நமஸ்தே பிரான்ஸ் – நமஸ்தே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்



நமஸ்தே பிரான்ஸ்ஜூலை 13 – 14 2023 – இரண்டு நாட்கள் அரசுப் பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பை ஏற்று மோடி பயணம்.

நமஸ்தே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஜூலை 15-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத்தின் அழைப்பை ஏற்று மோடி ஐந்தாவது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசுப் பயணம்.





நமஸ்தே பிரான்ஸில் மோடியின் பயணத்தின் முக்கிய அம்சங்கள்:

1. பிரான்ஸின் தேசிய தினம் அல்லது பாஸ்டில் தினக் கொண்டாட்டம் ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் பாரீசில் நடந்த விழாவில் மோடி கெளரவ விருந்தினராக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடன் பங்கேற்றார். .

அந்தக் கொண்டாட்டத்தில் 269 வீரர்கள்மூன்று ராணுவப் பிரிவான ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் வீர்ர்கள் பாஸ்டில் தின அணிவகுப்பில் கலந்து கொண்டார்கள்.

100 வருடத்திற்கு முன் பிரான்ஸ் தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள் பிரான்ஸ் மண்ணில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இதில் முக்கிய பங்காற்றியவர்கள் பஞ்சாப் ரெஜிமண்டைச் சேர்ந்தவர்கள். அதை நினவு கூறும் விதமாக தற்போதைய பஞ்சாப் ரெஜிமண்ட் படைவீர்ர்களும் இந்த பிரான்ஸ் தேசிய தின ராணுவ அணிவகுப்பில் பங்குகொண்டார்கள்.

அத்துடன் பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்ட ரவேல் போர் விமானங்கள் மூன்று இந்திய விமானப் படையின் சார்பாகவும் பங்குகொண்டன்.  

மேலும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தொலைதூர தாக்கும் ஏவுகணைகளைக் கொண்ட .என்.எஸ். சென்னையும் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றதைக் குறிப்பிட வேண்டும்.

முன்பு 2009-ம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமர் மன்மோஹன் சிங் பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

2. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் பாரதப் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் எனும் உயரிய விருது வழங்கினார். இதன்மூலம் இந்த விருதை பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

இந்த கிராண்ட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் என்பது பிரான்ஸ் நாட்டின் சார்பில் ராணுவம் மற்றும் உயர்ந்த பதவிகளில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு வழங்கும் உயரிய விருதாகும்.

இதற்கு முன்பு இந்த விருதை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, மாஜி வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பூட்ரோஸ் -காலி உள்ளிட்டவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி பெற்ற உயரிய விருதுகளின் பட்டியல்:

கடந்த ஜூன் மாதம் எகிப்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி நைல், மே மாதம் பப்புவா நியூ கினியாவின் கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு, பலாவ் குடியரசின் எபகல் விருது, ஆர்டர் ஆஃப் தி 2021 விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

மேலும் பூடானின் டிரக் கியால்போ, 2020ல் அமெரிக்காவின் லீஜியன் ஆப் மெரிட், 2019 ல் பக்ரைனின் கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரினாய்ஸ்சன்சன், 2019 ல் ரஷ்யாவின் ரஷ்யாவின் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது, ஐக்கிய அரபு எமிரேட்சின் ஆர்டர் ஆஃப் சயீத் விருது, 2018 ல் பாலஸ்தீனத்தின் கிராண்ட் காலர் விருது, 2016ல் ஆப்கானிஸ்தானின் காஜி அமீர் அமானுல்லா கான் ஸ்டேட் ஆர்டர், சவுதி அரேபியாவின் ஆர்டர் ஆஃப் அப்துல்அஜிஸ் அல் சவுத் விருது உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. . உலகின் பழமையான இந்திய மொழியான தமிழ் மொழியில் உன்னதமான அறநூலான திருக்குறளை உலகத்திற்குத் தந்த திருவள்ளுவர் சிலை பிரான்ஸில் நிறுவ மோடி ஏற்பாடு செய்துள்ளார்.

3. பிரான்சில் இந்தியாவின் பிரபலமான யுபிஐ சேவையை தொடங்க ஒப்பந்தம். இது முதல் கட்டமாக ஈபில் டவர் சுற்றுலாத்தலத்திலிருந்து தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த ரூபாய் சேவை பிரான்ஸில் உடனே செயல்படுத்த இருப்பது ஆன் லைன் வர்த்தகம் மூலம் நமது இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் என்பது ஒரு இனிய செய்தியாகும்.

