ஹோலி பண்டிகை என்பது ஒரு இந்து சமய விழாவாகும். பொதுவாக இந்தப் பண்டிகை வட இந்தியாவில்
அதிகமாகக் கொண்டாடப்பட்டாலும், இப்போது இந்தியா முழுவதும் பரவலாகக்
கொண்டாடப்படுகிறது. இந்த விழா வசந்த காலத்தில் 2 நாள்கள் கொண்டாடப்படுகிறதுஹோலி பண்டிகையின் முதல் நாளில் ஹோலிகா தஹான்
அல்லது சோட்டி ஹோலி கொண்டாடப் படுகிறது.
இரண்டாவது நாள் அன்று துலண்டி / ரங்காலி ஹோலி விழா கொண்டாடப் படுகிறது.
பகவான் கிருஷ்ணா் மற்றும் ராதை ஆகியோாின் அன்பை
மக்கள் இரண்டாம் நாள் கொண்டாடுகின்றனா்.
பங்குனி மாதத்தில் வரும் பௌா்ணமி நாள்
அன்று ஹோலி கொண்டாடப்படுகிறது. இது ஒரு வசந்த கால விழா என்றும் அழைக்கப்படுகிறது.
ஏனெனில் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
ஹோலி பண்டிகை
வண்ணங்களின் விழா என்றும் அழைக்கப்படுகிறது.
அன்று மக்கள் ஒருவருக்கு ஒருவா் பல வண்ணப்
பொடிகளை பூசியும், ஒருவா் மீது ஒருவர் வண்ணங்கள் கலந்த தண்ணீரை பீச்சியும் மகிழ்வா். ஹோலி பண்டிகையில் மிகவும் சுவையான குஜியா என்ற உணவையும், பாங் என்ற பானத்தையும் சமைத்து ஒருவருக்கு
ஒருவா் பகிா்ந்து உண்டு மகிழ்வா்.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாளில் கொண்டாடப்படும் ஹோலிகா தஹான் அன்று மக்கள் ஒன்று சோ்ந்து நெருப்பை மூட்டி மகிழ்ச்சி அடைவா். இந்த ஆண்டு
மாா்ச் மாதம் 17 அன்று ஹோலிகா தஹான் விழாவும்,
மறுநாள் வண்ணங்களின் விழாவான ஹோலியும் கொண்டாடப்படும். இந்தியாவின்
ஒரு சில பகுதிகளில் ஹோலி பண்டிகையானது தல் ஜத்ரா அல்லது தல் பூா்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது.
ஹோலிகா தஹான் விழாவின் புராண வரலாறு:
இரணியகசிபு என்ற ஒரு அரக்க அரசன் மனிதா்களாலோ
அல்லது விலங்குகளாலோ கொல்லப்பட முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தவனாக இருந்தான். அதனால், நாளுக்கு நாள் அவனுடைய
ஆணவமும், திமிரும், அடாவடியான
செயல்களும் அதிகாித்துக் கொண்டே இருந்தன.
உலகில் வாழும் மக்கள்
அனைவரும் மகா விஷ்ணுவை விட்டுவிட்டு தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று
ஆணையிட்டான். ஆனால் அவனுடைய சொந்த மகனான பிரஹலாதா தனது தந்தையின் தவறான கொடிய ஆணையை மறுத்துவிட்டு மகா விஷ்ணுவின் மீது மட்டும் பக்தி வைத்திருந்தான். அதனால் கோபம்
அடைந்த இரணியகசிபு, தனது சகோதாி ஹோலிகா என்ற அரக்கியின் உதவியுடன் தனது
மகனை கொல்ல முடிவெடுத்தான்.
ஹோலிகாவிடம் ஒரு சால்வை இருந்தது. அந்த
சால்வை அவளை
நெருப்பிலிருந்து பாதுகாக்கும். அவள் பிரகலாதனை தந்திரத்தால் கவா்ந்து,
அவனைத் தன்னோடு பெருநெருப்பில் வந்து அமருமாறு பணித்தாள்.
இருவரும் மூட்டிய பெருநெருப்பிற்குள் இறங்கினா். அவள் மட்டும் தனது
சால்வையால் தன்னை மூடிக் கொண்டாள்.
நெப்பானது அதிக
வெப்பத்துடன் எாியத் தொடங்கியது. அப்போது மகா விஷ்ணுவின்
அருளால்,
ஹோலிகாவைச் சுற்றி இருந்த சால்வை தானாகவே பிாிந்து,
அவளை விட்டுப் பறந்து வந்து பிரகலாதனைச் சுற்றிக் கொண்டது.
அதனால் பிரகலாதா விஷ்ணுவின் அருளால் நெருப்பில் எாியாமல்
பாதுகாக்கப்பட்டான். ஆனால்
ஹோலிகா நெருப்பில் எாிந்து கருகி
சாம்பலானாள்.
இதை நினைவு கூறும் விதமாகத் தான் ஹோலிகா தஹான் என்ற
நெருப்பு மூட்டிக் கொண்டாடும் சடங்கு நடைபெறுகிறது.
ஹோலிகா என்ற ஹிரண்ய கசுபுவின் சகோதரியான அரக்கியின்
மரணத்தை நினைவு கூா்ந்து, ஹோலிகா தஹான்
சடங்குகள்
செய்யப்படும். அதன் மூலமாக தீமையின் மீது நன்மையானது வெற்றி
பெற்றதை
நினைத்து மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவா்.
ஹோலிகா தஹானில் விறகுக் கட்டைகளை அடுக்கி
அவற்றை மௌலி
என்று அழைக்கப்படும் வெள்ளை நூலினால் மூன்று முறை அல்லது 7
முறை கட்டுவா்.
பின் அந்த விறகு கட்டின் மீது புனித நீரை ஊற்றி,
குங்குமத்தை இட்டு, அவற்றின் மீது
மலா்களைத் தூவி வணங்குவா். இந்த
சடங்கு முடிந்தவுடன் அந்த விறகுகள் மீது நெருப்பு
மூட்டி அந்த
நெருப்பைச் சுற்றி ஆடிப்பாடி தீமை அழிந்து, நன்மை வெற்றி பெற்றதைக்
கொண்டாடுவர்.
வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்.
தீமை அழிந்து, நன்மை நிலைபெற்ற இந்த புண்ணிய தினத்தில்
அனைவருக்கும் ஹோலி போல் வண்ணமயமான ஆனந்த வாழ்வு என்றும்
நிலைபெற விஷ்ணுவைப் பிரார்த்திக்கிறோம்.
Comments