கர்நாடகாவில் காங்கிரஸின் வரலாற்று வெற்றி

காங்கிரஸ் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மொத்த முள்ள 224 தொகுதிகளில் தனித்து நின்று 135 சீட்டுக்கள் – அதாவது ஆட்சி அமைக்க வெற்றி பெற வேண்டிய 113 சீட்டுக்களை விட 22 சீட்டுக்கள் வென்று அசுர வெற்றி பெற்றுள்ளது . கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற 80 சீட்டுக்களை விட 55 சீட்டுக்கள் அதிகம் பெற்று பிஜேபி – ஜேடிஎஸ் இரண்டு கட்சிகளையும் மக்கள் தோற்கடித்து விட்டார்கள் பிஜேபி இந்தத் தேர்தலில் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்தது . மோடி முழு மூச்சுடன் தேர்தல் பிரசாரம் செய்தார் . அமித் ஷா – நட்டா – பல மத்திய அரசு மந்திரிகள் – பிஜேபி மாநில முதல்வர்கள் – தமிழ் நாட்டு பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை என்று ஒரு பெரும் பட்டாளமே தேர்தல் பிரசார களத்தில் மும்முரமாக இயங்கியது . பிரசாரத்தில் எந்த தொய்வையோ , குறையையோ காணமுடியாத அளவிற்கு பிஜேபி கட்சியின் செயல்பாடு இருந்தது . இவ்வளவு முயன்று தோல்வி கண்டாலும் , வெறும் 66 சீட்டுக்களே – காங்கிரஸ் பெற்ற சீட்டுக்களை ஒப்பிடும் போது இந்த சீட்டுக்கள் பாதிக்கும் 3 சீட்டுக்கள் குறைவாகவே பெற்றது அதிர்ச்சித் தோல்வி என்பதில் எந்தவித ஐயமும் இல்லை தான் ....