4. முன்பு 2015 ஆண்டு மோடி மேற்கொண்ட பாரிஸ் பயணத்தில் 36 ரபேல் போர் விமானங்கள் 4 பில்லியன் ஈரோஸ் விலையில் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கடற்படைக்கு 26 போர் விமானங்கள், உயர் தர தொழில் நுட்பம் கொண்ட 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்திய கடற்படைக்கு 22 ஒருவர் அமர்ந்து ஓட்டும் ரபேல் மெரீன் ஆகாய விமானம்அத்துடன் ரபேல் மெரீன் ஆகாய விமானத்தை ஓட்ட 4 பயிற்சி விமானங்கள்ஆகியவைகளை வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அத்துடன் ஸ்கார்ப்பியன் நீர் மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவிலேயே மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் பம்பாய் மெகசான் கப்பல் கட்டும் தளத்தில் பிரான்ஸ் தொழில் நுட்பத்துடன் தொடங்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகிய சம்பவம் மோடியின் இந்தியாவை அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு எட்ட எடுக்கும் முயற்சிகளுக்கு ஒரு சிறந்த வெற்றியாகும்.

இந்தியாபிரான்ஸ் ஸ்ராடஜிக் கூட்டாளி என்ற நிலை 1998 வருடத்திலிருந்து தொடர்ந்து கடந்த 25 வருடங்களாக மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்தியா இதுவரை பல நாடுகளுடன் 35-க்கும் அதிகமான ஸ்ரடஜிக் கூட்டாளி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தாலும், பிரான்ஸ் நாட்டுடன் இந்தியாவின் ஒப்பந்தம் தான் முதலாவது என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்தியா அடுத்த 25 வருடத்தில் தனது 100 ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறது. ஆகையால் இன்னும் 25 ஆண்டுகள் இந்த இந்தியா-பிரான்ஸ் கூட்டாக பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, கடல் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடுகள், கல்வி, கலாச்சாரம், மக்கள் தொடர்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் கூட்டாகச் செயல்பட்டு முன்னேற ஒப்புக்கொண்ட தருணமாவதால் இது மோடியின் பயணத்திற்குக் கிட்டிய வெற்றியாகும்.

100-வது ஆண்டு சுதந்திர விழா கொண்டாடும் போது இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவாக அயராது உழைக்கும் மோடியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாரத மாதாவின் அருள் பெற்றவர் நமது பாரதப் பிரதமர் என்றால் மிகையாகாது.

உலக அளாவில் பரவி வரும் தீவிரவாதம், சுற்றுச் சூழல் வெப்பமாவதைத் தடுக்கும் நடவடிக்கைகள், இந்தியபசிபிக் நாடுகளைக் காத்தல்ஆகிவைகளிலும் ஒருங்கிணைந்து இந்தியா-பிரான்ஸ் செயலாற்றவும் ஒப்புக்கொண்டுள்ளன.

 

இதன் அடிப்படையில் கீழ்க்கண்டவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன:

•     தூதரக நெட்வொர்க் - மார்சேயில் ஒரு புதிய இந்திய தூதரகம் மற்றும் ஹைதராபாத்தில் ஒரு பணியகம் டி பிரான்ஸ் திறக்கப்படும்.

•     கல்வி - இன்ஸ்டிட்யூட் பாலிடெக்னிக் டி பாரிஸ் (ஐபிபி) மற்றும் ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி மெட்ராஸ் இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல்.

•     பிரெஞ்சு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்திய மாணவர்களுக்கு 5 வருட குறுகிய கால ஷெங்கன் விசா வழங்குதல்.

•     கலாச்சாரம் - புது தில்லியில் ஒரு பெரிய புதிய தேசிய அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கு இந்தியாவின் பங்குதாரராக பிரான்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

•     ஆராய்ச்சி - பிரான்ஸ் மற்றும் இந்தியா புதிய திட்டங்களுக்கு மேம்பட்ட ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான இந்திய-பிரெஞ்சு மையத்தின் (IFCPAR/CEFIPRA) நிதியை அதிகரிக்கும்.

5. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அவரது மனைவி பிரிஜிட் ட்ரோக்நியூக்ஸ், பிரான்ஸ் நாட்டின் பிரதம மந்திரி எலிசபெத் போர்ன், பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தின் தலைவர் யாஎல பிரௌன் பிவெட் (Yaël Braun-Pivet), பிரெஞ்சு செனட்டின் தலைவர் ஜெரார்ட் லார்ச்சர் ஆகியவர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினார் மோடி. மோடி அயல் நாட்டுத் தலைவர்களுக்கு பரிசுப் பொருட்களை தேர்வு செய்யும் போது அவைகள் நமது பாரத தேசத்தின் பாரம்பரிய கலாச்சாரம், கலைத் திறன், பல இந்திய நகரங்களின் சிறந்த கை வேலைப்பாடுகள் ஆகியவைகளுடன் பரிசு பெறுபவர்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் விதமான புத்தகங்கள்நமது ஹிந்து தர்மத்தை வெளிப்படுத்தும் அரிய பொருட்கள் ஆகியவைகளைத் தேர்வு செய்து அளிப்பதில் மோடி தனிக் கவனம் செலுத்துவார்.


