ஓட்டர்களின் தாராள மனப்பாங்கு
தேர்தல் திருவிழாவை கோலாகலமாக ஆக்கிய ஓட்டர்கள் |
||
தேர்தல் |
ஜெயித்த கட்சி |
விளக்கம் |
குஜராத் சட்டமன்ற தேர்தல் |
பாரதீய ஜனதா கட்சி |
மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களில் வெற்றி – இது 85%-க்கு மேல். 7-வது முறையாக ஆட்சி கட்டிலில் தொடர்ந்து வெற்றியும், 27 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியும் சரித்திர சாதனை. |
ஹிமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல் |
காங்கிரஸ் கட்சி |
பிஜேபியின் அசுர தேர்தல் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணரினாலும், மொத்தமுள்ள 68 இடங்களில் 40 இடங்களில் வெற்றி. பிஜேபி தலைவர் ஜே.பி. நாட்டாவின் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி – பிஜேபியின் 10 மந்திரிகளில் 8 மந்திரிகள் தோல்வி - என்று காங்கிரஸ் மகிழ்ச்சி அடையலாம். ஓட்டு விகித வித்தியாசம் வெறும் 0.90 என்பது அந்த மகிழ்ச்சியில் ஒரு ஓட்டை விழுந்தது போலாகி விட்டது. |
டெல்லி மாநகராட்சி தேர்தல் |
ஆம் ஆத்மி கட்சி |
பிஜேபியின் 15 வருட ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மொத்தமுள்ள 250 இடங்களில் 134 இடங்களில் வெற்றி பெற்று நவம்பர் மாதம் 2012 வருடத்தில் உருவான 10 வயதே நிரம்பிய கட்சியின் அசுர வளர்ச்சியே இது.. |
மேலே உள்ள தேர்தல்களுடன் 6 இடங்களில் சட்டமன்ற தேர்தல்கள் 5 மாநிலங்களிலும், 1 லோக்சபா தேர்தல் உத்திரபிரதேசத்திலும் நடந்துள்ளன. அவைகளிலும் ஓட்டர்கள் அனைத்து கட்சியினரும் மகிழவே ஓட்டளித்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
6
சட்டமன்ற இடைத்தேர்தல்களும், 1 பாராளுமன்ற தேர்தலும் |
||
தேர்தல் |
ஜெயித்த கட்சி |
விளக்கம் |
உத்திரபிரதேச சட்டமன்றம் - 2 & பாராளுமன்றம் 1 |
பிஜேபி – 1 சட்டமன்றத் தொகுதி ராஷ்ரிய ஜனதா தாள் – 1 சட்டமன்றத் தொகுதி சமஜ்வாதி கட்சி – 1 பாராளுமன்றத் தொகுதி |
நேதாஜி என்று புகழப்படும் சமஜ்வாதி கட்சியின் தலைவர் முலாம்சிங்கின் தொகுதியில் அவரது மருமகள் டிம்பிள் யாதவ் பாராளுமன்றத் தொகுதியில் ஜெயித்தது ஆச்சரியம் இல்லை. ஆனால் பிஜேபி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ராம்பூர் தொகுதியில் முஸ்லீம் வேட்பாளரை தோற்கடித்து முதன் முறையாக வென்று சரித்திரம் படைத்துள்ளது. |
பீஹார் சட்டமன்றத் தேர்தல்
- 1 |
பிஜேபி கட்சி |
நிதிஷ் குமார் பிஜேபியுடனான உறவை முறித்துக் கொண்டதற்குப் பிறகு நடக்கும் இந்தத் தேர்தல் மஹா மந்தன் சூராவளிப் பிரசாரத்திற்கு பின்னடைவு. சுமார் 3600 ஓட்டுக்கள் தான் வித்தியாசம் என்று அவர்கள் மனத்தைத் தேற்றிக் கொள்ளலாம். |
சதீஷ்கர்
& ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்கள் – ஒவ்வொன்றிலும் 1 இடம் |
காங்கிரஸ் கட்சி |
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான சதீஷ்கர் & ராஜஸ்தான் இரண்டிலும் காங்கிரஸ் பிஜேபியை விட அதிக ஓட்டு வித்தியாசங்களில் வென்றுள்ளதை காங்கிரஸ் கொண்டாடலாம். அதுவும் சச்சின் பைலட்-அசோக் கெலாட் லடாய் பின்னணியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. |
ஓடிசா சட்டமன்றத் தேர்தல்
- 1 |
பிஜு ஜனதா தளம் |
பிஜேபியை ஆளும் கட்சி சுமார் 43,000 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து 5-வது முறையாக 2019-ல் ஜெயித்து ஆட்சி செய்யும் முதன் மந்திரி நவீன் பட்நாயக்கிற்கு வெற்றிக் கீரீடமாகும். |
நடந்து முடிந்த மூன்று தேர்தல்கள் – பல
மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் ஆகியவைகளின் முடிவுகள் ஓட்டர்களின் தாராள – தயாள
மனப்பாங்கை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. அது தரமானதா ? – என்று
பார்த்தால் பதில் சொல்வது அவ்வளவு எளிதாகப் படவில்லை.
