காவித் தாமரை மீண்டும் ஆட்சி – மஞ்சள் துடைப்பம் பஞ்சாபில் ஆட்சி

 



   




பாஜக உபி – 273 உத்திரகாண்ட் – 47  மணிபூர் – 32  கோவா – 20 பஞ்சாப் – 2

என்று மொத்தம் உள்ள 690 சட்ட சபை உறுப்பினர்களில் பாஜக வென்றது 374 சட்டமன்ற உறுப்பினர்கள். இது 54% வெற்றியாகும்.

பஞ்சாபில் பாஜக வெறும் 2 இடங்களைப் பெற்றும் 690-ல் பாதியான 345-இடங்களுக்கும் மேலாக 29 இடங்கள் அதிகமாக வென்றது குறிப்பிடத் தக்கது.

அதுவும் 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளதை அந்தக் கட்சியின் ஒரு பெரும் ஆளுமையான வலுவான கட்சியாக நிலைநிறுத்தி உள்ளதைக் காட்டுகிறது. அதிலும் உத்திரப்பிரதேசத்தில் கடந்த 37 ஆண்டுகளில் ஆட்சி பீடத்தில் உள்ள கட்சி இரண்டாம் முறை ஜெயித்து சரித்திரம் படைத்துள்ளது.

 


பாஜக 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜக 312 இடங்களையும்இரண்டாவதாக வந்த கட்சி சமாஜ்வாதி கட்சி வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.  ஆனால் இந்த தேர்தலில் பாஜக 49 இடங்களை இழந்து, 273 இடங்களில் ஜெயித்துள்ளது. ஆனால் பாஜக பெற்ற ஓட்டு சதவீதம் 2017 பெற்ற 41.3% விட அதிகமாக 44% பெற்றுள்ளது. ஆகையால் 49 தொகுதிகள் இழந்தாலும் அதற்கு வலி நிவாரணமாக இந்த ஓட்டு சதவிகிதம் கிடைத்துள்ளதை பாஜக பெருமையுடன் கொண்டாடலாம்.

அதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சி கடந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில் தற்போது 125 இடங்களை கைப்பற்றி - கடந்த தேர்தலில் கிடைத்த எண்ணிக்கையை விட சுமார் 70 தொகுதிகள் அதிகமாகும்ஒரு பலம் வாய்ந்த எதிர்கட்சியாக செயல்படும் என்று எதிர்பார்க்கலாம். அதன் ஓட்டு சத விகிதமும் சென்ற தேர்தலில் கிடைத்த 24.3% என்பது இந்த தேர்தலில் 36.5% என்று 12.2% உயர்ந்துள்ளது. இதற்கு அதன் தலைவர் அகிலேஷின் பிரசார யுத்தியைத் தான் குறிப்பிட வேண்டும்.

ஆனால் பிரியங்கா தலைமையில் காங்கிரஸ்மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. அவைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக ஆகிவிடும் என்று தான் கணிக்கத் தோன்றுகிறது.

உ.பி.யில் சுமார் 34 ஆண்டுகள் ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சி 2017-ல் 7 ஜெயித்தது. ஆனால் இந்த 2022 ஆண்டுத் தேர்தலில் பிரியங்கா தலைமையில் தேர்தல் பிரசாரம் செய்து, காங்கிரஸ் 7 லிருந்து 2 ஆக குறுகி விட்டது.

இது பிரியங்காவிற்கு நேரடியான தோல்வி என்பது தான் சரியான கணிப்பாகும். ஏனென்றால், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகக் கட்சியில் நேரடியாகக் களமிறங்கி பிரியங்காவிடம்   பிரச்சாரப் பொறுப்பு முழுவதும் ஒப்படைக்கப்பட்டு அவரும் பாஜவுக்கு எதிராக உ.பி.யில் பல போராட்டங்கள் நடத்தினார்.

அடுத்து, பெண்களை மட்டும் குறிவைத்து  அவர்களில் 40% பேருக்குப் போட்டியிட வாய்ப்பளித்தார். உ.பி.யில் பாலியில்ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தின் 5 பெண்களையும் வேட்பாளராக்கினார். இவர்களில் ஒருவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.

தேர்தல் அறிக்கையில் பெண்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். முதல்வர் யோகிக்கு இணையாகச் சுமார் 200 பிரச்சாரக் கூட்டங்களில் பிரியங்கா மட்டுமே பேசினார். ராகுலோ அமேதிவாராணாசி என்ற இரண்டு தொகுதியில் மட்டுமே பிரசாரம் செய்தார்.

மாயாவதியின் கட்சியோ 19 இடங்களில் 2017 வென்றது இப்போது 1 இடத்தில் தான் வென்றுள்ளது என்பது மிகவும் கேவலமான தோல்வியாகும்.

எஸ்.பி. - 64, பி.எஸ்.பி. - 88, காங்கிரஸ் 75 என்று முஸ்லிம்களை வேட்பாளர்களை களத்தில் நிற்க வைத்தனர்.