நமஸ்தே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுப் பயணத்தின் 

முக்கிய அம்சங்கள்:

 

ஜூலை 15-ம் தேதி ஒரு நாள் அரசுப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை  அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் நேரில் வந்து வரவேற்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு இரு நாடுகளின் கரன்ஸியைப் பயன்படுத்துவது, இரு நாடுகளின் டிஜிட்டல் பணப் பரிமாற்ற நடைமுறைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தின் கிளையை அபிதாபியில் அமைப்பது தொடர்பாக, இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு நாடுகளின் கரன்ஸிகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதன் மூலம், பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உலகச் சந்தையில் உயர்ந்து, அதன் நம்பகத் தன்மை, பிற நாட்டு நாணயங்களுடன் போட்டி போடும் வலிமை ஆகியவைகள் ஏற்படும்.

புர்ஜ் கலிபாவில் தேசியக் கொடி: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில், உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புர்ஜ் கலிபாவில் ஜூலை 15-ல் இந்திய தேசியக் கொடியின் வர்ணம் ஜொலித்தது. மேலும், பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றது.

UAE இன் COP-28 மற்றும் இந்தியாவின் G-20 பிரசிடென்சி மாநாடுகளில் பங்கேற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.


2023 ஆம் ஆண்டில் COP28 மாநாடு நடத்தும் பெருமையை ஐக்கிய அரபு எமிரேட் 

பெற்றதற்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.




மோடிக்காக தயாரிப்பட்ட அனைத்து உணவுகளும் காய்கறிகள் மற்றும் தாவர எண்ணெய்கள் கொண்டு முட்டை மற்றும் பால் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் பேரீச்சம்பழம் கலந்த உள்ளூர் காய்கறிகளைக் கொண்ட சாலட், அரபு உணவு வகைகளில் பாரம்பரியமான ஹரீஸ், கேரட் அண்ட் காலிப்ளவர் தந்தூரி, கிரில்டு வெஜிடபுள்ஸ் வித் மசாலா சாஸ், உள்ளூர் பழங்கள் இனிப்பிற்காகவும் வழங்கப்பட்டுள்ளன.

மோடியின் ஐக்கிய அரபி எமிரேட் முதல் பயண்ம் 2015 ஆகஸ்டில் நிகழ்ந்தது. இரண்டாவது பயணம் 2018 பிப்ரவரியிலும், மூன்றாவது பயணம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும், நான்காவது பயணம் 2022 ஜூன் மாதத்திலும் நிகழ, தற்போதையது அவரது ஐந்தாவது பயணமாகும்.

2015 ஆகஸ்டில் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது, 34 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு மேற்கொண்ட முதல் பயணமாக அது பார்க்கப்பட்டது. மோடிக்கு முன், இந்திரா காந்தி 1981ல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருந்தார்.

2017 குடியரசு தினத்திற்கு, இப்போதைய அமீரகத்தின் தலைவரான முகமது பின் சயீத் அல் நஹ்யானைஅவர் அப்போது நாட்டின் தலைவராக இல்லாமல் அபுதாபியின் பட்டத்து இளவரசராக இருக்கும் நிலையிலும், மரபை மீறி - சிறப்பு தலைமை விருந்தினராக மோடியால் அழைக்கப்பட்டு, அவரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதனால் மோடிக்கும் இப்போதுள்ள அமீர் தலைவருக்கும் புரிதல் மிகவும் சீரிய முறையில் சிறப்பாக உள்ளது என்பது கண்கூடு.

இந்தியா- அமீரகம் உறவின் அடித்தளமாக இருக்கும் மூன்று அம்சங்கள் இதோ:

அந்த மூன்று அம்சங்கள் மூன்று E-க்களை அடிப்படையாக கொண்டது. அவை; ஆற்றல் (Energy), பொருளாதாரம் (Economy) மற்றும் அயல்நாட்டில் குடியெயர்ந்து வாழ்பவர்கள் (EXpatriate)

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையிலான உறவுகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட CEP (விரிவான பொருளாதார கூட்டாண்மை) ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா கையெழுத்திட்ட முதல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். இந்தியா கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.


 

மோடியின் இந்த மூன்று நாள் அரசுப் பயணம் மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

பல ஒப்பந்தங்கள் கை எழுத்தானதற்கு இரு நாட்டு அதிகாரிகள் பல மட்ட ஆலோசனைகளை நிகழ்ந்தி இருக்க வேண்டும். இவைகள் எல்லாம் மிகவும் பொருளாதாரம், பணம் பட்டுவாடா, பெரும் அளவு ராணுவ தளவாடக் கொள்முதல் ஆகியவைகளைப் பார்க்கும் போது இதன் மூல கர்த்தாவான மோடி என்ற அயராது பாரத தேசத்தை ஒரு வலுவான வல்லராசக ஆக்க அயராது பாடுபடும் உன்னதத் தலைவரைப் பெற பாரத தேச மக்கள் செய்த பூர்வ புண்ணியம் என்று தான் உறுதியாகச் சொல்ல வேண்டும்.

ஜெய் ஹோ ! மோடி ஜிபாரத மாதாவுக்கு ஜேவந்தே மாதரம் !


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017