27 வருடங்கள் ஆட்சியில் இருந்து இப்போது மீண்டும் 5 ஆண்டுகள்
சேர்த்து 32 வருடங்கள் - 8 முறை தொடர்ந்து ஆட்சி. கிடைத்த சீட்டுக்களிலும் சரித்திரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
குஜராத்தில் காங்கிரஸ் படுதோல்வி – மொத்தமுள்ள 33 ஜில்லாக்களில் 15 ஜில்லாக்களில்
ஒரு சீட்டு கூட வெற்றி பெறவில்லை. மேலும் காங்கிரஸ் புதிதாக அமையவிருக்கும் குஜராத் சட்ட மன்றத்தில் எதிர்கட்சி என்ற தகுதியையும் இழந்து
விட்டது.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ 5 சீட்டுகளைப்
பெற்று 13% வோட்டு விகிதம் பெற்று இந்தியாவின் தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற்று விட்ட்து. இது ஒரு அசுர
வளர்ச்சி. அதன் முதல் மந்திரி வேட்பாளராக நின்றவர் தோற்றார் என்பது வேறு விஷயம்.
2017 சட்ட மன்றத் தேர்தலை ஒப்பிடும் போது, பிஜேபி கூடுதலாக 57 சீட்டுகளும், காங்கிரஸ் 60 சீட்டுக்கள் இழப்பும், புதிதாகப் போட்டி இட்ட ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் பெற்றுள்ளதைப் பார்க்கும் போது காங்கிரசின் இடத்தை குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி பிடித்துவிடுமோ என்ற நிலை உண்டாகிவிட்டது.
ஹிமாசல் பிரதேசம்
வோட்டு வித்தியாச சதவிகிதம் – காங்கிரஸ் பிஜேபியை விட வெறும் 0.90 % பெற்று 40 இடங்களிலும் பிஜேபி 25 இடங்களிலும் வென்றுள்ளது.
2017 தேர்தலில் – பிஜேபி – 44 இடங்கள் – 49.8 % ஓட்டு சதவிகிதம். காங்கிரஸ் – 21 இடங்கள் – 41.7 ஓட்டு சதவிகிதம் – பிஜேபி காங்கிரசை விட ஓட்டு வித்தியாசம் – 8% கூடுதல்.
இமாசல் பிரதேசத்தில் காங்கிரசில் 4 முறை முதல் மந்திரி பதவி வகித்து அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய வீர பத்ர சிங் ராம்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி பிரதிபா சிங் கியோந்தல் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் இந்தத் தேர்தலில் அரச குடும்பத்தினரில் நின்றவர்களில் 2 பேர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். அந்த இருவரில் ஒருவரான வெற்றி பெற்ற முன்னால் காலம் சென்ற வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் முதல் மந்திரி பதவிக்குப் போட்டி இட்டாலும் பிறகு காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுக்குப் படிந்து போட்டியிலிருந்து விலகினார்.
பிஜேபி நட்டாவின் சொந்த மாநிலம் ஹிமாசல் பிரதேஷ்.
ஹிமாசல் பிரதேசத்தில் ஒரே கட்சி இரண்டு முறை ஜெயித்த வரலாறு இல்லை.
பிஜேபிக்கு ஏழைகளின் ஓட்டு 2017-ல் 48% ஆக இருந்தது, இந்த 2022-தேர்தலில் 38% குறைந்துள்ளது. ஆனால் காங்கிரசுக்கு அவர்களின் ஓட்டு 2017-ல் கிடைத்த 40%லிருந்து 2022-ல் 51% உயர்ந்துள்ளது. அது தான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கணிக்கப்படுகிறது.
பழைய பென்சன் திட்டம் & அக்னிபாத் திட்டம் இரண்டும் பிஜேபிக்கு ஓட்டர்களிடம் ஆதரவு இன்றி அவைகள் காங்கிரசைக் காப்பாற்றி உள்ளது.
பிஜேபியின் முதன் மந்திரி ஜெய் ராம் தாக்கூர் 37,000 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார். இது எந்த முதன் மந்திரியும் பெறாத வெற்றியாகும். ஆனால் அவரது மொத்த மந்திரிகள் 10 மந்திரிகளில் 8 பேர்கள் தோற்றுள்ளார்கள்.
காங்கிரஸ் – பிஜேபி ஓட்டு வித்தியாச சத விகிதம் 1% என்றாலும் காங்கிரஸ் 15 சீட்டுகள் பிஜேபியை விட அதிகம் பெற்றது. வெற்றி பெற்ற ஓட்டுகளின் வித்தியாச சத விகிதம் 5-க்கும் குறைவாக 18 சீட்டுகளில் உள்ளன. இவைகள் எல்லாம் காங்கிரஸ் வெற்றியின் குதூகலத்தைக் குறைத்தாலும், அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள் என்பது உண்மை நிலவரமாகும். பெரும்பான்மைக்கு 35 சீட்டுக்கள் என்ற நிலையில் காங்கிரஸ் பெரும்பான்மையை விட வெறும் 5 இடங்களே பெற்றுள்ளதும், உட் கட்சிப் பூசல்கள் மிகவும் பலமாக புகைந்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் 5 வருடங்கள் ஆட்சியில் நீடிப்பார்களா என்ற சந்தேகம் காங்கிரஸ்கார்ர்களிடையே இருப்பது கவலை கொள்ள வைக்கிறது.
