றி பீஷ்மருக்கு விளக்குகிறார். வியாசர் சொன்னபடி பீஷ்மரும், "இந்த உடல் அதிகமான பாவங்களை சுமந்து கொண்டிருப்பதால் உயிர் பிரியாமல் உள்ளது. அதனால் என்னுடைய பாவங்கள் அனைத்தும் எரிந்து, இந்த உயிர் உடலை விட்டு நீங்கும் வகையில் அதிகமான வெப்பத்தை என் மீது பாய்ச்சி அருள வேண்டும்" என வேண்டிக் கொண்டார். அதற்கு பிறகே அவருடைய உயிர் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன.
ஆகையால்
ரத சப்தமி சூரிய வழிபாடு நம் பாவங்கள் அனைத்தையும் வேரோடு பொசிக்கி நமக்கு நல் வாழ்வு
இகத்திலும், பரத்திலும் அளிக்கும்.
சூரிய
பகவானின் பாதார விந்தங்களில் நமஸ்கரித்து, துதித்து அவரது அருள் பெறுவோமாக.
சூரிய
பகவானைத் துதிக்கும் மந்திரங்கள்:
1. காயத்திரி மந்திரம்:
1. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
2. ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
2. குளிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் :
ஸப்த ஸ்ப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி!
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸூ ஜன்மஸூ
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி!
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய!
Comments