கடன்பட்ட பொருளாதார சிக்கலால் கலவரத் தீயில் பற்றி எரியும் இலங்கை

அனுமன் வாலில் இலங்கை அரசன் ராவணன் தீயை வைத்து தண்டனை கொடுப்பதாக நினைத்துச் செய்தது இலங்கையே தீயில் எரியும் நிலை ஏற்பட்டது என்பது தான் ராமாயணம் சொல்லும் செய்தி. அந்த ராமாயண கால ராவணன் போல் கடந்தகால பல இலங்கை அரசுகள் அபரிமிதமாக கடன் வாங்கி – கடனின் முதல் – வட்டி ஆகியவைகளைக் கட்டவும் மேலும் கடன் வாங்கி அந்தக் கடன் தீயில் திவாலாகும் நிலைக்கு இலங்கையை தள்ளி விட்ட அவலம் தான் இன்றைய நிலையாகும். 1965- ம் ஆம் ஆண்டிலிருந்தே சர்வதேச நாணய நிதியம் ( International Monetary Fund) ஸ்ரீ லங்கை அரசுக்கு 16 தடவை நிதி உதவி செய்துள்ளது. அந்த நிதிகளை அளிக்கும் போதெல்லாம் ஸ்ரீ லங்கை அரசுக்கு ‘ பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்கவும் , நிதிக் கொள்கையை பொருளாதார மேம்பாட்டிற்கு ஏற்ப விதிவகுக்கவும் , அரசு வழங்கும் உணவு மான்யத்தைக் கட்டுப்படுத்தவும் , ஸ்ரீலங்கா நாணய மதிப்பைக் குறைத்து அதன் மூலம் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தவும் ’ என்று அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் $78.70 கோடி அளவில் கொரானாவின் பாதிப்பிலிருந்து மீளமட்டும் தனியாக சென்ற ஆகஸ்ட் மாதத்தில் கடன் வாங்கி உள்ளது ஸ்ரீலங்கா அரசு. 2022 வருடத்தில் இலங்கை...