டெல்லி மாகராட்சி தேர்தல் முடிவுகள் – மொத்த தொகுதிகள் - 250 |
||
கட்சி |
வெற்றி பெற்ற தொகுதிகள் |
விளக்கம் |
ஆம் ஆத்மி கட்சி |
134 |
பிஜேபியின் 15 வருடகால ஆட்சியை முறியடித்த 10 வயதே நிறம்பிய சிறுவனான ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறிப்பிடத் தக்கது. 126 இடங்கள் மெஜாரிட்டுக்கு என்ற நிலையில் 8 இடங்கள் தான் அதிகம். காங்கிரஸ் அதல பாதாளத்தில் இருந்து 12% ஓட்டு சதவிகிதம் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது ஒரு ஆறுதலாகும். |
பிஜேபி |
104 |
பிஜேபியின் வாக்கு சதவிகிதம் 39 – ஆம் ஆத்மி வாக்கு சதவிகிதம் – 42 – இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 3. |
காங்கிரஸ் |
9 |
காங்கிரஸ் டெல்லியில் வளுவிழந்து தான் இன்னும் உள்ளது. அது ஆம் ஆத்மி கட்சி – பிஜேபி ஆகிய இரு கட்சிகளையும் எதிர்கொள்ள இன்னும் தயார் நிலையில் இல்லை. அதன் ஓட்டு சதவிகிதம் 12 என்ற அளவில் தான் உள்ளது. |
சுயேட்சை |
3 |
3% ஓட்டு என்ற நிலையில் சுயேட்சை உள்ளது. |
டெல்லி
மாநகராட்சி முடிவுகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்:
டெல்லி
மாநகராட்சி தேர்தலில் கடந்த காலங்களை காட்டிலும் ஆம் ஆத்மி கணிசமான இடங்களை
பிடித்துள்ளது. அதேநேரத்தில் இம்முறை பாரதிய ஜனதா குறைவான இடங்களை பிடித்துள்ளது.
ஆத்மியின்
வாக்குப் பங்கு 2017
எம்சிடில் 26%
இருந்தது இந்தத் தேர்தலில் 42%
உயர்ந்துள்ளது ஒரு பெரும் சாதனையாகும். அத்துடன் கடந்த தேர்தலில் 272
இடங்களில் வெறும் 48 இடங்களை
மட்டுமே வென்ற ஆம் ஆத்மி கட்சி இந்தத் தேர்தலில் 250 இடங்களில் 134 இடங்களை வென்றுள்ளனர்.
இருப்பினும், 2017 இல் 272 வார்டுகளில் 181 ஆக இருந்த
பாஜகவின் எண்ணிக்கை 250
வார்டுகளில் 104
ஆகக் குறைந்திருந்தாலும், அதன்
வாக்கு சதவீதம் 2017
இல் 36%
ஆக இருந்தது இந்த ஆண்டு 39%
ஆக உயர்ந்துள்ளது.
தேர்தலுக்குப் பிறகு
நடத்தப்படும் கருத்துக்கணிப்புக்கள் டெல்லி மாநகரத் தேர்தலில் பிஜேபி படு தோல்வி என்று
சொன்னது பொய்த்துப் போய் விட்டது. அனால் குஜராத் தேர்தல் கணிப்பு சரியாகவும், ஹிமாசல் தேர்தல்
கணிப்பு குழப்பமான ஒன்றாகவும் இருந்தது களத்தின் நிலமையைச் சரியாகக் கணித்ததற்கான அடையாளம்
என்று கொள்ளலாம். இந்தியா டுடே ஹிமாசல் பிரதேசத்தில் காங்கிரஸ்
ஆட்சி என்று கணித்தது சரியானதாக இருந்துள்ளது.
ஆக இந்தத் தேர்தல் அனைத்துக் கட்சிகளையும் திருப்திப் படுத்தும் விதமாக ஓட்டர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.
எந்தக் கட்சியும் அதிகமான ஆனந்தம் அடையாமலும், அதே நேரத்தில் எந்த கட்சியும் சோகத்தில் மூழ்கி செயலிழந்து தவிக்காமலும் இருக்கும் அளவில் இந்தத் தேர்தல்கள் அமைந்துள்ளது. அதற்கு ஒட்டு மொத்த ஓட்டர்களுக்கும் பூச்செண்டு கொடுத்து வரும் தேர்தல்களில் தயாள – தாராள மனப்பான்மையைத் தவிர்த்து, தரமான சீர்தூக்கி எதிர்காலத்தை நினைவில் வைத்து தரமாக ஓட்டளிக்க வாய்மை அவர்களை இரு கரம் கூப்பி வேண்டுகிறது.
சத்தியமேவ ஜெயதே !
Comments