மூன்றாவது முறையாக கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டைனா
அரபு நாடான கத்தாரில் நடந்து முடிந்த 32 நாடுகள் கலந்து கொண்ட 22ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் போட்டி இட, அதில் இரு அணிகளும் 3 கோல்கள் என்ற அளவில் சமநிலையில் இருந்தன. ஆகையால் பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை வென்றது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3ஆவது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று இருந்தது. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் கனவு நனவானது.
118-ஆவது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து அர்ஜென்டினா வீரர் மோன்டியல்
பந்தை கையால் தடுத்ததால் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் 23 வயதான
எம்பாப்பே கோல் போட்டு, ‘ஹாட்ரிக்’ கோல் என்ற மகத்தான சாதனையையும்
எம்பாப்பே படைத்துள்ளார்.
அர்ஜென்டினா வென்றது கோப்பையை – பிரான்ஸ்
Comments