முடிவில், சமாஜ்வாதி கூட்டணியில் 34 முஸ்லிம்களுக்கு எம்.எல்.ஏ.க்களாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முக்கியத் தலைவரான ஆஸம் கானும், நாஹீத் ஹசனும் சிறையிலிருந்தே வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ.க 376 இடங்களிலும், நிசாத் கட்சி 15 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) 12 இடங்களிலும் தேர்தலைச் சந்தித்துள்ளது. இந்தக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யாநாத் அறிவிக்கப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி 403 இடங்களிலும் தனித்துத் தேர்தலைச் சந்தித்திருக்கிறது.

சமாஜ்வாடி கட்சிக் கூட்டணியில், சமாஜ்வாடி உட்பட மொத்தம் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளது.

 


மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி 2-ம் இடத்தில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளிலும், ஷிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்ற தேர்தலில் 20 தொகுதிகளில் வென்ற மஞ்சள் துடைப்பக் கட்சி இந்த தேர்தலில் 92 தொகுதிகளில் வென்று சரித்திரம் படைத்துள்ளது. அதன் ஓட்டு சதவிகிதமும் 18.3%-லிருந்து 42% என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் 2017 பெற்ற 77 சீட்டுகள் இந்தத் தேர்தலில் 18 சீட்டுகள் என்ற அளவில் ஓட்டு சதவிகிதமும் 23% என்ற அளவில் சென்ற தேர்தலை ஒப்பிடும் போது 15.5% ஓட்டு சதவிகிதமும் இழந்த நிலையில் காங்கிரஸ் உள்ளது. இந்தப் படு தோல்விக்கு முழுப்பொறுப்பும் அம்மாஅண்ணாதங்கை மூன்று பேர்களையுமே சாறும். நவ்ஜோத் சிங் சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவாராக்கியது, காங்கிரஸ் பஞ்சாப் முதல் மந்திரியான அமரிந்தர் சிங்கை பதவி விலகச் சொல்ல அவர் பதவி விலகி தனிக் கட்சிபாஜாகவுடன் தேர்தல் உடன்படிக்கை என்று செயல்பட வைத்து, சரண்ஜித் சிங் சன்னியை ஒரு தலித் தலைவர் என்று பஞ்சாப் முதல் அமைச்சராக ஆக்கியதுஅதை சித்து எதிர்த்து பிறகு சமாதானம் என்ற கூத்துக்கள் அனைத்தும் மஞ்சள் கட்சியான ஆம் ஆத்மிக்கு மிகவும் உதவியாக இருந்து அவர்களின் வெற்றி வாய்ப்பை ஊர்ஜிதம் செய்து, அவர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறவும் காங்கிரஸ் உதவியது.

இரண்டு தொகுதியில் போட்டி இட்ட சன்னி, ஒரு தொகுதியில் போட்டி இட்ட சித்துஅமரிந்தர் சிங் ஆகியவர்களும் தோல்வியைத் தழுவினர் என்பது காங்கிரஸின் முட்டாள் தனமான நடவடிக்கைகளை எடுத்த சோனியா-ராஹுல்-பிர்யங்கா ஆகியவர்களை காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கும் தைரியம் இல்லை. ஏனென்றால் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பக் கட்சியாகி இப்போது அது எதிர்கட்சி என்ற பெருமையையும் இழக்கும் நிலை நீடிக்கிறது

டெல்லிக்குப் பிறகு அதே போல் எதிர்கட்சிகளை எல்லாம் துவம்சம் செய்து பஞ்சாபிலும் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி வென்றது என்பது சாதாரணமான வெற்றி இல்லை. அது காங்கிரசை அகற்றி அந்த இடத்தை வரும் தேர்தல்களில் பிடிக்கும் என்று தான் படுகிறது. இது நாட்டுக்கு நல்லதா என்பதை அவர்கள் பஞ்சாபில் ஆட்சி செய்வதைப் பொறுத்துத்தான் கணிக்க முடியும். அவர்கள் நல் ஆட்சி செய்வார்கள் என்று நம்புவோமாக.



உத்தரகாண்டில் பாஜக சட்டசபை தேர்தலில் மொத்தம் 70 தொகுதிகளில் 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், மற்றவை இரு இடங்களிலும் வென்றுள்ளனர். இதனால் அங்கும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

உத்திரகாண்ட் மாநிலம் 2000 வருடம் தான் உருவானது. இதுவரை நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் இரண்டாம் முறை ஜெயித்து ஆட்சியைக் கைப்பற்றியது கிடையாது. ஆனால் இந்த தேர்தலில் பாஜக தன் ஆட்சியை இரண்டாம் முறை தக்க வைத்து சரித்திரம் படைத்துள்ளது. ஆனால், ஆட்சி செய்த முதல்வர் புஷ்கர் சிங் டாமி காத்திமா தொகுதியில் தோற்று விட்டார். அதே போல் முன்னாள் காங்கிரஸ் முதல் மந்திரியான ஹாரிஷ் ராவட் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

உத்திரகாண்டைதெய்வ பூமிஎன்றும், ‘வீர பூமிஎன்றும் சொல்வார்கள். அதற்கு ஏற்ப பாஜகவின் தேசியம்ஆன்மீகம், மாநில வளர்ச்சி, மோடியின் மேல் உள்ள பாசம் நம்பிக்கை ஆகியவைகள் தான் இந்த வெற்றியின் ஆதார சுருதி.

