அணிமாறி முதலவர் பதவி சுகம் காணும் அரசியல் பச்சோந்தி நிதிஷ் குமார்

பீஹார் மாகாணத்தின் கருப்பு தினம் – 10 – 08 – 2022 – ஏனென்றால் அன்று தான் தன் பதவியையும் , தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து – குறிப்பாக பிஜேபியின் உறவை உதறித் தள்ளி , ‘ ஊழல் கிருமிகள்’ என்று லல்லு – தேசஸ்வி பிரசாத் யாதவ் ஆகியவர்களை ஊழல்வாதிகளாக வெளிப்படையாக குற்றம் சாட்டியதுடன் , சிபிஐ பாட்னா ஓட்டலில் லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது “லல்லு – மனைவி ராப்ரி தேவி – இரு மகன்கள் தேசஸ்வி & தேஸ் பிரதாப் (இருவரும் நிதிஷ் அரசில் மந்திரிகளாக இருக்கும் தருணத்தில்) ரயில்வே ஹோட்டல் ஒதிக்கீட்டில் லஞ்சமாக பாட்னாவின் முக்கியமான இடத்தில் உள்ள மூன்று ஏக்கர் நிலம் மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிய ஒரு நிறுவனத்தில் லல்லு மற்றும் மனைவி – மகன்கள் பங்குதாரர்கள்” என்று பகிரங்கமாக அறிக்கையே விட்ட மிஸ்டர் கிளீன் நிதிஷ் தானே ஊழல் கிருமி என்று பட்டம் சூட்டிய லல்லுவின் இளைய மகனுடன் இணைந்து நிதீஷ் மீண்டும் 8- வது முறையாக பீஹார் முதல் மந்திரியாகவும் , தேசஸ்வி துணை முதல் மந்திரியாகவும் அந்த ஆகஸ்ட் 10- ல் பதவி ஏற்றுள்ளனர். 19 – 10 – 1994 அன்று நிதிஷ் குமார் – பீஹாரை லல்லுவிடமிருந்து காப்பாற்றும் கொள்கையுடன் சாமதா என்ற க...