ஆருத்ரா தரிசனம் - வெள்ளிக்கிழமை ஜனவரி-7, 2023 (மார்கழி 22)

 


ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும்.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு திருவாதிரை நட்சத்திர நாளில் பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று பெயர். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

ஆருத்ரா வழிபாடு 2022-வது வரவில்லை. அது அடுத்த வருடமான 2023 அன்று ஜனவரி 7-ல் கொண்டாடப்படுகிறது.

திருவாதிரை நட்சத்திரம் ஆரம்பம் – ஜனவரி-5, 2023 (மார்கழி 20) அன்று இரவு 9:26 & திருவாதிரை நட்சத்திரம் முடிவு – ஜனவரி-7, 2023 (மார்கழி 22) அன்று இரவு 11:28 PM.

இந்த வருஷாந்திர விழா எல்லா சிவன் ஸ்தலங்களிலும் கொண்டாடப்படும். இருப்பினும் சிதம்பரம் நடராஜப்பெருமானுக்கு நடைபெறும் ஆருத்திரா தரிசன விழாவும், உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்புடையது. இங்கு உத்திர்கோச மங்கை மங்களநாத ஸ்வாமி கோயில் ஆருத்ரா தரிசனம் பற்றிய விவரம் எழுதப்பட்டுள்ளது.

திரு உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனம் மகத்துவத்திற்கு அங்குள்ள மரகத நடராஜர் சிலை தான் காரணம்.

நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் மிகவும் மென்மையான கல். மத்தளம் முழங்க மரகதம் பொடிபடும் என்று கூறுமளவுக்கு மென் இயல்புடையது. அவ்வளவு மென்மையான மரகதக் கல்லை உளி கொண்டு செதுக்கி 6 அடி உயரத்தில் அற்புதச் சிலையாக உருவானது தான் அந்த உத்திரகோசமங்கை கோயில் மரகத நடராஜர் சிலையாகும்.

 ஒளி மற்றும் ஒலியால் பாதிக்கப்படாமல் இருக்க ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படுகிறது இந்த மரகத நடராஜர் சிலை. நித்ய அபிஷேகங்கள்கூட, இந்தச் சிலைக்குப் பதிலாக உள்ள உள்ளங்கை அளவு மரகத லிங்கத்திற்குத்தான் நடைபெறும்.

ஆண்டில் ஒருநாள், அதுவும் சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே மரகத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் முழுவதும் சந்தனக்காப்பு இல்லாமல் மரதகத் திருமேனியுடன் நடராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதைக் காணவே நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு குவிகிறார்கள்.

இந்த மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படும். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடராஜரின் மேல் பூசப்பட்ட சந்தனக் காப்பு களையப்பட்டு பக்தர்களின் பார்வைக்காகவும் , வழிபடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்.

மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த மிகமிகப் பழமையான ஆலயம்.

வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் சிவன் கிட்டப் பிரார்த்திர்கிறோம்.



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017