மேலும் மத்தியிலும்மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியான இரட்டை எஜ்ஜின்என்ற பாஜகவின் பிரசாரம் உத்திரகாண்ட் மக்களிடம் ஆதரவைப் பெற்றதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

சென்ற தேர்தலை விட பாஜக 9 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ளது. அதே போல் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும் 8 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ளது. (பாஜகவின் ஓட் ஷேர் – 44.3% - காங்கிரசின் ஓட் ஷேர் – 37.9%)

மணிப்பூர் மாநிலம் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 7 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 5 இடங்களிலும், குகி மக்கள் கூட்டணி 2 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் ஐக்கிய ஜனதா தளம் பீஹாரில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சி.

சென்ற தேர்தலோடு ஒப்பிடும் போது பாஜக 21-லிருந்து 32-க்கும், காங்கிரஸ் 28-லிருந்து 5-க்கும் வெற்றி பெற்றிருப்பதால், இது பாஜகவிற்கு ஒரு பெரும் சாதனையாகும்


கோவா தேர்தல் கோவா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 20 இடங்களில் வென்றுள்ளது. அடுத்தப்படியாக காங்கிரஸ் 11 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்க் கட்சியாக அமர்ந்துள்ளது. பாஜக ஓட் ஷேர் – 33.3% & காங்கிரஸ் ஓட் ஷேர் – 25.3%.

அடுத்ததாக ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் தல 2 இரண்டு இடங்களிலும், கோவா பார்வர்ட் கட்சி, புரட்சிகர கோன்ஸ் கட்சி தல ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அடுத்ததாக சுயேட்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் பாஜகவுக்கு 3 சுயேட்சைகள் ஆதரவு அளித்துள்ளதன் மூலம் பாஜக அங்கு ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

சுயேட்சையாக போட்டி இட்ட பாஜக கோவா முதல் அமைச்சர் மனோகர் பரிக்கரின் மகன் தோல்வி அடைந்துள்ளார். அவர் கேட்ட தொகுதியை பாஜக கொடுக்காத காரணத்தால், பாஜகவை விட்டு விலகிச் சென்று தேர்தலில் நின்று தோற்று விட்டார்.

கோவாவில் ஹிந்துக்கள் – 65%, கிருஸ்துவர்கள் – 25%, முஸ்லீம்கள் – 10% என்ற அளவில் உள்ளனர்.

பாஜகவின் ஓட்டு –  ஹிந்துக்கள் – 44 % , கிருஸ்துவர்கள் – 13%, முஸ்லீம்கள் – 17%.

காங்கிரஸ் ஓடுஹிந்துக்கள் – 19%, கிருஸ்துவர்கள் – 35%, முஸ்லீம்கள் – 45%.

ஆகையால் பாஜகவின் வெற்றிக்குப் பின் கோவா ஹிந்துக்களின் ஓட்டுதான் முக்கிய அம்சமாக இருக்கிறது. அனைத்து மக்களுக்கும் பாஜக என்ற பிரசாரம் மற்ற மதத்தினர் இன்னமும் நம்பத் தயாராக இல்லை. ஆகையால் ஹிந்துக்கள் ஓட்டு வங்கியாக மாற வேண்டிய தருணம் வந்து விட்டது.

அது தான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உதவும்.

 

இந்தத் தேர்தல் பாஜகவுக்கு ஒரு பெரிய சரித்திர வெற்றியாகும். சென்ற ஐந்து வருடங்களாக ஆட்சி செய்த கட்சியையே மீண்டும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய வைத்துள்ளனர். இது உபி, உத்திரகாண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இப்படி மீண்டும் அதே கட்சி ஆட்சியை அமைப்பது அபூர்வ நிகழ்வாகும்.

அதே போல் சமீபத்தில் தோன்றிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் 117 இடங்களில் 92 இடங்களைப் பெற்று முதன் முதலில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பதும் சரித்திரம் படைத்த நிகழ்வாகும்.

அந்த ஐந்து மாநில அரசுகளும் மக்கள் சேவையை வெகு சிறப்பாகச் செய்து அந்தந்த மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்தி, ஊழலற்றநேர்மையானமக்களின் நலனில் அக்கரை கொண்ட அரசாக செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஆண்டவன் அருளால் மக்கள் சுபீக்ஷமாக இருக்க ஆட்சியில் உள்ளவர்கள் பாடுபடுவார்கள் என்று நம்புகிறோம்.

வாழ்க ஜனநாயகம். வாழ்க பாரதம்.



 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017