பாரதீய யுவ சக்தி டிரஸ்ட்

வாய்மைக்கு கட்டுரைகள் அனுப்பி வலுசேர்க்கும் என் இனிய எஸ் . ஷங்கர் என்னை 16- ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை தொடர்பு கொண்டு – ‘ ஐயா , வாய்மை ஆசிரியர் அவர்களே ! இன்னும் சற்று நேரத்தில் நியூஸ் 7 தமிழ் சேனலில் ஆர்வியின் மகள் லட்சுமியின் பேட்டி ஒளிபரப்பப் போகிறது . லட்சுமி முன்னாள் ஜனாதிபதி ஆர் . வெங்கடராமனின் புத்திரி என்ற உறவுக்குமேல் அவர் தமது லாப நோக்கில்லாமல் நடத்தும் பாரதீய யுவ சக்தி டிரஸ்ட் மூலம் பல தொழில்கள் தொடங்க பலருக்கும் வழிகாட்டியும் , வங்கியில் கடன் பெறவும் உதவி செய்தும் தமது தனித் தன்மையையும் , திறமையையும் வெளிப்படுத்தி அதற்கு பல பாராட்டுக்களும் , புகழும் பெற்றிருக்கிறார் . அந்தப் பேட்டியைக் கேளும் – வாய்மையில் அதைப் பற்றிய செய்தியை வெளியிடவும் ’ என்று அன்புக் கட்டளை இட்டதை நான் சிரமேற்கொண்டு அந்தப் பேட்டியைக் கேட்டேன் . எஸ் . ஷங்கருக்கு லட்சுமி அத்தை மகள் . அது மட்டும் அன்று . அவர் லூகாஸ் டிவிஎஸ் என்ற பெரும் உற்பத்தித் தொழிற்சாலையில் உற்பத்திக்கு அவசியமான உபரிப் பாகங்களை சிறு தொழில் செய்வோரிடம் தரம் – விலை...